Sachithra Senanayake Archives - Oruvan.com

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனநாயக்க மீது சூதாட்ட குற்றச்சாட்டு
2020 லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது பணத்திற்காக போட்டிகளை நிர்ணயம் செய்ய வீர் ஒருவருக்கு பரிந்துரைத்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனநாயக்க மீது சட்டமா அதிபர் ஹம்பாந்தோட்டை உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

இலங்கையில் ஒரு தேசிய கிரிக்கெட் வீரருக்கு எதிராக விளையாட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுகளின் பேரில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படுவது இதுவே முதல் முறை என்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தெற்காசியாவில் ஒரு தேசிய கிரிக்கெட் வீரருக்கு எதிராக ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றவியல் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படுவது இதுவே முதல் முறை என்றும் அவர் கூறினார்.

2020 நவம்பர் 21 முதல் 22 வரை நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற கொழும்பு கிங்ஸ் அணிக்கான போட்டிகளை சூதாட்டத்திற்கு மற்றொரு தரப்பினர் முன்வைத்த திட்டத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவுக்குத் தெரிவிக்க வேண்டாம் என்று தரிந்து ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்ததாகவும், தூண்டிவிட்டதாகவும், அறிவுறுத்தியதாகவும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சச்சித்ர சேனநாயக்க மீது சட்டமா அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதன்படி, அவர் மீது 2019 ஆம் ஆண்டு 24 ஆம் எண் விளையாட்டு ஊழல் திருத்தச் சட்டத்தின் பிரிவு 5(d) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்து, சச்சித்ர சேனநாயக்க சமீபத்தில் இலங்கை ஊழல் தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் அறிவுறுத்தலின் பேரில் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதன் பின்னர், நீதிமன்றம் அவரை காவலில் எடுத்து பிணையில் விடுவித்தது.

சம்பவம் தொடர்பாக பெறப்பட்ட தடயவியல் சான்றுகள் மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்த பின்னர், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தனவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனநாயக்க மீது சூதாட்ட குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.