Shanakiyan Rasamanickam Archives - Oruvan.com

ஜனாதிபதியுடன் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், சிவநேசன், சி. சிறிதரன் மற்றும் அந்தக் கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மாகாண சபைத் தேர்தல் மற்றும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

திருகோணமலை பிரதேசத்தில் இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அதனை தடுப்பதற்காக இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவது ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கப்பட்டதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்

The post ஜனாதிபதியுடன் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு appeared first on Oruvan.com.

ராஜபக்ச குடும்பத்தினரை மீளவும் ஆட்சிக்கு கொண்டுவரும் நோக்கம் தங்களுக்கு இல்லை – இலங்கை தமிழசு கட்சி திட்டவட்டம்
தற்போதைய அரசாங்கதை தோற்கடித்து, ராஜபக்ச குடும்பத்தினரை அல்லது ரணிலை மீளவும் ஆட்சிக்கு கொண்டுவரும் நோக்கம் தங்களுக்கு இல்லை என இலங்கை தமிழசு கட்சி தெரிவித்துள்ளது.

அந்தக்  கட்சியின்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்படி, மக்களின் பிரச்சிகைகளை தீர்த்து வைக்க வேண்டும் எனவும் இதுவே எமது கோரிக்கையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட வட்டாரங்களுக்கு நேற்று மாலை விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

உகண்டாவில் ராஜபக்ச குடும்பத்தினர் கொள்ளையடித்த 18 பில்லியன் டொலர்கள் உள்ளதாக சொன்னார்கள்.அவற்றில் ஒரு வீதத்தினை இந்த நாட்டுக்கு கொண்டுவந்தாலும் பல பிரச்சினைகளை தீர்க்கமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் டினேஸ் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது சீலாமுனை பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

தற்போது மழைகாலம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

The post ராஜபக்ச குடும்பத்தினரை மீளவும் ஆட்சிக்கு கொண்டுவரும் நோக்கம் தங்களுக்கு இல்லை – இலங்கை தமிழசு கட்சி திட்டவட்டம் appeared first on Oruvan.com.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றது – சாணக்கியன் எம்.பி
தமிழ் மக்களின் பிரச்சினைகள் இருந்ததை விட மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ளது. இந்த ஒருவருட காலப்பகுதிக்குள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு என்னவென்று பார்த்தால் ஒன்றுமில்லை.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்குச் சென்று சில அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்கள், கொழும்பில் அவசர அவசரமாக சில அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்கள்.

ஒருவருட ஆட்சியில் என்ன செய்தீர்கள் என யாரும் கேட்டால் அவமானப்படாமல் இருக்க அவசர அவசரமாக இந்த அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுகள் இதுவரைக்கு காணப்படவில்லை.

இராணுவ மூகாம்களை விடுவிப்பத்தாக சொன்னார்கள், வன இலாகா துறையினர் வைத்திருக்கும் காணிகளை விடுவிப்பதாக சொன்னார்கள் ஆனால் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை.

தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் இந்த அரசாங்கத்தின் தீர்வை ஏற்றுக்கொள்ள முடியாது.

யாழ்ப்பாணத்தில் செம்மணியில் மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த விடயத்திற்கு இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைகள் இருந்ததை விட மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றன.

ஏனெனில் கடந்த கால அரசாங்கள் நாங்கள் செய்ய மாட்டோம் என வெளிப்படையாகச் சொன்னார்கள்.

ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் மீது எங்களுக்கே அதிக கரிசனை இருப்பதாக சொல்லிச் சொல்லியே ஏமாற்றுகின்னர்” என்றார்.

The post தமிழ் மக்களின் பிரச்சினைகள் மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றது – சாணக்கியன் எம்.பி appeared first on Oruvan.com.

சாணக்கியன் எம்.பியின் கருத்துக்கள் பச்சைப் பொய் – இனியபாரதி
நாடாளுமன்றத்தில் அண்மைக்காலமாக சாணக்கியன் எம்.பி தெரிவித்தவை யாவும் அப்பட்டமான பொய்கள்.

