Sir Keir Starmer Archives - Oruvan.com

மாண்டல்சன் தகுதி சரிபார்ப்பு முடிவை அதிகாரிகள் வேண்டுமென்றே மறைத்தனர் – பிரதமர் ஸ்டார்மர் குற்றச்சாட்டு
அமெரிக்கத் தூதர் பதவிக்கான பாதுகாப்புச் சோதனையில் லார்ட் மாண்டல்சன் ஆரம்பத்தில் தோல்வியடைந்தார் என்ற உண்மையை, வெளியுறவு அலுவலக அதிகாரிகள் வேண்டுமென்றே மறைத்துவிட்டதாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அறிக்கை அளித்த பிரதமர், தனக்கு இது தெரிந்திருந்தால் குறித்த நியமனத்தை மேற்கொண்டிருக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத் தகுதி சரிபார்ப்பு முகமையின் பரிந்துரைக்கு எதிராகச் செயல்பட்டு, லார்ட் மாண்டல்சனை அப்பதவிக்குத் தகுதிப்படுத்தியதை கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் அறிந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விடயத்தில் பிரதமர் பொறுப்பேற்பதற்குப் பதிலாக தனது ஊழியர்களையும் அதிகாரிகளையும் கைவிட்டுவிட்டுள்ளதாக கன்சர்வேடிவ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

எனவே, இந்த விடயத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கெமி பேடனோச் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நியமனத்தின் போது முழுமையான உரிய நடைமுறை பின்பற்றப்பட்டதாக  நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியதன் மூலம், பிரதமர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்திவிட்டதாகவும் கெமி பேடனோச் குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், தான் நாடாளுமனற சபையை தவறாக வழிநடத்தவில்லை என்று பிரதமர் வலியுறுத்தினார்.

லார்ட் மாண்டல்சனின் தேர்வு செயல்முறை குறித்த மறுஆய்வைத் தொடங்கியபோதுகூட தனக்குத் தெரிவிக்கப்படவில்லை  என்று பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post மாண்டல்சன் தகுதி சரிபார்ப்பு முடிவை அதிகாரிகள் வேண்டுமென்றே மறைத்தனர் – பிரதமர் ஸ்டார்மர் குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

பிரித்தானியாவின் பாரம்பரிய இரு கட்சி அரசியல் முடிவுக்கு வருகின்றதா?
உள்ளாட்சி தேர்தல்களின் பின்னர் பிரித்தானியாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் சமீபத்திய இடைத்தேர்தல்களுக்குப் பிறகு, ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் களம் வேகமாக மாறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் தேர்தல் நடவடிக்கைகள் உச்சத்தில் இருக்க, மறுபுறம் எதிர்பாராத முடிவுகள் முக்கிய கட்சிகளுக்கு அபாய மணியை எழுப்பியுள்ளதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ரிபோர்ம் யுகே கட்சி, இங்கிலாந்தில் உள்ள பல கவுன்சில்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது.

அத்துடன், இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று இரண்டு பகுதிகளில் இரண்டாவது மேயரையும் உறுதி செய்துள்ளது.

இந்த நிகழ்வானது, பிரித்தானியாவின் பாரம்பரிய இரு கட்சி அரசியலுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக விவரிக்கப்பட்டுள்ளது.

அரசியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, கன்சர்வேடிவ் கட்சி, தொழிலாளர் கட்சி மற்றும் லிபரல் டெமோக்ராட்ஸ் கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது.

இந்நிலையில், பசுமைக் கட்சியும் பல துறைகளில் தனது நிலையை வலுப்படுத்த முயன்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சமீபத்திய முடிவுகள் ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்டார். அதே நேரத்தில் ரிபோர்ம் யுகே கட்சியின் தலைவர் நைஜல் ஃபாரேஜ் இது இரு கட்சி அரசியலின் முடிவின் அறிகுறி என்று தெரிவித்துள்ளார்.

பல பகுதிகளில், குறிப்பாக வடமேற்கு இங்கிலாந்தில், அரசியல் சூழல் நிச்சயமற்றதாக உள்ளது. அங்கு கடந்த காலங்களில் வெவ்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந்துள்ளன.

இந்நிலையில், இந்த முறையும் பெரிய எதிர்பாராத திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

The post பிரித்தானியாவின் பாரம்பரிய இரு கட்சி அரசியல் முடிவுக்கு வருகின்றதா? appeared first on Oruvan.com.

மக்கள் மத்தியில் ஆதரவை இழந்த பிரித்தானிய பிரதமர்
பிரித்தானியாவில் பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளதாக புதிய கருத்து கணிப்பொன்று தெரிவித்துள்ளது.

தி இன்டிபென்டன்ட் நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பில், 2024 ஆம் ஆண்டில் தொழிற்கட்சிக்கு வாக்களித்தவர்களில் 38 சதவீதமானோர் அடுத்த வருடம் வேறு ஒரு தலைவருக்கு வாக்களிக்கவுள்ளதாக சமிக்ஞை செய்துள்ளனர்.

தொழிற்கட்சி வாக்காளர்கள் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) வரலாற்றில் மிக மோசமான தொழிற்கட்சி பிரதமராக மதிப்பிட்டுள்ளதாகவும், அடுத்ததாக டோனி பிளேர் (Tony Blair) மோசமான அரசியல் தலைவராக இடம்பிடித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை கிரேட் மென்செஸ்டர் மேயரான ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) மக்களின் அடுத்த தெரிவாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

19 சதவீதமான தொழிற்கட்சி ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

The post மக்கள் மத்தியில் ஆதரவை இழந்த பிரித்தானிய பிரதமர் appeared first on Oruvan.com.