salt Archives - Oruvan.com

உப்பு விலை குறைப்பு
அயடின் கலந்த லக் உப்பின் விலையைக் லங்கா உப்பு நிறுவனம் குறைத்துள்ளது.

நிறுவனத்தின் தலைவர் இன்று புதன்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனை தெரிவித்தார்.

இதன்படி, 400 கிராம் அயடின் கலந்த உப்பு தூள் பொதியொன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

1 கிலோகிராம் அயடின் கலந்த உப்பு தூள் பொதியொன்றின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த வாரம் முதல் 400 கிராம் உப்பு தூள் பொதியொன்று 100 ரூபாவுக்கும், 1 கிலோகிராம் உப்பு தூள் பொதியொன்று 200 ரூபாவுக்கும், 1 கிலோகிராம் கல் உப்பு தூள் பொதியொன்று 150 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும்

The post உப்பு விலை குறைப்பு appeared first on Oruvan.com.

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உப்பு கொள்கலன்களை மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை
துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 400 உப்பு கொள்கலன்களை மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை சுங்கம் தெரிவிக்கின்றது.

உப்பு இறக்குமதிக்கு அரசாங்கம் வழங்கிய கால அவகாசத்திற்கு பின்னர் இந்த உப்பு கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டதால் அது தடுத்துவைக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

உப்பு இறக்குமதிக்கு கடந்த ஜுன் மாதம் 10ஆம் திகதி வரை அரசாங்கம் காலஅவகாசம் வழங்கியிருந்தது.

இறக்குமதியாளர்கள் தாமதக் கட்டணத்தை செலுத்தி கொள்கலன்களை தொடர்ந்தும் துறைமுகத்தில் வைத்திருப்பதாகவும் சுங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

The post துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உப்பு கொள்கலன்களை மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை appeared first on Oruvan.com.

பலத்த மழை காரணமாக புத்தளத்தில் உப்பு அறுவடை மீண்டும் தோல்வி
பலத்த மழை காரணமாக பதினைந்தாயிரம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு அறுவடை அடித்துச் செல்லப்பட்டதாக புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

தொடர்ச்சியான மழை மற்றும் உப்பு உற்பத்திக்கு போதுமான சூரிய ஒளி இன்மையே நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள உப்பு பற்றாக்குறைக்கு காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் மொத்த உப்பு உற்பத்தியில் புத்தளம் மாவட்டம் சுமார் 60 சதவீதம் பங்களிக்கிறது. மேலும் நல்ல சூரிய ஒளி உள்ள காலங்களில் 100,000 மெட்ரிக் தொன்களுக்கும் அதிகமாக அறுவடை செய்யப்படுவதாக தனியார் மற்றும் அரசு உப்பு உற்பத்தியாளர்களின் தொடர்புடைய துறைகள் தெரிவிக்கின்றன.

தொடர்ச்சியான மழை காரணமாக உப்பு உற்பத்தியாளர்கள் பெரும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதேவேளை, உப்பு இறக்குமதியிலும் தாமதம் ஏற்பட்ட நிலையில் சந்தையில் உப்பு விலையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

இவ்வாறாதொரு நிலையில் நேற்று (17) ஆரம்பமான பலத்த மழை காரணமாக, புத்தளத்தில் உப்பு அறுவடை மீண்டும் தோல்வியடைந்துள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

The post பலத்த மழை காரணமாக புத்தளத்தில் உப்பு அறுவடை மீண்டும் தோல்வி appeared first on Oruvan.com.

மோசமான வானிலை – உப்பு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி
மழையுடன் கூடிய தொடர்ச்சியான மோசமான வானிலை காரணமாக, இந்த ஆண்டு ஒரு கனசதுர உப்பைக் கூட உற்பத்தி செய்ய முடியவில்லை என்று லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தனதிலக தெரிவித்தார்.

இந்த பாதகமான வானிலை ஹம்பாந்தோட்டையை மட்டுமல்ல, அலிமங்கட உட்பட அனைத்து உப்பு உற்பத்தி இடங்களையும் பாதித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு (2024) இந்த நிலைமை மிகவும் மோசமாகியதாகவும் அவர் கூறியுள்ளார்.

லங்கா உப்பு நிறுவனம் கடந்த ஆண்டு 125,000 மெட்ரிக் தொன் உப்பு இருப்பை உற்பத்தி செய்யும் என்று மதிப்பிட்டிருந்தாலும், பாதகமான வானிலை காரணமாக 40,000 மெட்ரிக் தொன் மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது என்றும் தலைவர் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் உப்பு உற்பத்தி தொடங்குவது வழக்கமாக இருந்தாலும், பாதகமான வானிலை அதற்குத் தடையாக இருப்பதாக அவர் கூறினார்.

சந்தையில் உப்புத் துகள்களுக்கு பற்றாக்குறை இருந்தாலும், தூள் உப்பிற்கு பற்றாக்குறை இல்லை என்றும் அவர் கூறினார்.

