Rohit Sharma Archives - Oruvan.com

விராட் கோலியின் சாதனையை முறியடித்த சர்மா
ஐபில் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.

கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். நேற்றையப் போட்டியில் சர்மா 78 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சர்மா 1,161 ஓட்டங்களை குவித்துள்ளார்.

முன்னதாக, விராட் கோலி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 1,159 ரன்கள் குவித்து, ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.

அதன்படி, விராட் கோலியின் சாதனையை முறியடித்தசர்மா, தற்போது ஐபிஎல் போட்டிகளின் வரலாற்றில் ஒரே அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 1,146 ஓட்டங்கள் எடுத்திருப்பதால், விராட் கோலி இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தையும் தக்கவைத்துள்ளார்.

அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் டேவிட் வார்னர், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 1,134 ஓட்டங்கள் எடுத்து நான்காவது இடத்தில் உள்ளார்.

இதற்கிடையில், இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக அரைசதங்கள் அடித்த துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா நேற்றைய (29) போட்டியின் போது நான்காவது இடத்தைப் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.

சர்மா இதுரை 273 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 268 இன்னிங்ஸ்களில் 48 அரை சதங்களை அடித்துள்ளார். விராட் கோலி 64 அரை சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post விராட் கோலியின் சாதனையை முறியடித்த சர்மா appeared first on Oruvan.com.

ஒருநாள் போட்டிக்கான முக்கியத்துவம் குறைந்து வருகின்றது
ஒருநாள் போட்டிக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்களின் ஓய்வுக்கு பின்னர் ஒருநாள் போட்டியின் இருப்பு ஆபத்தாக மாறிவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில், ஒருநாள் போட்டிக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதாகவும் அஸ்வின் கூறியுள்ளார்.

“2027 உலகக் கிண்ண தொடருக்கு பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி நான் கொஞ்சம் கவலைப்படுகிறேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்தும் இருக்கின்றது. ஆனால் உண்மையில் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அப்படியில்லை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

பார்வையாளர்கள் என்ன பார்க்க விரும்புகிறார்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

விராட் மற்றும் ரோஹித்தின் ஓய்வுக்குப் பிறகு ஒருநாள் வடிவம் மேலும் பலவீனமடையும் எனவும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

50 ஓவர் கிரிக்கெட் ஒரு காலத்தில் ஒரு சிறந்த வடிவமாக இருந்தது, மகேந்திர சிங் தோனி போன்ற ஜாம்வான் வீரர்களை உருவாக்கியது எனவும் அஸ்விக் கூறியுள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா அணி சார்பில் அனைத்து வடிவங்களிலும் 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஒருநாள் போட்டி குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post ஒருநாள் போட்டிக்கான முக்கியத்துவம் குறைந்து வருகின்றது appeared first on Oruvan.com.

துடுப்பாட்ட வீரர் தரவரிசை – இரண்டாம் இடம்திற்கு விராட் கோலி முன்னேற்றம்
ஆடவருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் அண்மையில் முடிவடைந்த நிலையில், புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.

இந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற ரீதியில் கைப்பற்றியிருந்தது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு சதங்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட ஓட்டங்களை விராட் கோலி குவித்திருந்தார்.

இதன்படி, புதிய தரவரிசையின் படி இரண்டு இடங்கள் முன்னேறியுள்ள விராட் கோலி 773 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ரோகித் சர்மா 781 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றார். நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் ஒரு இடம் பின் தள்ளப்பட்டுள்ளதுடன், 766 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ரஷித் கான் முதலிடத்திலும் இங்கிலாந்து அணியின் ஆர்ச்சர் இரண்டாவது நீடித்துள்ளனர். இந்திய அணியின் குல்தீப் யாதவ் மூன்று இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் கிரிக்கெட் போட்டிகளின் சகலதுறை வீரர்களில் ஆப்கானிஸ்தான் அணியின் அஸ்மத்துல்லா ஓமர்சாய் முதலிடத்தில் நீடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post துடுப்பாட்ட வீரர் தரவரிசை – இரண்டாம் இடம்திற்கு விராட் கோலி முன்னேற்றம் appeared first on Oruvan.com.

ஒருநாள் துடுப்பாட்ட வீரர் தரவரிசை!! 46 ஆண்டுகளின் பின் முதலிடம் பிடித்த நியூசிலாந்து வீரர்
சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் முதலிடம் பிடித்துள்ளார்.

