Sergio Gor Archives - Oruvan.com

அமெரிக்க விசேட பிரதிநிதியுடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

மேலும், மத்திய கிழக்கின் போர்ச் சூழல் குறித்த இலங்கையின் நிலைப்பாடு மற்றும் போர்ச் சூழல் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது தூதுக்குழுவினருக்கு விளக்கமளித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோருடன் செர்ஜியோ கோர்டுடன் வருகை தந்துள்ள தூதுக்குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

The post அமெரிக்க விசேட பிரதிநிதியுடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு appeared first on Oruvan.com.

புதுடில்லியில் ஜனாதிபதி பல முக்கிய சந்திப்புகளில் பங்கேற்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, ‘AI Impact 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (18), நாளை (19) மற்றும் நாளை மறுநாள் (20) ஆகிய தினங்களில் பல முக்கிய சந்திப்புகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

அதற்கமைய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோருக்கும் (Sergio Gor) இடையிலான சந்திப்பு இன்று (18) முற்பகல் நடைபெற்றது.

இதேவேளை, AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடெல்லிக்கு வருகை தந்துள்ள அரச தலைவர்களுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கும் விசேட இரவு விருந்து உபசாரத்திலும் ஜனாதிபதி இன்று (18) கலந்துகொள்ளவுள்ளார்.

செயற்கை நுண்ணறிவை (AI) மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அரச தலைவர்கள் மற்றும் உலகின் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்கேற்புடன் இம்மாநாடு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (19) உரையாற்றவுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளதுடன், மாநாட்டில் பங்கேற்க வருகை தந்துள்ள பிரேசில் ஜனாதிபதி லூலா டி சில்வா மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே (Tshering Tobgay) உள்ளிட்ட அரச தலைவர்கள் பலருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்.

The post புதுடில்லியில் ஜனாதிபதி பல முக்கிய சந்திப்புகளில் பங்கேற்பு appeared first on Oruvan.com.

டித்வா புயல் ஏற்படுத்திய சேதம் – ஜனாதிபதி அனுரவுடன் அமெரிக்க சிறப்பு தூதுவர் பேச்சு
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரை தொடர்ந்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க சிறப்புத் தூதரும், வெள்ளை மாளிகையின் ஜனாதிபதி பணியாளர் அலுவலகத்தின் இயக்குநருமான செர்ஜியோ கோர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் பேசியுள்ளார்.

இன்று காலை தொலைபேசி ஊடகா ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை தொடர்புகொண்ட செர்ஜியோ கோர், அமெரிக்கா தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக கூறியுள்ளார்.

இதன்போது பேரிடல் காலத்தில் அமெரிக்கா அளித்த தொடர்ச்சியான ஆதரவிற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கை குறித்த நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பேரிடரில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும்,” பணியகம் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டித்வா புயல் ஏற்படுத்திய சேதம் – ஜனாதிபதி அனுரவுடன் அமெரிக்க சிறப்பு தூதுவர் பேச்சு appeared first on Oruvan.com.