லங்கா உப்பு நிறுவனம் நேற்று முன்தினம் (14 ஆம் திகதி) லங்கா சதோசாவிற்கு 400 கிராம் தூள் உப்பு ஒரு லட்சம் பொதிகளை வழங்கியதாகவும், நேற்று (15 ஆம் திகதி) மேலும் ஒரு லட்சம் பொதிகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post மோசமான வானிலை – உப்பு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி appeared first on Oruvan.com.

76 ஆண்டுகளில் 60 ரூபா.. ஏழே மாதங்களில் 400 ரூபா – உப்பின் விலையை சுட்டிக்காட்டிய விமல் வீரவன்ச
ஒரு உப்புப் பாக்கெட் 60 ரூபாயாக விலை நிர்ணயம் செய்ய 76 ஆண்டுகள் ஆனது என்றும், எனினும், 60 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக மாற வெறும் ஏழு மாதங்கள் மட்டுமே ஆனது என்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கூறுகிறார்.

மற்ற அரசாங்கங்கள் எவ்வளவுதான் லஞ்சம் கொடுக்க முயன்றாலும், ஒரு பாக்கெட் உப்பு அல்லது ஒரு கிலோ அரிசிக்கு ஒருபோதும் லஞ்சம் கொடுத்ததில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், தற்போதைய அரசாங்கத்தின் எந்தவொரு திறமையின்மைக்கும் முந்தைய அரசாங்கங்கள் மீது பழி சுமத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மோசடி மற்றும் ஊழல் இல்லாதது என்று கூறும் அரசாங்கம், உண்மையில் அவ்வாறு செய்வதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தினால், ஒரு பாக்கெட் உப்பு, ஒரு கிலோ அரிசி மற்றும் ஒரு தேங்காய் எப்படி இவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்கும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கவுள்ளதாகவும், இதுபோன்ற சூழ்நிலையில், பொது மக்களின் வாழ்க்கை மட்டுமல்ல, முழு தொழில்துறை அமைப்பும் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் லாபம் ஈட்டிய மின்சார சபை, 7 மாதங்களில் எப்படி நஷ்டத்தைச் சந்தித்திருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

எதிர்காலத்தின் மின் கட்டணம் இன்னும் அதிகரிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post 76 ஆண்டுகளில் 60 ரூபா.. ஏழே மாதங்களில் 400 ரூபா – உப்பின் விலையை சுட்டிக்காட்டிய விமல் வீரவன்ச appeared first on Oruvan.com.

நாட்டில் உப்புக்கு கடும் தட்டுப்பாடு – விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்
சந்தையில் உப்புக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கையிருப்பு நாட்டிற்குள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில இடங்களில், ஒரு கிலோகிராம் உப்பு பாக்கெட் சுமார் 450-500 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இருப்பு சந்தையை அடைந்தவுடன் இந்த நிலைமை சரியாகிவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இறக்குமதி செய்யப்பட்ட உப்பு வருவதில் தாமதம் ஏற்பட்ட எதிர்காலத்தில் ஒரு பாக்கெட் உப்பு விலை மேலும் அதிகரிக்கும் என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

இதனிடையே, தற்போதைய உப்பு தட்டுப்பாடு காரணமாக உப்பு இருப்புக்களை மறைத்து வைப்பவர்கள் கைது செய்யப்பட்டு, உப்பு இருப்புக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

உப்புக்கு செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடி நடப்பதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உப்பு இருப்புக்களை மறைத்து வைத்திருப்பவர்களையும், அதிக விலைக்கு உப்பை விற்பனை செய்பவர்களையும் கண்டுபிடிக்க நாடு முழுவதும் சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை கூறுகிறது.

இதற்கிடையில், வர்த்தகர்கள் தங்கள் கடைசி உப்பு இருப்பை தற்போது விற்பனை செய்து வருவதாகவும், மேலும் உப்பு இருப்பு எப்போது கிடைக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும் கூறுகின்றனர்.

The post நாட்டில் உப்புக்கு கடும் தட்டுப்பாடு – விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் appeared first on Oruvan.com.

சந்தையில் உப்புக்கு பற்றாக்குறை – அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு
உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக சந்தையில் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்த போதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார்.

இதனிடையே, சந்தையில் உப்பு விலையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும், 1 கிலோகிராம் உப்புப் பொதியை 450 முதல் 500 ரூபா வரையிலான விலையில் வர்த்தகர்கள் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

உப்பு விலை தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தேவையான சோதனை நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

The post சந்தையில் உப்புக்கு பற்றாக்குறை – அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

ஆரோக்கியத்துக்கு ஏற்றது ‘இளஞ்சிவப்பு உப்பு’
சமையலில் உப்பு மிகவும் இன்றியமையாதது. ஆனால் சாதாரண உப்பை விட ஆரோக்கியத்தில் அக்கறையுள்ளவர்கள் பயன்படுத்தும் உப்பு தான் இளஞ்சிவப்பு உப்பு.

