Rohitha Abeygunawardena Archives - Oruvan.com

நாமல் உள்ளிட்ட 20 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
கடந்த காலங்களில் பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்த அமைச்சர்கள் உட்பட இருபது அரசியல்வாதிகள் சட்டவிரோதமாக குவித்ததாகக் கூறப்படும் சொத்துக்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

அதன்படி, நாமல் ராஜபக்ச, ரோஹித அபேகுணவர்தன, மகிந்த அமரவீர, பியசேன கமகே, பவித்ரா வன்னியாராச்சி, வஜிர அபேவர்தன, துமிந்த திசாநாயக்க, எஸ்.எம். சந்திரசேன, சாகல ரத்நாயக்க, மனுஷ நாணயக்கார, முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ச, திஸ்ஸ குட்டியாராச்சி, மற்றும் குருநாகல் முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட இருபது நபர்களுக்கு எதிராக இந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பொது அமைப்புகள் மற்றும் தனிநபர்களால் குற்றப் புலனாய்வுத் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

மேலும் விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாமல் உள்ளிட்ட 20 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் appeared first on Oruvan.com.

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் சரணடைந்தார்
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், வாலானா குற்றத் தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் வாகனம் தொடர்பான வழக்கு தொடர்பாக அவர் சரணடைந்துள்ளார்.

The post ரோஹித அபேகுணவர்தனவின் மகள் சரணடைந்தார் appeared first on Oruvan.com.

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் தலைமறைவு
முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மெலனி அபேகுணவர்த்தன மற்றும் அவரது கணவரை கைது செய்ய பாணந்துறை வாலானா ஊழல் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மதிப்புள்ள லேண்ட் குரூசர் ஜீப்பை நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகனுக்கு விற்னை செய்த குற்றச்சாட்டின் பேரில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று முன்தினம் (19) களுத்துறையில் உள்ள ரோஹித அபேகுணவர்தனவின் மகளுக்குச் சொந்தமான வீட்டை பொலிஸார் சோதனை செய்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், அவர்கள் ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களின் கையடக்க தொலைபேசியின் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் (19) மதுகம நகரில் பாணந்துறை வாலானா ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட ஜீப்பைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ஜீப் ஜீப்புடன் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, நடத்தப்பட்ட விசாரணைகளில், ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மெலனியால், ஜீப் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, போலி எண்களைப் பயன்படுத்தி மோட்டார் வாகன பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த ஜீப் வாகனம் ரோஹித அபேகுணவர்தனவின் மகளால் 2024 ஆம் ஆண்டு 10 வது மாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகனுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஜீப் வாகனம் சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் நேற்று (20) மதியம் மதுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஓகஸ்ட் (01) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post ரோஹித அபேகுணவர்தனவின் மகள் தலைமறைவு appeared first on Oruvan.com.