Sagara Kariyawasam Archives - Oruvan.com

நுவரெலியாவில் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை – மகிந்த தரப்பு குற்றச்சாட்டு
ஜனாதிபதி அநுர குமார் திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நுவரெலியாவில் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொது செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதள உலகக் குழுவின் இந்தோனேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.

அவர்களை கைது செய்ய சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த பிடியாணை உத்தரவு தற்போதைய அரசாங்கத்தால் பிறப்பிக்கப்படவில்லை.

எங்களிடம் உள்ள தகவல்களின் படி இந்த சிவப்பு பிடியாணை உத்தரவு கடந்த அரசாங்கத்தில் பிறப்பிக்கப்பட்டது.

இலங்கை வரலாற்றில் மிக மோசமான சம்பவமாக, சிவப்பு லேபிள்களுடன் கூடிய 323 கொள்கலன்கள் எந்த ஆய்வும் இல்லாமல் விடுவிக்கப்பட்டதாகும்.

கோவில் தொற்று காலப்பகுதியில் சுங்கத்திணைக்களத்தில் ஏற்பட்டிருந்த நெருக்கடியின் போது கூட ஆய்வு செய்யப்பட்டாமல் எந்தவொரு கொள்கலன்ளும் விடுவிக்கப்படவில்லை.

இப்போது சுங்கத்தில் ஒரு போலியான நெருக்கடி உருவாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நெருக்கடியுடன் சிவப்பு லேபிள்கள் கொண்ட 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

323 உடன் கூடுதலாக, சிவப்பு லேபிள்களுடன் இதேபோன்ற ஏராளமான கொள்கலன்கள் அந்தக் காலகட்டத்தில் விடுவிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

இந்த கொள்கலன்கள் இலங்கைக்குள் கொண்டு வர முடியாத ஆயுதங்கள் கொண்ட கொள்கலன்கள் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

மேலும், இந்த கொள்கலன்களில் போதைப்பொருள், தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணம் இருந்ததாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளனர். இது தொடர்பாக நாங்கள் முறைப்பாடு செய்துள்ளோம்.

ஆனால் இன்றுவரை, இந்த முறைப்பாடுகளுக்கு எந்த பதிலும் இல்லை. இந்த விடயத்தில் பொலிஸ்மா அதிபர் நியாயமான முறையில் விசாரணை செய்து பதில் வழங்குவார் என நம்புகின்றோம்.

இதேவேளை, சமீபத்திய நாட்களில், ஒரு நாளைக்கு நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடுகள் ஒவ்வொன்றையும் பாதாள உலகத்திற்குள் போதைப்பொருள் கும்பல்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளாக அரசாங்கம் விளக்குவதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post நுவரெலியாவில் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை – மகிந்த தரப்பு குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

விடுதலைப் புலிகள் காலத்தை விட தேசிய பாதுகாப்பு மோசமாகிவிட்டது – சாகர காரியவசம்
விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தை விட மோசமான சூழ்நிலைக்கு நாடு நகர்ந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், தற்போது நடைபெறும் கொலைகளை அரசாங்கம் சாதாரணமாக சித்தரிக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கம் ஒரு பாசிச ஆட்சியை செயல்படுத்துவதாகவும்,1980ஆம் ஆண்டுகளில் காணப்பட்ட ஒரு சூழ்நிலையை நோக்கி நாடு நகர்ந்து வருவதாகவும் சாகர காரியவசம் கூறுகிறார்.

இந்த நாட்டில் கொள்கலன்கள் சம்பவத்தை முதலில் வெளிப்படுத்தியவர் படுகொலை கொலை செய்யப்பட்ட டான் பிரியசாத் என்றும், அவர் தனது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் சாகர காரியவசம் வலியுறுத்தினார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இந்த நாட்டில் விடுதலைப் புலிகள் பயங்கரவாதம் தீவிரமாக இருந்ததை விட மோசமான நிலையை எட்டியுள்ளது. 1988-89 காலகட்டத்தில் ஜே.வி.பி.யின் பயங்கரவாத நிலையை நோக்கி நகர்ந்து வருவது இப்போது தெளிவாகத் தெரிகிறது.

நீதிமன்றத்தில் மக்கள் சுட்டுக் கொல்லப்படுவதைக் காண்கிறோம். பொலிஸாரின் முன்னிலையில் மக்கள் கொல்லப்படுவதைக் காண்கிறோம். வீடுகளில் மக்கள் கொல்லப்படுகிறார்கள்.

கொலைகளை மிகவும் பொதுவான விஷயமாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. கொல்லப்படுபவர்கள் போதைப்பொருட்களில் ஈடுபட்டவர்கள் அல்லது பாதாள உலகில் ஈடுபட்டவர்கள் என்று கூறி அரசாங்கம் மிக எளிதாக அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறது.

கொள்கலன் சம்பவத்தில் நடந்த மோசடியை முதன்முதலில் அம்பலப்படுத்திய டான் பிரியசாத் தனது சொந்த வீட்டிலேயே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் கொலைகள் அனைத்தும் மிகவும் எளிமையான முறையில் மறைக்கப்படுகின்றன.

இந்தக் கொலைகளுக்குப் பின்னால் இந்த அரசாங்கம் உள்ளது. ஒரு பாசிச ஆட்சியை உருவாக்கும் நோக்கத்திற்கான முக்கிய அடிப்படை நிபந்தனை இதுதானா என்பதில் எங்களுக்கு பெரும் சந்தேகம் உள்ளது.

பாசிச ஆட்சியால் அதன் எதிரிகளை அடக்க முடியாதபோது, அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்தியவர்கள் மூலம் அவர்கள் கொலைச் செய்யப்படுகின்றார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post விடுதலைப் புலிகள் காலத்தை விட தேசிய பாதுகாப்பு மோசமாகிவிட்டது – சாகர காரியவசம் appeared first on Oruvan.com.