Services Archives - Oruvan.com

இன்றும் விசேட பஸ் சேவைகள்
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக இன்றும் (13) பயணிகளின் தேவைக்கேற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக நாளாந்தம் சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு மேலதிகமாக, கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்வதற்காக 1500 மேலதிக பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக அதன் தலைவர் தெரிவித்தார்.

எனினும், இன்றைய தினம் பயணிகளின் வருகையைப் பொறுத்து தேவையான அளவு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அவர் கூறினார்.

இதேவேளை, நாளை (14) உறவினர் வீடுகளுக்குச் செல்லும் மக்களுக்காக பிராந்திய டிப்போக்கள் ஊடாகத் தேவைக்கேற்ப பஸ்கள் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஞ்சீவ கனகரத்ன மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இன்றும் நாளையும் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நேற்று பிற்பகல் முதல் குறைவாகக் காணப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் அஸங்க சமரசிங்க தெரிவித்தார்.

இருப்பினும், கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் கடுகதி ரயில்கள், தபால் ரயில்கள் மற்றும் நகரங்களுக்கிடையிலான (Intercity) கடுகதி ரயில்கள் அனைத்தும் வழமை போன்று இயங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post இன்றும் விசேட பஸ் சேவைகள் appeared first on Oruvan.com.

மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவைகள்
மலையக ரயில் மார்க்கத்தின் பேராதனைக்கும் கண்டிக்கும் இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

ரயில் கடவையில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாக ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூன்று நாட்களிலும் பேராதனைக்கும் கண்டிக்கும் இடையே டிக்கிரி மெனிக்கே மற்றும் உடரட்ட மெனிகே ஆகிய ரயில்கள் சேவையில் ஈடுபடாது என

தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டிக்கிரி மெனிகே ரயில் நானு ஓயாவிலிருந்து பேராதனை வழியாக கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படும்.

அதே நேரத்தில் உடரட்ட மெனிகே ரயில், கொழும்பு கோட்டையிலிருந்து பேராதனை வழியாக பதுளைக்கு இயக்கப்படும் என்றும்

ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த ரயில்களில் பயணிப்பதற்காக கண்டி ரயில் நிலையத்தில் இருக்கும் பயணிகளுக்காக விசேட பஸ்களில் பேராதனை வரை அவர்களை அழைத்து செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

The post மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவைகள் appeared first on Oruvan.com.

அமெரிக்கா​வுக்​கான பல தபால் சேவையை தற்​காலிக​மாக ரத்து செய்​வ​தாக இந்​தியா அறி​விப்பு
அமெரிக்கா விதித்​துள்ள 50 சதவீத வரி​வி​திப்​பின் காரண​மாக நாளை முதல் அமெரிக்கா​வுக்​கான பல தபால் சேவையை தற்​காலிக​மாக ரத்து செய்​வ​தாக இந்​தியா அறி​வித்​துள்​ளது.

ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதற்கு எதிர்ப்பு தெரி​வித்​து, ஒகஸ்ட் மாதத் தொடக்​கத்​தில் இந்​தி​யா​வுக்கு 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்​தது.

இதுத​விர, தற்​போது தபால் சேவைக்​கான சுங்க கட்​ட​ணத்​தி​லும் அமெரிக்கா மாற்​றம் மேற்கொண்டுள்ளது.

அதாவது இந்​தி​யா​வில் இருந்து வெளி​நாடு​களுக்கு செல்​லும் பொதிகளுக்கு இது​வரை விலக்கு அளிக்​கப்​பட்டு வந்​தது. தற்​போது சுங்​கக்​கட்​ட​ணம் செலுத்த வேண்​டிய நிலை உரு​வாகி உள்​ளது.

அமெரிக்கா விதித்​துள்ள 50 சதவீத வரிவ​ிதிப்பு காரண​மாக இந்​தி​யா​விலிருந்து அமெரிக்கா​வுக்கு தபால்​களை எடுத்​துச் செல்​வ​தில் கட்​ட​ணக் குழப்​பம் ஏற்​பட்​டுள்​ளது.

எந்த அளவுக்கு கட்​ட​ணங்​களை அறிவிடுவது என்​ப​தில் ஏற்​பட்​டுள்ள குழப்​பம் காரணமாக தபால்​களை ஏற்க அமெரிக்கா​வுக்கு விமானங்​களை

இயக்​கும் விமான நிறு​வனங்​கள் மறுத்து வரு​கின்​றன.

