Seven Archives - Oruvan.com

40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் எழுவர் கைது
பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹபராதுவ மற்றும் பத்தேகம பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 5.6 கிலோகிராம் நிறையுடைய ஹஷிஷ் போதைப்பொருளே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திட்டமிட்ட குற்றவாளியான மிதிகம ருவானின்’நண்பர் ஒருவர் உட்பட எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post 40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் எழுவர் கைது appeared first on Oruvan.com.

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் விபத்து – எழுவர் காயம்
ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் எழுவர் காயமடைந்துள்ளனர்.

நோர்வூட் நியூவெலிகம பகுதியில் இன்று (12) காலை இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று எதிர் திசையில் பயணித்த காருடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆறு பாலர் பாடசாலை மாணவர்களும் ஒரு ஆசிரியரும் காயமடைந்துள்ளர்.

அவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரை ஓட்டிச் சென்ற பெண் சந்தேகத்தின் பேரில் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏழு பேரில், ஒரு பிள்ளையை தவிர ஏனைய அறுவரும் சிகிச்சை பெற்று வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் விபத்து – எழுவர் காயம் appeared first on Oruvan.com.

ஜம்மு – காஷ்மீரில் மண்சரிவு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுவர் உயிரிழப்பு
இந்தியாவின் ஜம்மு – காஷ்மீரின் ரியாசியில் மண்சரிவு காரணமாக வீடு இடிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுவர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

மண்சரிவு மற்றும் பலத்தமழை காரணமாக ஜம்மு – காஷ்மீரில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு – காஷ்மீரின் ரியாசியில் ஏற்பட்ட மேகவெடிப்பை தொடர்ந்து இன்று சனிக்கிழமை அதிகாலை 03 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டது.

இதன்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுவர் மண்ணுக்குள் புதைந்தனர். ஐந்து குழந்தைகள் உட்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பலத்த மழை காரணமக மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ஜம்மு – காஷ்மீரில் மண்சரிவு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான எழுவருக்கு பிணை
திருகோணமலை தீத்தான்தட்டி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 7 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தீத்தான்தட்டி பகுதியில் விதிகளை மீறி சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் சேருவில பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை (12) கைது செய்யப்பட்டனர்.

மணல் அகழ்வு அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 05 உழவு இயந்திரங்களும் மணலும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் நாளை திங்கட்கிழமை (14) மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

The post சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான எழுவருக்கு பிணை appeared first on Oruvan.com.

அம்பாறை – பெரியநீலாவணை பொலிஸ் உத்தியோகத்தர் மீதான தாக்குதல் சம்பவம் – எழுவர் கைது
அம்பாறை – பெரியநீலாவணை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரியநீலாவணை – பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணைகளை நேற்றைய தினம் மேற்கொள்ளும்போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பணிமனை முன்னெடுத்து வருகிறது.

The post அம்பாறை – பெரியநீலாவணை பொலிஸ் உத்தியோகத்தர் மீதான தாக்குதல் சம்பவம் – எழுவர் கைது appeared first on Oruvan.com.

வயோதிபப் பெண் படுகொலை சம்பவம் – சந்தேகநபர்கள் எழுவர் கைது
அநுராதபுரம் மாவட்டம் பதவியா பகுதியில் கடந்த வாரம் வயோதிபப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு பலவெவ பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவர் வீட்டிலிருந்த போது மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த அடையாளந்தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்தது.

புல்மோடை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பதவியா பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது எஹெதுகஸ்வெவ, கிரிப்பன்வெவ மற்றும் பதவியா பிரதேசங்களில் இருந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து T-56 துப்பாக்கி 01 மோட்டார் சைக்கிள் மற்றும் நான்கு கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல பொருட்களையும் பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வயோதிபப் பெண் படுகொலை சம்பவம் – சந்தேகநபர்கள் எழுவர் கைது appeared first on Oruvan.com.