1979 ஆம் ஆண்டு க்ளென் டர்னருக்குப் பின்னர் டேரில் மிட்செல் முதலிடம் பிடித்துள்ளார்.

கிறைஸ்ட்சர்ச்சில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் அவர் ஒருநாள் போட்டிகளின் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

இதன் மூலம் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர் முடிந்த பின்னர் 22 நாட்களாக முதலிடத்தில் இருந்த இந்திய அணியின் ரோகித் சர்மா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

46 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் நியூசிலாந்து அணியின் க்ளென் டர்ன முதலிடம் பிடித்திருந்தார்.

அதன் பின்னர் அந்த அணி சார்பில் நாதன் ஆஸ்டில், ரோஸ் டெய்லர் மற்றும் கேன் வில்லியம்சன் போன்ற நட்சத்திர வீரர்கள் விளையாடி இருந்தாலும் முதலிடம் பிடிக்க முடியவில்லை.

தற்போது டேரில் மிட்செல் முலிடம் பிடித்துள்ளார். இந்திய அணியின் தற்போதைய தலைவர் சுப்மன் கில் நான்காவது இடத்திலும், விராட் கோலி ஐந்தாவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஒருநாள் போட்டிகளின் பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ரஷித கான் 710 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இலங்கையின் மகீஷ் தீக்சன நான்காம் இடத்த பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post ஒருநாள் துடுப்பாட்ட வீரர் தரவரிசை!! 46 ஆண்டுகளின் பின் முதலிடம் பிடித்த நியூசிலாந்து வீரர் appeared first on Oruvan.com.

விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு?
அவுஸ்திரேலிய தொடருக்கு பின்னர் மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஓய்வு பெறுவதாக வெளியான வதந்திகளை இந்திய கிரிக்கெட் சபையின் துணை தலைவர் ராஜீவ் சுக்லா நிராகரித்துள்ளார்.

ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரை வெற்றிகொண்ட இந்திய அணிக்கு அவர் பாராட்டையும் இதன்போது தெரிவித்திருந்தார்.

அத்துடன், ஒருநாள் அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

அவர்கள் இருவரும் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியில் அவர்களின் இருப்பு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்

இந்த தொடர் அவர்கள் இருவரின் கடைசி தொடர் என்ற வதந்திகளையும் ராஜீவ் சுக்லா நிராகரித்தார், இதுபோன்ற கூற்றுக்களை சொல்வது முற்றிலும் தவறு என்று வலியுறுத்தினார்.

ஓய்வு முடிவுகள் வீரர்களை மட்டுமே சார்ந்தது என்றும் அவர் கூறினார். கோலி மற்றும் சர்மா இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு? appeared first on Oruvan.com.

கோலி, ரோகித் தொடர்ந்தும் விளையாட வேண்டும் – கங்குலி
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாட வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரே கடைசி சர்வதேச போட்டியாக இருக்கக்கூடும்’ என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து கங்குலியிடம் கேள்வியெழுப்பப்பட்டது. இதனையடுத்து பதல் அளித்து பேசிய அவர்,

“அது பற்றி எனக்கு தெரியாது. யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்கள் விளையாடுவார்கள். கோலியும், ரோகித்தும் நன்றாக ஆடி ஓட்டங்கள் பட்சத்தில், அவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும்.

விராட் கோலியின் ஒரு நாள் போட்டி சாதனை தனித்துவமானது. ரோகித் சர்மாவும் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் நிறைய சாதித்து இருக்கிறார்’ என்றார்.

தொடர்ந்தும் பேசிய அவர், இந்தியா மிகவும் பலம் வாய்ந்த அணி. சிவப்புநிற பந்து கிரிக்கெட்டில் வலுவாக இருக்கிறது என்றால், வெள்ளை நிற பந்து போட்டியில் அதை விட வலுவாக திகழ்கிறது.

எனவே ஆசிய கிண்ணத்தை வெல்வதற்கு இந்தியாவுக்கே வாய்ப்பு அதிகம் என்பது எனது கருத்து. அதுவும் துபாய் போன்ற ஆடுகளத்தில் இந்தியாவை வீழ்த்துவது கடினம்’ என கங்குலி மேலும் தெரிவித்துள்ளார்.

பெங்கால் கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் மீண்டும் அடியெடுத்து வைப்பது குறித்து கேட்ட போது, ‘உறுப்பினர்கள் விரும்பினால் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வேன்’ என்றார்.

The post கோலி, ரோகித் தொடர்ந்தும் விளையாட வேண்டும் – கங்குலி appeared first on Oruvan.com.