இதனையடுத்து ஒகஸ்ட் 25 ஆம் திகதி முதல் அமெரிக்கா​வுக்​கான பெரும்​பாலான தபால் சேவை​களை தற்​காலிக​மாக இந்​தியா நிறுத்​தி​யுள்​ளது.

மேலும் 800 அமெரிக்க டொலர் வரை மதிப்​புள்ள பொருட்​களுக்கு இது​வரை வரி விலக்கு அளிக்​கப்​பட்ட நிலை​யில் தற்போது ரத்து செய்யப்படுவதாக

அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா​வுக்கு அனுப்​பப்​படும் அனைத்து சர்​வ​தேச அஞ்​சல் பொருள்​களும் அவற்​றின் மதிப்​பைப் பொருட்​படுத்​தாமல் சர்​வ​தேச அவசர பொருளா​தார ஆற்​றல் சட்​டத்​தின்​படி சுங்​கக் கட்​ட​ணம் வசூலிக்​கப்​படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் 100 அமெரிக்க டொலர் வரை​யுள்ள பரிசுப் ​பொருள்​களுக்கு மட்​டும் வரி​விலக்கு அளிக்​கப்​படும். ஏனை பொருட்களுக்கு வரியை வசூலித்த பிறகே அஞ்​சல் அனுப்ப வேண்​டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கடிதங்​கள், ஆவணங்​கள் மற்​றும் சுமார் 9,000 ரூபா (100 டாலர்) மதிப்​புள்ள பரிசுப் பொருட்​களைத் தவிர்த்​து, இந்​தி​யா​விலிருந்து அமெரிக்கா​வுக்​கான அனைத்து வகை​யான பார்​சல்​களும் நிறுத்தி வைக்​கப்​படு​கின்​றன.

ஏற்​கனவே பொதிகளை அனுப்ப பதிவு செய்​தவர்​கள், தபால் கட்​ட​ணத்தை திரும்​பப் பெற்​றுக் கொள்​ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்​கை​யாளர்​களுக்கு ஏற்​பட்​டுள்ள இந்த சிரமம் தொடர்பில் தபால் துறை கவலை வெளியிட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா​வுக்​கான முழு சேவை​களை​யும் விரை​வில் மீண்​டும் தொடங்க அனைத்து சாத்​தி​ய​மான நடவடிக்​கைகளும் மேற்​கொள்​ளப்​படும் எனவும் தெரிவிக்​கப் பட்​டுள்​ளது.

இதேவேளை, ஆஸ்​திரி​யா, பிரான்​ஸ், பெல்​ஜி​யம் உள்​ளிட்ட நாடு​களும் அமெரிக்கா​வுக்​கான தபால் பொதி சேவையை தற்​காலிக​மாக நிறுத்​தி​யுள்​ள​தாகத்​ தகவல்​கள்​ வெளி​யாகியுள்​ளன.

The post அமெரிக்கா​வுக்​கான பல தபால் சேவையை தற்​காலிக​மாக ரத்து செய்​வ​தாக இந்​தியா அறி​விப்பு appeared first on Oruvan.com.

பிரதான மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு
பிரதான மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அளுத்கமயிலிருந்து அம்பேபுஸ்ஸ நோக்கிச் சென்ற ரயில் மீரிகம ரயில் நிலையத்திற்கு அருகில், தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளது.

The post பிரதான மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு appeared first on Oruvan.com.

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தம்
தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, ஆணைக்குழுவின் சேவைகள் இன்று திங்கட்கிழமை (07) முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய வாக்காளர் பதிவு தகவல்களைச் சரிபார்த்தல், இணையவழி பதிவு, வாக்காளர் அறிக்கைகளைப் பெறுதல் மற்றும் ஏனைய மாவட்டங்களுடனான அனைத்து இணைவழி சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தம் appeared first on Oruvan.com.

மலையக ரயில் மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு
பதுளை மற்றும் கொழும்பு கோட்டை இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

உடவறை மற்றும் தெமோதர இடையே இன்று காலை ரயில் பாதையில் பாறை வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக

நாவலபிட்டிய ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

நேற்று மாலை பதுளை மற்றும் ஹாலிஎல பகுதிகளில் பெய்த பலத்தமழை காரணமாக, இன்று காலை மண்மேடு சரிந்து ரயில் பாதையில் விழுந்துள்ளது.

