Shiranthi Rajapaksa Archives - Oruvan.com

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும் ஷிராந்தி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச இன்று (03) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

சிரிலிய சவிய அறக்கட்டளையின் நிதி விவகாரங்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அறக்கட்டளைக்கு கிடைத்த சில மானியங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் மூலம் செய்யப்பட்ட நிதி பரிவர்த்தனைகள் குறித்து அவரிடம் குறிப்பாக விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 27 ஆம் திகதி இந்த விசாரணைகள் தொடர்பாக முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், தனிப்பட்ட காரணங்களால் தான் முன்னிலையாக முடியவில்லை என்று அவர தெரிவித்திருந்தார்.

அதன்படி, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்குமாறு ஷிரந்தி ராஜபக்ச கோரியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, இன்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், அவர் நாட்டில் இல்லாத காரணத்தினால் பிறிதொரு திகதியை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

The post நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும் ஷிராந்தி appeared first on Oruvan.com.

ஷிராந்தி விரைவில் கைதாகவுள்ளதாக தகவல்!! மல்வத்தே மகாநாயக்கர் தேரரின் உதவியை நாடினார் மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கலக்கமடைந்துள்ள மகிந்த ராஜபக்ச, சமீபத்தில் மல்வத்தே மகாநாயக்கரைச் சந்தித்து, அத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டாம் என்று ஜனாதிபதி அனுர திசாநாயக்கவிடம் வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதற்கு பதிலளித்த மல்வத்தே மகாநாயக்கர் திப்போட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர், “கடந்த காலத்தில் ஊழல் செய்பவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய நாங்கள் எப்படி ஜனாதிபதி அனுரவிடம் அப்படிச் சொல்ல முடியும்?” என்று கேட்டதாகவும் கூறப்படுகின்றது.

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பாக நடைபெற்று வரும் புதிய விசாரணைகளின் அடிப்படையில், ஷிரந்தி ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படும் சாத்தியதம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷிரந்தியின் சகோதரரும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்கவை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அண்மையில் கைது செய்திருந்தது.

இந்நிலையில், மீபத்தில் மல்வத்தே மகாநாயக்கரைச் சந்தித்த மகிந்த ராஜக்ச, தனது மனைவியை கைது செய்யும் வகையிலான நடவடிக்கையை எடுக்க வேண்டாம் என்று ஜனாதிபதி அனுர திசாநாயக்கவிடம் வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மகாநாயக்க தேரர் அந்தக் கோரிக்கையை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.

“கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அனைத்து தலைவர்களிடமும் ஊழல்வாதிகளுக்கு உரிய தண்டனை வழங்குமாறு நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகிறோம். ஆனால் எத்தனை வாக்குறுதிகள் வழங்கப்பட்டாலும், யாரும் அதைச் செய்யவில்லை.

தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அவர் ஆட்சிக்கு வந்தால், இந்த நாட்டின் பொது நிதியைக் கொள்ளையடித்த ஊழல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்றும் நாங்கள் கூறியுள்ளோம்.

அவர் ஜனாதிபதியான பிறகும், அவரைச் சந்திக்கும் போதெல்லாம் இந்த விடயத்தை நாங்கள் வலியுறுத்தினோம். இந்நிலையில், மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் ஷிரந்தி ராஜபக்க்ஷவை கைது செய்ய வேண்டாம் என எப்படி கூற முடியும்?” என மல்வத்த மகா தேரர் முன்னாள் ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பியதாக தென்னிலங்கை ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன

The post ஷிராந்தி விரைவில் கைதாகவுள்ளதாக தகவல்!! மல்வத்தே மகாநாயக்கர் தேரரின் உதவியை நாடினார் மகிந்த appeared first on Oruvan.com.