Resolution Archives - Oruvan.com

இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இறுதியாக இன்று சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

ஏற்கனவே கடந்த மாத ஆரம்பத்தில் இந்தப் பிரேரணையின் முதலாவது வரைபு சமர்ப்பிக்கப்பட்டது.

பின்னர் அதில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில் திருத்தப்பட்ட இறுதி வரைபு இன்று சமர்ப்பிக்கப்பட்டு, வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

இலங்கை மீதான மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரத்தை நீடிக்கும் தீர்மானத்திற்கு, அதனை முன்வைத்த பிரதான 05 நாடுகளுக்கும் மேலாக மேலும் 22 நாடுகள் இன்று   இணை அனுசரணை வழங்கியிருந்தன.

The post இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் appeared first on Oruvan.com.

மத்திய பஸ் தரிப்பிடத்தை மூடுவதற்கு தீர்மானம்
நவீனமயப்படுத்தல் பணிகள் காரணமாக நாளை மறுதினம் நள்ளிரவு முதல் கொழும்பு மத்திய பஸ் தரிப்பிடத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால் மத்திய பஸ் தரிப்பிடத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ஒன்றிணைந்த கால அட்டவணைக்குரிய பஸ்கள் தவிர்ந்து ஏனைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவைகள் போதிராஜ மாவத்தையிலிருந்து பயணத்தை ஆரம்பிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மத்திய பஸ் தரிப்பிடத்தை மூடுவதற்கு தீர்மானம் appeared first on Oruvan.com.

முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் மதிப்பீட்டு அறிக்கை பெற தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லங்களின் மதிப்பு தொடர்பான முழுமையான மதிப்பீட்டு அறிக்கையை பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கைகளை பெற தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம மாவத்தையில் காணப்படும் வீடு கடந்த வாரத்தில் அரசாங்கத்தின் மதிப்பீட்டு துறையால் மதிப்பிடப்பட்டதாகவும் குறித்த மதிப்பீடுகளின்படி அதன் மாதாந்த வாடகை 46 இலட்சம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, முன்னாள் அமைச்சர்களுக்கு எதிர்வரும் காலங்களில் உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்காமலிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியும் உத்தியோகபூர்வ ,இல்லத்தை பெறாமலிருக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த முடிவிற்குப் பின்னரே இந்த மதிப்பீடு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா நோக்கங்களுக்காக அந்த இல்லங்களில் சிலவற்றை உற்பத்தி ரீதியாகப் பயன்படுத்த எதிர்ப்பார்ப்பதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

அதன்படி, அந்த வீடுகளை சுற்றுலாத் துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

The post முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் மதிப்பீட்டு அறிக்கை பெற தீர்மானம் appeared first on Oruvan.com.

நாடாளுமன்ற பதவிகளுக்கு வெளியிலிருந்து அதிகாரிகளை நியமிக்க தீர்மானம் – எழும் கடும் எதிர்ப்புகள்
நாடாளுமன்ற பதவிகளுக்கு வெளியிலிருந்து  உயர் அதிகாரிகளை நியமிக்கும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு நாடாளுமன்ற ஊழியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக , தற்போது பணிபுரியும் அதிகாரிகளின் பதவி உயர்வு முறைக்கேற்பவே அதிகாரிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

இவ்வாறு, வெளியிலிருந்து ஆட்களை பணிக்கு அமர்த்துவதால் நீண்டகாலமாக சேவை புரியும் அதிகாரிகளுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் அநேகமானோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் அரச நிர்வாக சேவையின் உயர் பதவிகளுக்கு இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில், நாடாளுமன்ற உயர் அதிகாரிகளின் கலந்துரையாடலில் இவ்விடயம் தொடர்பில் விரிவாகப் பேசப்பட்டது

பொருளாதார பிரச்சினைகளை கருத்திற் கொண்டு நாடாளுமன்ற ஊழியர்களுக்கான விடுமுறை கொடுப்பனவை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கு ஊழியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கொடுப்பனவு பல ஆண்டுகளாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post நாடாளுமன்ற பதவிகளுக்கு வெளியிலிருந்து அதிகாரிகளை நியமிக்க தீர்மானம் – எழும் கடும் எதிர்ப்புகள் appeared first on Oruvan.com.

அரசாங்கத்தின் தன்னிச்சையான இடமாற்றங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்
அரசாங்க மட்டத்திலும், மாகாண சபை மட்டத்திலும் இடம்பெறும் தன்னிச்சையான இடமாற்றங்கள் தொடர்பில் ஆராய விசேட பிரிவொன்றை நிறுவுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்காக,பெயர் குறிப்பிட்டு அல்லது குறிப்பிடாது தகவல்களை வழங்கு அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

அரசாங்க மற்றும் மாகாண சபை மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து தன்னிச்சையான இடமாற்றங்களையும் இடைநிறுத்துமாறு அரசாங்கத்திடமும் மாகாண சபை அதிகாரிகளிடமும் வலியுறுத்துகிறோம் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த அறிக்கையில்,

“அரசாங்க மற்றும் மாகாண சபைகளின் பல பகுதிகளில் பணியாற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமற்ற அடிப்படையில் சேவை பதவிகளை மாற்றுவதற்கான திட்டமிடப்பட்ட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைக் காணமுடிகிறது.

இதனால் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், உள்ளூராட்சி செயலாளர்கள், கூட்டுறவு உதவி அபிவிருத்தி ஆணையாளர் போன்ற ஊழியர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச சேவையின் சுதந்திரத்தை நிலைநாட்டுவோம் என வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது பிரச்சினைக்குரிய விடயமாகும்.

இன்னும் முடிவடையாத, விரைவில் நடைபெற உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் இந்த நாட்களில் கூட்டுறவு சங்க தேர்தலும் நடைபெறவுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் அரச சேவையில் துரித அரசியல் மயமாக்கல் இடம்பெற்று வருவதும், எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு அரசாங்கம் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதையும் தெளிவாக காண முடிகிறது.

இந்த இடமாற்றங்களில், அந்தந்த துறைகளில் பணியாற்றும் பணிகளில் சிக்கல் நிலை ஏற்படுவது மட்டுமின்றி, அதிகாரிகளும் தனிப்பட்ட ரீதியில் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளதாக தெரிகிறது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post அரசாங்கத்தின் தன்னிச்சையான இடமாற்றங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் appeared first on Oruvan.com.

இ.தொ.காவை மறுசீரமைக்கத் தீர்மானம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பதற்கு குறித்த கட்சியின் தேசிய சபை தீர்மானித்துள்ளதாக சிரேஷ்ட உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் ஆகியோரின் தலைமையில் கொட்டகலையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற தேசிய சபையின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அதிகாத்தை பெறும் வகையில் கட்சியை மறுசீரமைக்க தீர்மானிக்கப்பட்டது. அடுத்த மாதமளவில் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பமாகும்.

தலைமைப் பதவி தவிர்த்து ஏனைய பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி இளையோர்களை பதவிக்கு அமர்த்தி, அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று கட்சியை மீள பலப்படுத்தவுள்ளோம்” என்றார்.

The post இ.தொ.காவை மறுசீரமைக்கத் தீர்மானம் appeared first on Oruvan.com.