இதன் காரணமாக, இன்று காலை 5:45 க்கு பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி புறப்பட்ட உடரட மெனிகே ரயில் ஹாலி எல ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் ரயில்  தெமோதர ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

தற்போது ரயில்வே ஊழியர்கள் பாதையில் உள்ள பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பதுளை மற்றும் கொழும்பு கோட்டை இடையேயான ரயில் சேவைகளில் இன்று முழுவதும் தாமதிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post மலையக ரயில் மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு appeared first on Oruvan.com.

பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்த அரசாங்கம் விசேட கவனம்
நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதற்காக செயற்படுத்தப்படும் திட்டத்தில் பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (27) பிற்பகல் நடைபெற்ற ‘Dream Destination’ 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”சிறிய அரசாங்கங்களுக்கும் தனிப்பட்ட அதிகார வர்க்கத்தினர்களுக்கும் தங்கள் விருப்பப்படி போக்குவரத்து சட்டங்களை செயல்படுத்த அனுமதிக்கப்படாது , வலுவான போக்குவரத்து சட்ட முறையை அறிமுகப்படுத்தி செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமும் சுமார் எட்டு பேர் வீதி விபத்துகளில் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. வலுவான போக்குவரத்து சட்ட கட்டமைப்பின் ஊடாக,வீதி விபத்துகளைத் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலைத் தடுக்கவும், நச்சு வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும், வாகன இறக்குமதிக்காக செலவிடும் அரசாங்கத்தின் பாரிய செலவைக் குறைக்கவும் உதவும்.

இதன்படி, நாட்டின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை மேம்பட்ட, வசதியான மற்றும் திறமையான சேவையாக மாற்றும் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக அரசாங்கம் மேற்கொண்ட முதலீடுகளுக்கு மேலதிகமாக, தனியார் துறைக்கு முதலீட்டு வாய்ப்புகளும் திறக்கப்பட்டுள்ளன.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு நாட்டின் ரயில் நிலையங்களை புதிய தனித்துவத்துடன் முத்திரை பதிக்க அரசாங்கத்துடன் இணையுமாறு தனியார் துறையினரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் ‘Clean Sri Lanka’ திட்டம் ஆகியவை இணைந்து தனியார் துறையின் ஆதரவுடன் 100 ரயில் நிலையங்களை பொது-தனியார் கூட்டுத் திட்டமாக நவீனமயமாக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

விசேட தேவைகள் உள்ள சமூகம் உட்பட அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்யும் சுத்தமான, அழகான ரயில் நிலைய கட்டமைப்பை நாட்டில் உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்” என்றார்.

The post பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்த அரசாங்கம் விசேட கவனம் appeared first on Oruvan.com.

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு
பலான – கடுகண்ணாவ பகுதியின் இடையே உள்ள ரயில் பாதையில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டை -பதுளை ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இன்று (16) அதிகாலை 5.55 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு பயணித்த பொடி மெனிகே ரயில், பலான ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு appeared first on Oruvan.com.

ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து பயணிக்கும் 34 பஸ்கள் போக்குவரத்து சேவையினை முன்னெடுக்கத் தடை
ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து பயணிக்கும் 34 பஸ்கள் போக்குவரத்து சேவையினை முன்னெடுப்பதற்கு நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகனப் பரிசோதகர் தடை விதித்துள்ளார்.

மோட்டார் வாகன பரிசோதகர்கள் மற்றும் ஹட்டன் தலைமையக பொலிஸார் இணைந்து நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே தடை விதிக்கப்பட்டது.

45 பஸ்கள் சோதனைக்குப்படுத்தப்பட்ட நிலையில், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 15 பஸ்களும் 19 தனியார் பஸ்களும் போக்குவரத்து சேவையினை முன்னெடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.

பஸ்களில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமம் மற்றும் வேகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களைக் கருத்திற் கொண்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்டுள்ள பஸ்களில் உள்ள குறைபாடுகளை ஒரு மாதத்திற்குள் நிவர்த்தி செய்யுமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிவர்த்தி செய்யாத பட்சத்தில் குறித்த பஸ்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

The post ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து பயணிக்கும் 34 பஸ்கள் போக்குவரத்து சேவையினை முன்னெடுக்கத் தடை appeared first on Oruvan.com.

மலையக ரயில் சேவைகள் வழமைக்கு
மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் தபால் ரயில் கலபொட ரயில் நிலையம் அருகே தடம்புரண்டதால், மலையக ரயில் பாதையின் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ரயில் சேவை 01 மணியளவில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

The post மலையக ரயில் சேவைகள் வழமைக்கு appeared first on Oruvan.com.