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை!! மேத்யூஸுக்கு சர்மா வாழ்த்து
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று (17) ஆரம்பமாகின்றது.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, இலங்கை அணியின் சகலதுறை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸுக்கு கடைசி சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.

இன்று (17) காலை 10.00 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கும், இந்தப் போட்டிக்காக பெயரிடப்பட்ட இலங்கை அணியில் சோனல் தினுஷா, பவன் ரத்நாயக்க, தரிந்து ரத்நாயக்க, பசிந்து சூரியபண்டார மற்றும் இசிதா விஜேசுந்தர போன்ற புதுமுக வீரர்கள் உள்ளனர்.

2025 – 2027 டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்பின் கீழ் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.

இந்நிலையில், இரு அணிகளின் தலைவர்களும் நேற்று சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட பங்களாதேஷ் அணியின் தலைவர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ, இலங்கை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பதிலடி கொடுப்பதற்கு தனது அணியின் வீரர்கள் காலி மைதானத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளனர் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய இலங்கை அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா, தனது கடைசி சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஏஞ்சலோ மேத்யூஸுக்கு வெற்றிகரமான பிரியாவிடையை வழங்க ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறினார்.

இதற்கிடையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ள ஏஞ்சலோ மேத்யூஸுக்கு இந்திய ஒருநாள் அணியின் தலைவர் ரோஹித் சர்மா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சர்மா மேத்யூஸை வாழ்த்தும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

The post இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை!! மேத்யூஸுக்கு சர்மா வாழ்த்து appeared first on Oruvan.com.

ஓய்வு பெற்றார் ஹிட் மேன் – புதிய தலைவராகும் ஷுப்மான் கில்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஷுப்மன் கில் புதிய தலைவராக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சர்மா நேற்று அறிவித்துள்ள நிலையில், ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

ஏற்கவே, கடந்த ஆண்டு இடம்பெற்ற டி20 உலகக் கிண்ண தொடருடன் சர்மா டி20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

எனினும், சொந்த நாட்டிலேயே நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட போடர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சர்மா தலைமையிலான இந்திய அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

இந்த தொடர்கள் முழுவதும் சர்மாவின் துடுப்பாட்டம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது. எனினும், இந்த ஆண்டு இடம்பெற்ற ஐசிசி சம்பியன் கிண்ணத்தை சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியிருந்தது.

தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் சர்மா ஆரம்பத்தில் தடுமாறியிருந்தாலும், பின்னர் தனது அதிரடி ஆட்டங்களால் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையிலேயே, நேற்று திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சர்மா அறிவித்துள்ளார். சர்மா ஓய்வை அறிவித்துள்ள நிலையில், புதிய தலைவராக ஷுப்மன் கில் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு தலைமை தாங்கும் கில், தனது திறமையான வழிநடத்தல் மூலம் புள்ளிப் பட்டியலில் அணியை முதலிடம் பிடிக்கச் செய்துள்ளார். இதனால் பலரின் கவனமும் கில் பக்கம் திரும்பியுள்ளது.

ஷுப்மன் கில் ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு ஒருபோதும் தலைமை தாங்கியதில்லை என்றாலும், அவர் ஐந்து டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார்.

இந்த ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி ஹெடிங்லியில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரி முழுநேர டெஸ்ட் தலைவராக கில் நியமிக்கப்படுவார் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு, இந்த மாத இறுதியில் கூடும் போது அணியைத் தெரிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டி இந்தியாவிற்கான அடுத்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) சுழற்சியைத் தொடங்கியுள்ள நிலையில், நீண்டகால தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு தலைவர் தங்களுக்குத் தேவை என்பதை தேர்வாளர்கள் உணர்ந்துள்ளனர்.

எனவே, 25 வயதான கில் இந்தியாவின் மிகவும் விரும்பத்தக்க மற்றும் பொருத்தமான தேர்வாக இருப்பார் என்று நம்பப்படுகிறது.

The post ஓய்வு பெற்றார் ஹிட் மேன் – புதிய தலைவராகும் ஷுப்மான் கில் appeared first on Oruvan.com.

தொடர்ச்சியாக நாணய சுழற்சியில் தோல்வியடைந்து ரோகித் சர்மா சாதனை
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியான அதிக முறை நாணய சுழற்சியில் தோல்வியடைந்த அணித் தலைவர் என்ற சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.

