soon? Archives - Oruvan.com

சாரதி உரிம அட்டைகளின் பற்றாக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும் – அமைச்சர் பிமல்
சாரதி உரிம அட்டைகளின் பற்றாக்குறை எதிர்வரும் 18 ஆம் திகதிக்குள் நிவர்த்தி செய்யப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“மோட்டர் போக்குவரத்துத் துறைக்குத் தெரியாமல் சுமார் 28 ஆண்டுகளாக அதே குழு சாரதி உரிமத் தொழிலில் ஈடுபட்டுள்ளது.

இதன் காரணமாக நிதி துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் பெரிளவில் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இராணுவத்தைப் பயன்படுத்தி இதற்கு தீர்வு காண முயன்றார்.

ஆனால் அது இன்னும் பலனளிக்கவில்லை. எனவே, இதனை நிறுத்தி புதிய முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் தீர்வு காண

நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

சாரதி உரிமம் அச்சிடும் இயந்திரங்களை நிறுவும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

அரசாங்கத்திடம் தற்போது 800,000 சாரதி உரிம அட்டைகள் உள்ளது. ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளோம்.

தற்போதுள்ள அட்டைகள் முடிவடைவதற்கு முன்னர் மேலும் 01 மில்லியன் அட்டைகளை முன்பதிவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

புதிய அட்டைகள் மோட்டார் போக்குவரத்துத் துறை மூலம் அரசாங்கத்தால் அச்சிடப்படும் , இதன் மூலம் அச்சிடும் போது அட்டையொன்றுக்கு 167 ரூபா சேமிக்க முடியும்” என்றார்.

The post சாரதி உரிம அட்டைகளின் பற்றாக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும் – அமைச்சர் பிமல் appeared first on Oruvan.com.

பொலிஸ் அதிகாரிகளை கையாளும் அதிகாரம் பொலிஸ் மாஅதிபருக்கு – விரைவில் அதிவிசேட வர்த்தமானி
இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளை கையாளும் அதிகாரத்தை பொலிஸ் மாஅதிபருக்கு வழங்கும் அதிவிசேட வர்த்தமானியை அடுத்த வாரத்திற்குள் வௌியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இடமாற்றம், பதவியுயர்வு உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளை கையாளும் அதிகாரம் தற்போது தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post பொலிஸ் அதிகாரிகளை கையாளும் அதிகாரம் பொலிஸ் மாஅதிபருக்கு – விரைவில் அதிவிசேட வர்த்தமானி appeared first on Oruvan.com.

உக்ரைன் ஜனாதிபதி விரைவில் இந்தியாவுக்கு பயணம்
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக

இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார்.

உக்ரைன்- ரஷ்யா போர் கடந்த 03 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் குழந்தைகள் பெண்கள் அதிகளவில் உயிரிழந்து வருகின்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்பார்க்கிறார்

கடந்த சில தினங்களுக்கு முன்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில், உக்ரைன் போர் குறித்து ரஷ்ய ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி கூறும்போது, மோதல்களுக்கு தூதரக ரீதியில் பேச்சுவாரத்தை மூலம் அமைதி வழியில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது என தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் கருத்து தெரிவிக்கையில்,

“உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியா வர இருக்கிறார். ஜெலென்ஸ்கியின் பயணத் திகதியை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, பிரதமர் மோடியை சந்திப்பார். அப்போது போர் நிலவரம் குறித்தும் ஆலோசனை நடத்துவார்கள். உக்ரைன் ஜனாதிபதியின் இந்திய பயணம் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும்.” என்றார்.

The post உக்ரைன் ஜனாதிபதி விரைவில் இந்தியாவுக்கு பயணம் appeared first on Oruvan.com.

விரைவில் திரிபோஷா Cup Cake அறிமுகம்
நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை இலாபகரமான நிறுவனங்களாக மாற்றுவதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட நிறுவன மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், இலங்கை திரிபோஷா லிமிடெட் நிறுவனம் மீண்டும் தமது செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது.

இதன்படி, தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இயந்திரங்கள் மீண்டும் 24 மணி நேரமும் இயங்கத் தொடங்கியுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் புதிய தலைவர் அமல் நிரோஷன அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

நாடு முழுவதும் திரிபோஷாவை விநியோகிக்க தமது அமைப்பு தயாராக இருக்கின்றது.

கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு திரிபோஷாவை மீண்டும் வழங்க முடியும்.

இதேவேளை, திரிபோஷா நிறுவனம் பல்வேறு சுவைகளில் சத்தான மற்றும் சுவையான திரிபோஷா கப்கேக் (Cup Cake) தயாரிப்பை அறிமுகப்படுத்த உள்ளது.

சொக்லேட், வாழைப்பழம், வெண்ணிலா, ஸ்ட்ராபெரி மற்றும் மாம்பழ சுவைகளில் திரிபோஷா Cup Cake கள் தயாரிக்கப்படவுள்ளன.

நிறுவனத்தின் ஜா-எல தலைமை அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள விற்பனை நிலையத்தில் நுகர்வோர் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்” என தலைவர் அமல் நிரோஷன அத்தநாயக்க மேலும் தெரிவித்தார்.

The post விரைவில் திரிபோஷா Cup Cake அறிமுகம் appeared first on Oruvan.com.

விரைவில் கைது செய்யப்படவுள்ள பிரபல ஐந்து அரசியல்வாதிகள்?
பல்வேறு ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய பிரபல அரசியல்வாதியொருவரின் மனைவி உள்ளிட்ட ஐந்து அரசியல்வாதிகள் இவ்வாண்டின் ஆரம்பத்தில் கைது செய்யப்படவுள்ளதை அரசாங்கத் தகவல்கள் தெரிவிப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் பிரதான சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்படவுள்ள பிரபல ஐந்து அரசியல்வாதிகளுள் வெளிநாட்டு வேலைக்காக அனுப்புவதாகக் கூறி பொதுமக்களிடம் பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் அரசியல்வாதியொருவரும், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், சுற்றுலா சபையின் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் சிலரும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.

இதேவேளை, நாட்டின் தேசிய சொத்தை கொள்ளையடித்த வழக்குகளில் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட பிரபல அதிகாரிகளுக்கு மற்றும் பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு குழுவுக்கு எதிராகவும் குற்றப்புலனாய்வு திணைக்களமும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் உடனடியாக வழக்குத் தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படவுள்ள பிரபல அரசியல்வாதியின் மனைவி தொடர்பில் மைத்திரி-ரணில் அரசாங்கத்தின் காலப்பகுதியில் வெவ்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டாலும், சரியான சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்த அனைத்து விசாரணைகளையும் சரியான முறையில் நடத்திய பின்னர் அனைத்து சந்தேகநபர்களுக்கு எதிராகவும் விரைவான மற்றும் முறையான ரீதியில் சட்டத்தை அமுல்படுத்துவதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறித்த சிங்கள நாளிதழிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

The post விரைவில் கைது செய்யப்படவுள்ள பிரபல ஐந்து அரசியல்வாதிகள்? appeared first on Oruvan.com.