எனவே அவருக்கு முதுகெலும்பு இருந்தால் நேரடியாக இது போன்று செய்தியாளர் சந்திப்பில் வந்து உண்மையை நிரூபித்துக் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இனியபாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமார் தெரிவித்துள்ளார்.

சாணக்கியன் எம்.பி தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அம்பாறை மாவட்ட ஊடக மையத்தில் நேற்று (06) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தன்னை குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெரிவித்தது அப்பட்டமான பொய். முதுகெலும்பு இருந்தால் நேரடியாக வந்து இவ்வாறு ஊடக மாநாட்டில் அவ் விடயத்தை நிரூபிக்கட்டும் .

நான் அவருக்கு பகிரங்கமாக சவால் விடுகிறேன். சாணக்கியன் எம்.பி நாடாளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்த கருத்தை மறுக்கின்றேன்.

அவருக்கு நாடாளுமன்ற சிறப்பு உரிமை இருக்கிறது என்பதற்காக மற்றவரின் சுய கௌரவத்தை உரிமையை இழுக்கும் உரிமை அவருக்கு இல்லை. பிள்ளையானின் சகா நான் என குறிப்பிட்டு இருக்கிறார்.

எனக்கும் அவருக்கும் இடையே முரண்பாடுகள் தான் அதிகம். இவ்வாறு இருக்க எவ்வாறு என்னை தொடர்புப் படுத்தி பேச முடியும். அது மாத்திரமல்ல நான் கொழும்பு ஹில்டன் ஹோட்டலுக்கு சென்றதாக பச்சைப் பொய் சொல்லியிருக்கிறார்.

கடந்த இரண்டு வாரங்களில் நான் கொழும்பு செல்லவே இல்லை . எனது சாரதி சுதா என்று சொல்கின்றார். முடிந்தால் அந்த சுதாவை காட்டுமாறு சவால் விடுகின்றேன்.

எனவே தான் நாடாளுமன்றத்தில் பச்சைப் பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்ற அவரின் இந்த சித்து விளையாட்டுகளை இனியாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை வழங்கவுள்ளேன். என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமாக இருந்தால் அவர் இவ்வாறான ஊடக மாநாட்டை நடத்தி பகிரங்கமாக நேருக்கு நேர் கூறட்டும் என சவால் விடுகின்றேன் என்றார்.

(பாறுக் ஷிஹான்)

The post சாணக்கியன் எம்.பியின் கருத்துக்கள் பச்சைப் பொய் – இனியபாரதி appeared first on Oruvan.com.

எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – சாணக்கியன் எம்.பி ஆதங்கம்
பொறுப்பு கூறல் என்ற விடயத்தில் புதிய அரசாங்கத்தின் முன்மொழிவுகள் எதனையும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் முன்வைக்கவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இதனை தெரிவித்துள்ளார்.

“வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் பொறுப்புக் கூறல் விடயத்தில் மிகவும் கரிசனையுடன் இருக்கின்றனர். கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். ஆனால் கடந்த கால அரசாங்கங்களை போன்று புதிய அரசாங்கமும் அதேவேளையைத் தான் செய்யப் போகின்றது என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது.

ஜெனிவா அமர்வில் காணாமல் போனோர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசியிருந்தாலும், அவை அனைத்தும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட பொறிமுறையாகும்.

வடக்கு மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளனர். தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியல் அமைப்பு பற்றி தெளிவாக கூறியுள்ளீர்கள். ஆனால் புதிய அரசியல் அமைப்பு பற்றி இன்று வரை ஒருவார்த்தைக் கூட பேசவில்லை.

புதிய அரசியல் அமைப்பில் அதிகார பகிர்வு தொடர்பில் என்ன கூறப் போகின்றீர்கள் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். பொறுப்பு கூறல் விடயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் பொறுப்பு கூறல் என்பது மிக பிரதானமான விடயம். இந்த விடயம் தொடர்பில் எந்தவொரு சாதகமான பதிலையும் வெளிவிவகார அமைச்சர் சொல்லவில்லை.

இதற்கான பதிலடியை எதிர்வரும் தேர்தலில் மக்கள் உங்களுக்கு தருவார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – சாணக்கியன் எம்.பி ஆதங்கம் appeared first on Oruvan.com.