South Archives - Oruvan.com

தென்கொரியாவில் ஜனாதிபதித் தேர்தல்
தென்கொரியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று இடம்பெற்று வருகிறது.

52 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் சுமார் 44.4 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள கொரியர்கள் ஏற்கனவே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துவிட்டனர்.

எதிர்க்கட்சியின் லீ ஜே-மியுங் முன்னணியில் உள்ளதாகவும் யூனின் அமைச்சரவையின் முன்னாள் உறுப்பினரான ஆளும் கட்சியின் கிம் மூன்-சூ,  அவரை விட பின்தங்கியுள்ளதாகவும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தென்கொரியாவில் இராணுவ அவசர நிலையை செயற்படுத்தியதற்காக அப்போதைய ஜனாதிபதி யூன் சுக்-இயோலைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

இதனையடுத்து அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

தென்கொரிய அரசியலமைப்பின்படி ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டால் அடுத்த 02 மாதங்களுக்குள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும்.

இதனைத் தொடர்ந்து ஜூன் 03 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என இடைக்கால ஜனாதிபதி ஹான் டக்-சூ அறிவித்தார்.

The post தென்கொரியாவில் ஜனாதிபதித் தேர்தல் appeared first on Oruvan.com.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் எண்டனி பிளிங்கன் இந்த வார இறுதியில் தென் கொரியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அதன்படி நாளை அவர் தென்கொரிய தலைநகர் சியோலுக்கு செல்லவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் வோஷிங்டன்-சியோல் உறவுகளின் ஸ்திரத்தன்மை குறித்து கவனம் செலுத்தப்படும் என

எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன்பின்னர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டோக்கியோ மற்றும் பாரிஸ் செல்லவுள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சராக எண்டனி பிளிங்கனின் இறுதி வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

The post அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தென்கொரியா மற்றும்  ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் appeared first on Oruvan.com.

மூன்றாவது முறையாக புலனாய்வாளர்களின் அழைப்பை நிராகரித்த யூன் சுக் யோல்
தென் கொரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோல் இன்று ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதிலும் முன்னிலைவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களில் அவர் மூன்றாவது முறையாக புலனாய்வாளர்களின் அழைப்பை மீறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

யூனை விசாரிக்கும் புலனாய்வாளர்கள் அவரை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு (GMT 0100)

விசாரணைக்கு முன்னிலையாகுமாறு உத்தரவிட்ட போதிலும் அவர் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

முன்னாள் தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் கடந்த மூன்றாம் திகதி (03.12.2024) அந்நாட்டில் அவசரகால இராணுவ ஆட்சியை அமுல்படுத்தியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

வடகொரியாவின் கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல்களிலிருந்து தென்கொரியாவை பாதுகாக்கும் நோக்கிலும் உள்நாட்டில்

தேச விரோத சக்திகளை ஒழிக்கும் நோக்கிலும் இராணுவ ஆட்சியை அமுல்படுத்தியாக அவர் விளக்கமளித்திருந்தார்.

இதன்பின்னர் இந்நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என தென் கொரிய

அரசியல்வாதிகள் இராணுவச் சட்டப் பிரகடனத்தை விமர்சித்தனர். ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலருமே இதற்கு

எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர் அந்த சட்டத்தை மீளப்பெற்ற போதிலும் அவர் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் உட்பட பலரும் வலியுறுத்தினர்.

மேலும் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தையும் எதிர்கட்சிகள் தாக்கல் செய்திருந்தன. ஆனால் அந்த தீர்மானத்தின்

மீதான வாக்கெடுப்பை ஆளுங்கட்சியினர் புறக்கணித்ததால், தீர்மானம் தோல்வயடைந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக அவருக்கு எதிரான பதவிநீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதில் மொத்தமுள்ள 300 எம்.பி.க்களில் 204 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து யூன் சுக்-இயோல் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அவர் மூன்றாவது முறையாக புலனாய்வாளர்களின் அழைப்பை மீறியுள்ளதால் பிடியாணை பிறபபிப்பது குறித்து நீதிமன்றத்திடம் கோருவது ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மூன்றாவது முறையாக புலனாய்வாளர்களின் அழைப்பை நிராகரித்த யூன் சுக் யோல் appeared first on Oruvan.com.

142 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைதான பெண்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 142 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கானாவிலிருந்து தென்னாபிரிக்க கடவுச்சீட்டுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (29.12) அதிகாலை கட்டார் எயார்வைஸ் விமானத்தில்​ அந்த பெண் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்தப் பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் சுமார் 4,068 கிராம் நிறையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவால் 41 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

The post 142 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைதான பெண் appeared first on Oruvan.com.

தென்கொரியாவின் புதிய இடைக்கால ஜனாதிபதி
தென்கொரிய இடைக்கால ஜனாதிபதி ஹான் டக்-சூ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பதவிக்கு நிதியமைச்சர் சோய் சாங்-மோக் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்கொரிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதிக்கத்தால் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஹான் டக்-சூ இன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

தென் கொரியா ஜனநாயக நாடாக மாறிய பின்னர் பதில் ஜனாதிபதி ஒருவர் பதவி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதன்முறை.

