Shops Archives - Oruvan.com

அரிசி, குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடைகள் சுற்றிவளைப்பு
அரிசி மற்றும் குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிலையங்களை முற்றுகையிட நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 24 ஆம் திகதி கண்டி, திருகோணமலை, காலி, தங்காலை மற்றும் ஹப்புத்தளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளை அதிக விலைக்கு விற்ற வர்த்தகர்கள் பலர் அடையாளம் காணப்பட்டனர்.

நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், திருகோணமலை, காலி, தங்காலை மற்றும் கிராந்துருகோட்டை வர்த்தகர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

அதேவேளை, ஹப்புத்தளையில் அரிசியை அதிக விலைக்கு விற்ற வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடிநீர் போத்தல்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக ஹப்புத்தளை வர்த்தகர் ஒருவருக்கு 10 இலட்சம் ரூபாவும், அனுராதபுரத்தில் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபாவும் அபராதமாக விதிக்கப்பட்டது.

நுகர்வோரை ஏமாற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக இவ்வாறான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரித்துள்ளது.

The post அரிசி, குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடைகள் சுற்றிவளைப்பு appeared first on Oruvan.com.

மதுபானசாலைகளுக்கு பூட்டு
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையால் அங்கீகரிக்கப்பட்ட உரிமங்களைக் கொண்ட மதுபான விற்பனை நிலையங்களைத் தவிர,

அனைத்து சில்லறை மதுபான விற்பனை நிலையங்களும் எதிர்வரும் ஆறாம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் காரணமாக மதுபானக் கடைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மதுபானசாலைகளுக்கு பூட்டு appeared first on Oruvan.com.

மருத்துவ “பட்டக் கடை“களுக்கு ​​எதிராக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டம்
சுகாதாரம் தொடர்பான பட்டங்களை வழங்கும் ஒழுங்குபடுத்தப்படாத நிறுவனங்களை இல்லாதொழிக்குமாறு கோரி சுகாதார அறிவியல் பட்டதாரிகள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

கொழும்பில் நாளை மறுதினம் வியாழக்கிழமை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த “பட்டக் கடைகள்” தகுதியற்ற பட்டதாரிகளை உருவாக்குவதன் மூலம் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்துவதாகவும், நாட்டின் சுகாதார அமைப்பின் தரத்திற்கு தீங்கு விளைவிப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற நிறுவனங்கள் அரச பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டங்களின் நம்பகத்தன்மையை குறைமதிப்பிற்குட்படுத்துவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

சுகாதாரத் துறையில் ஒழுங்குபடுத்தப்படாத தனியார் பட்டப்படிப்பு திட்டங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்துவதே இந்த போராட்டத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் அண்மையில் பட்டம் பெற்றவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post மருத்துவ “பட்டக் கடை“களுக்கு ​​எதிராக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டம் appeared first on Oruvan.com.