sanakiyan Archives - Oruvan.com

இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளின் விடுவிப்பு தொடர்பில் சாணக்கியன் எம்.பி ஜனாதிபதியிடம் கோரிக்கை
இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளின் விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் கூடியது.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்த கடற்படையின் உதவியைப் பெறுதல், வடக்கு மற்றும் கிழக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பான பிரச்சினைகள் போன்ற பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகளை சாணக்கியன் எம்.பி குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

அதன்படி, நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை ஜனாதிபதி வழங்கியதாக சாணக்கியன் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காயன்கேணி பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு அருகில் இராணுவத்தினர் ஓய்வு விடுதி ஒன்றை நிர்மாணித்துள்ளதோடு, இது தொடர்பில் நாம் வினாவிய போது, அந்த ஒய்வு விடுதியை அகற்ற முடியாது என இராணுவம் அறிவித்ததாக அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முறக்கொட்டாஞ்சேனையில் உள்ள பாடசாலை, பாலயடிவத்தை பிரதேசத்தில் உள்ள வர்த்தக சந்தை, குருக்கள் மடம் பகுதியில் உள்ள பாடசாலை இன்றளவிலும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றது.

தாண்டியடி விசேட அதிரடிப்படை முகாம் மயானம் அமையப்பெற்றுள்ள காணியிலும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் தனியாருக்கு சொந்தமான காணியிலும் அமையப்பெற்றுள்ளது.

வாகரை பிரதேசத்தில் கடல்படையினரினால் கையகப் படுத்தப்பட்டுள்ள காணிகளின் அளவு எவ்வளவு என்பது தொடர்பாகவும் அதில் எவ்வளவு காணி பயன்படுத்தப்படுகின்றது என்பது தொடர்பாகவும் சரியான புாிதல் இல்லை என்பதுடன், வாகரை பிரதேசத்தில் அதிகளவான காணிகள் கடல்படையினருக்கு சொந்தமாக காணப்படுவதால், அந்தக் காணிகளை விடுவிக்க வேண்டும் எனவும் எம்.பி கோரிக்கைகளை முன்வைத்தார்.

இந்தக் காணிகள் தொடர்பான விடயங்கள் விாிவாக ஆராயப்பட வேண்டும் என்பதால் இது தொடர்பான விசேட குழுவொன்றை நியமிக்குமாறு சாணக்கியன் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆலையடி பிரதேசத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையும் இராணுவ முகாமிற்குள் அமமந்து காணப்படுவதுடன், இராணுவ முகாமிற்குள் அமைந்துள்ள சில பாடசாலைகளுக்கு பதிலாக மாற்றுப் பாடசாலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும் அவை கிராமத்திற்கு வெளியில் அமைந்துள்ள காரணத்தினால் பல சிக்கல்களை மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் சந்திக்கின்றனர்.

அனைத்து இராணுவ முகாம்களும் அமைந்துள்ள காணிகள் குறித்து மீளப் பரிசீலனை செய்து அறிக்கை ஒன்றினை வழங்குமாறு அறிவித்துள்ளதாகவும், அந்த அறிக்கை கிடைத்தவுடன் அதன் அடிப்படையில் மீண்டும் கலந்துரையாடல் நடாத்தப்படும் எனவும் எம்.பி குறிப்பிட்டிருந்தார்.

The post இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளின் விடுவிப்பு தொடர்பில் சாணக்கியன் எம்.பி ஜனாதிபதியிடம் கோரிக்கை appeared first on Oruvan.com.

தமிழில் பேசினால் உங்களால் கேட்க முடியாதா? – சபையில் கொந்தளித்த அர்ச்சுனா எம்.பி
நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோரால் இன்று (04) நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் கேள்வி எழுப்பியதையடுத்து அவரது ஒலிவாங்கி இடைநிறுத்தப்பட்டது.

கடந்த 20 ஆம் திகதி, மட்டக்களப்பு ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது, ​​மர்மக் குழு ஒன்று வாள் வெட்டு நடத்தியதில் இருவர் படுகாயமடைந்தனர்.

அதேபோல், நேற்று (03) மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றிற்கு முன்னால் நடந்த வாள் வெட்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.

குறித்த இரு சம்பவங்கள் தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, இராசமாணிக்கம் சாணக்கியன் கருத்து தெரிவிக்க முயன்ற போது, ​​சபாநாயகர் குறுக்கிட்டு, “இது ஒழுங்குப் பிரச்சினை அல்ல, எனவே சபை ஒத்திவைப்பு பிரேரணையின் போது இதனை கொண்டு வரலாம்” என்றார்.

சபாநாயகரின் இந்தக் கருத்தால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதேவேளை,நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் திருகோணமலை வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் நோயாளர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் சபையில் கேள்வி எழுப்ப முற்பட்ட நிலையில் சபாநாயகர் அவருக்கு அனுமதி வழங்க மறுத்தார்.

இதன்போது,  நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா “ நாங்கள் தமிழில் பேசினால் உங்களால் கேட்க முடியாதா? என சபாநாயகரிடம் கோபமாக நடந்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து தனது நடவடிக்கை குறித்து சபாநாயகரிடம் மன்னிப்பும் கோரினார்.

எனினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலையிட்டு நிலையியல் கட்டளைக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் அர்ச்சுனாவுக்கு ஒவ்வொரு நிமிடங்களை பெற்றுக் கொடுக்குமாறு கோரிய நிலையில் அவர்கள் பேச ஒரு நிமிடம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post தமிழில் பேசினால் உங்களால் கேட்க முடியாதா? – சபையில் கொந்தளித்த அர்ச்சுனா எம்.பி appeared first on Oruvan.com.