இந்த இளஞ்சிவப்பு உப்பில் இரும்புச் சத்து, கல்சியம், துத்தநாகம், மெக்னீசியம்,தாமிரம் ஆகியவை உள்ளன.

இந்த உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தசைகளிலுள்ள பிடிப்பு குறையும். உடல் எடை குறையும்.

இவ் வகை உப்பில் எலக்ட்ரோலைட்டுகள் இருப்பதால் தசைகளில் வீக்கம், வலி போன்றவை குணமாகும். இதனை இளம் சூடான நீரில் கலந்து குடிக்கலாம். ஆனால், அதிகமாக உட்கொள்ளக் கூடாது.

ஆயுர்வேத மருத்துவத்தில் மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், வயிற்றுவலி ஆகியவற்றுக்கு இந்த இளஞ்சிவப்பு உப்பு பயன்படும்.

அதிக வயிற்றுவலி இருப்பின் தயிரில் சிறிது புதினா இலைகளை நறுக்கி சேர்த்து இந்த உப்பு கலந்து குடிக்க வேண்டும்.

மேலும் தொண்டை வலி, சளி, இருமல் பிரச்சினை இருப்பவர்கள் இந்த உப்பை உட்கொள்ளலாம். இதனை நீரில் கலந்து வாய் கொப்பளித்தல் நல்லது.

The post ஆரோக்கியத்துக்கு ஏற்றது ‘இளஞ்சிவப்பு உப்பு’ appeared first on Oruvan.com.

உப்பின் மகத்துவம் தெரியுமா? இப்படி செய்தால் கெட்ட சக்தி நெருங்காது
கல் உப்பு எப்பொழுதும் செல்வத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. அத்தகைய கல் உப்பை எப்படி பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

வாஸ்துவின் அடிப்படையில் சமையல் அறை வீட்டின் தென்கிழக்கு திசையில் தான் அமைய வேண்டும். அதேபோல் கல் உப்பை வீட்டின் கிழக்கு அல்லது தெற்கு திசையில் தான் வைக்க வேண்டும்.

அதேபோல் கல் உப்பை ப்ளாஸ்டிக் பாத்திரத்தில் வைக்கக் கூடாது. மண் பாத்திரம் அல்லது பீங்கான் பாத்திரத்தில்தான் வைக்க வேண்டும்.

கல் உப்பை எப்பொழுதம் அடுப்புக்கு கீழே குனிந்து எடுப்பதுபேல் தான் வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால்தான் செளபாக்கியம் கிடைக்கும்.

தரையைத் துடைக்கும்போது அந்த நீரில் ஒரு கைப்பிடி கல் உப்பை போடடு துடைத்தால் எதிர்மறை விடயங்கள் ஓடிவிடும்.

குளிக்கும்போது ஒரு கைப்பிடி கல் உப்பை போட்டு குளித்தால் கண் திருஷ்டி நீங்கும்.

அதேபோல் வீட்டின் நிலைவாசலில் சிவப்பு துணியொன்றில் கல் உப்பை வைத்து கட்டி வைத்தால் பில்லி, சூனியம், கெட்ட சக்திகள் நம்மை அண்டாது.

The post உப்பின் மகத்துவம் தெரியுமா? இப்படி செய்தால் கெட்ட சக்தி நெருங்காது appeared first on Oruvan.com.

உப்பு பொதிக்கு மீண்டும் தட்டுப்பாடு
உள்ளூர் சந்தையில் நானூறு கிராம் உப்பு பொதியொன்றின் விலை 150 ரூபா முதல் 160 ரூபா வரை அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் கூறுகின்றனர்.

ஒரு கிலோ கிராம் உப்பு பொதிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாட்டில் நிலவும் உப்புப் பற்றாக்குறைக்குத் தீர்வாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பை உள்ளூர் சந்தையில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு

மக்களுக்குக் கிடைத்துள்ளது.

நாட்டில் வருடாந்திர உப்பு நுகர்வு சுமார் 180,000 மெட்ரிக் தொன் ஆகும், மேலும் கடந்த ஆண்டு பிற்பகுதியிலிருந்து ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக உப்பு அறுவடை வேகமாகக் குறைவடைந்துள்ளது.

நாட்டில் உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக, 15 ஆண்டுகளுக்குப் பின்னர் பொது உள்நாட்டு நுகர்வுக்காக உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது.

இதனிடையே, அம்பாறை, சம்மாந்துறை மற்றும் எரகம பகுதிகளில் நெல் அறுவடை ஏற்கனவே ஆரம்பமான நிலையில், வியாபாரிகள் 85 ரூபா முதல் 90 ரூபா வரை மிகக் குறைந்த விலைக்கு நெல் கொள்வனவு செய்வதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

நெல் ஆலை உரிமையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் காரணமாக அரசாங்கம் இன்னும் நெல்லுக்கு உத்தரவாத விலையை வழங்கவில்லை என்று முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.

The post உப்பு பொதிக்கு மீண்டும் தட்டுப்பாடு appeared first on Oruvan.com.