துபாயில் நேற்று (09) நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா நாணய சுழற்சியில் தோல்வியடைந்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவரது தொடர்ச்சியான 12வது தோல்வியாகும்.

அதன்படி, ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் நாணய சுழற்சியில் தோல்வியடைந்த ரோகித் சர்மா, இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் பிரையன் லாராவின் சாதனையை சமன் செய்தார்.

2023 நவம்பர் முதல் நேற்று துபாயில் நியூசிலாந்திற்கு எதிரான ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டி வரையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாணய சுழற்சியில் தோல்வியடைந்துள்ளது.

2023 ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதி போட்டியில் நாயண சுழற்சியில் வெற்றிபெற்ற பின்னர் இந்திய அணி இதுவரை விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் நாணய சுழற்சியில் தோல்வியடைந்துள்ளது.

இதுவரையில் தொடர்ச்சியாக 15 போட்டிகளில் நாணய சுழற்சியில் தோல்வியடைந்துள்ள இந்திய அணி, தொடர்ச்சியாக நாணயச் சுழற்சியில் தோற்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

இந்தப் பட்டியலில் நெதர்லாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. 2011 மற்றும் 2013 க்கு இடையில் அந்த அணி நாணயச் சுழற்சியில் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post தொடர்ச்சியாக நாணய சுழற்சியில் தோல்வியடைந்து ரோகித் சர்மா சாதனை appeared first on Oruvan.com.

“கிரிக்கெட் உருவாக்கிய சிறந்த தலைவர்” – ரோகித் சர்மா படைத்த தனித்துவமான சாதனை
கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) நடத்தும் அனைத்து தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் தலைவர் என்ற பெருமையை இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

ஏற்கனவே, டெஸ்ட் சம்பியன்ஷிப், ஒருநாள் மற்றும் டி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றிருந்த நிலையில், சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டிக்கும் இந்தியாவை வழிநடத்தி அழைத்துச் சென்று சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளார்.

துபாயில் நேற்று நடந்த 2025 சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா பெற்ற முக்கியமான வெற்றியின் மூலம், ஐந்தாவது முறையாக சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

வேறு எந்த அணியும் மூன்று முறைக்கு மேல் சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதில்லை. 2022 பெப்ரவரியில் ரோகித் சர்மா தலைமைப் பெறுப்பேற்றதில் இருந்த இந்திய அணி ஏராளமான சாதனைகளை முறியடித்துள்ளது.

மூன்று வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஐ.சி.சி போட்டிகளிலும் இந்தியா இறுதிப் போட்டியை எட்டியுள்ளது, இதன் மூலம் சர்மா அந்த சாதனையை எட்டிய முதல் தலைவராக மாறியுள்ளார்.

வேறு யாராலும் முறியடிக்க முடியாத இந்த சாதனை, இப்போது சர்மாவை கிரிக்கெட் உருவாக்கிய சிறந்த தலைவர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.

ரோகித் சர்மாவின் தலைமையில், இந்தியா 2023 உலக டெஸ்ட் கிரிக்கெட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியை எட்டியது, அந்தப் போட்டியில் 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அதே ஆண்டு, இந்தியா ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கும் தகுதிப் பெற்றிருந்தது. இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்திருந்தது.

தொடர்ந்து 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற டி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதிப்பெற்றிருந்ததுடன், இறுதிப் போட்டியில் தென்னாப்பரிக்காவை வீழ்த்தி வெற்றியும் பெற்றிருந்தது.

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஐசிசி சம்பின்ஸ் கிண்ண தொடரில் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தகுதிப் பெற்றுள்ளது.

இதேவேளை, இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி மூன்று வகையான ஐசிசி நடத்திய தொடர்களில் இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதுடன் கிண்ணத்தையும் கைப்பற்றியிருந்தார்.

2007 டி20 உலகக் கிண்ணம், 2011 ஒருநாள் உலகக் கிண்ணம், 2013 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத்தை தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றிகொண்டிருந்தது.

எவ்வாறாயினுமு், தோனி ஓய்வு பெறுவதற்கு முன்பு உலக டெஸ்ட் கிரிக்கெட் சம்பியன்ஷிப் (WTC)ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்திய அணியை உலக டெஸ்ட் கிரிக்கெட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற முதல் தலைவர் விராட் கோலி என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post “கிரிக்கெட் உருவாக்கிய சிறந்த தலைவர்” – ரோகித் சர்மா படைத்த தனித்துவமான சாதனை appeared first on Oruvan.com.