முன்னாள் தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் ஐப் போன்றே ஹானின் பதவி நீக்கம் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட வேண்டும், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து தீர்ப்பளிக்க 180 நாட்கள் உள்ளது.

இந்நிலையில் தேசிய சட்டமன்றத்தின் முடிவை மதிக்கிறேன் ஹான் வெள்ளிக்கிழமை கூறினார், அரசியலமைப்பு நீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்ச்சையை ஏற்படுத்தாது தனது பணியை இடைநிறுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post தென்கொரியாவின் புதிய இடைக்கால ஜனாதிபதி appeared first on Oruvan.com.

தற்போதைய தென்கொரிய ஜனாதிபதியும் பதவி நீக்கம்
தென்கொரிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதிக்கத்தால் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஹான் டக்-சூ இன்று பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 151 வாக்குகள் மாத்திரமே தேவையாக காணப்பட்ட நிலையில் 192 சட்டமன்ற

உறுப்பினர்கள் பதவி நீக்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஆளுங்கட்சி உறுப்பினர் சிலர் வாக்கெடுப்பை புறக்கணித்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் கடந்த மூன்றாம் திகதி (03.12.2024) அந்நாட்டில் அவசரகால இராணுவ ஆட்சியை அமுல்படுத்தியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

வடகொரியாவின் கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல்களிலிருந்து தென்கொரியாவை பாதுகாக்கும் நோக்கிலும் உள்நாட்டில் தேச விரோத சக்திகளை ஒழிக்கும் நோக்கிலும் இராணுவ ஆட்சியை அமுல்படுத்தியாக அவர் விளக்கமளித்திருந்தார்.

இதன்பின்னர் இந்நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என தென் கொரிய அரசியல்வாதிகள் இராணுவச் சட்டப் பிரகடனத்தை விமர்சித்தனர். ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலருமே இதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர் அந்த சட்டத்தை மீளப்பெற்ற போதிலும் அவர் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் உட்பட பலரும் வலியுறுத்தினர்.

மேலும் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தையும் எதிர்கட்சிகள் தாக்கல் செய்திருந்தன. ஆனால் அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஆளுங்கட்சியினர் புறக்கணித்ததால், தீர்மானம் தோல்வயடைந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக அவருக்கு எதிரான பதவிநீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதில் மொத்தமுள்ள 300 எம்.பி.க்களில் 204 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து யூன் சுக்-இயோல் பதவிநீக்கம் செய்யப்பட்டார். இடைக்கால ஜனாதிபதியாக பிரதமர் ஹான் டக்-சூவுக்கு நியமிக்கப்பட்டார்.

அவர் தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதிகார துஷ்பிரயோகம் என ஆளும் கட்சியினர் விமர்சிப்பதுடன் சபாநாயகரை பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

The post தற்போதைய தென்கொரிய ஜனாதிபதியும் பதவி நீக்கம் appeared first on Oruvan.com.

மன்னிப்புக் கோரிய தென் கொரிய ஜனாதிபதி
இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தியமைக்கு தென்கொரிய ஜனாதிபதி மன்னிப்புக் கோரினார்.

மீண்டும் அதனைச் செய்யப்போவதில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் கடந்த செவ்வாய்க்கிழமை (03.12.2024) அந்நாட்டில் அவசரகால இராணுவ ஆட்சியை அமுல்படுத்தியதால் பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

வடகொரியாவின் கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல்களிலிருந்து தென்கொரியாவை பாதுகாக்கும் நோக்கிலும் உள்நாட்டில் தேச விரோத சக்திகளை ஒழிக்கும் நோக்கிலும் இராணுவ ஆட்சியை அமுல்படுத்தியாக அவர் விளக்கமளித்திருந்தார்.

இதன்பின்னர் இந்நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என தென் கொரிய அரசியல்வாதிகள் இராணுவச் சட்டப் பிரகடனத்தை விமர்சித்தனர். ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலருமே இதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளன. அதுமட்டுமின்றி மக்கள் தொடர்ந்து ஜனாதிபதி யூன் சுக் யோல் பதவி விலக வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மக்கள் பிரதிநிதிகளும் இந்த உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி வாக்களித்தனர். சட்டத்தைத் திரும்பப் பெற தேசிய சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனாலும் தென்கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தன. இந்நிலையில் இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று சனிக்கிழமை

நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரிய ஜனாதிபதி பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் 3 இல் இரண்டு பெரும்பான்மை ஆதரவும், குறைந்தபட்சம் 6 அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதிகளின் ஆதரவும் தேவைப்படும்.

The post மன்னிப்புக் கோரிய தென் கொரிய ஜனாதிபதி appeared first on Oruvan.com.