rescued Archives - Oruvan.com

அமெரிக்க போர் விமானி மீட்பு
ஈரானால் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானத்தில் பயணித்து மாயமாகியிருந்த விமானி மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

கர்னல் அந்தஸ்திலான விமானப்படை அதிகாரியே துணிச்சலான தேடுதல் நடவடிக்கைக்குப் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை மீட்க முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கை இராணுவ வரலாற்றின் மிக முக்கியமான வெற்றியென ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மேற்படி விமானத்தில் இருந்த மற்றுமொரு வீரரும் மீட்கப்பட்ட நிலையில், ஒரே போர்க்களத்தில் இரு வீரர்கள் தனித்தனியாக மீட்கப்பட்டது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகின்றது.

இந்த மீட்பு நடவடிக்கையின் போது இரு தரப்பிற்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டைகள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கின்றது . கடந்த வெள்ளிக்கிழமை F-15E Strike Eagle வகை போர் விமானம் விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து, அமெரிக்கா மிக விரைவான தேடுதல் மற்றும் மீட்புப் பணியைத் தொடங்கியது.

இதேநேரம் எதிரி நாட்டு விமானியை பிடித்து ஒப்படைப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என ஈரான் அறிவித்திருந்தது.

The post அமெரிக்க போர் விமானி மீட்பு appeared first on Oruvan.com.

விபத்துக்குள்ளான ஈரானிய போர் கப்பல்- காலி வைத்தியசாலையில் 32 ஈரானியர்கள் அனுமதி
விபத்துக்குள்ளான ஈரானிய போர்க்கப்பலான ‘IRIS Dena’ விலிருந்து மீட்கப்பட்டு காலிக்கு கொண்டு வரப்பட்ட 32 ஈரானியர்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலி கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் இன்று (04) அதிகாலை கப்பல் விபத்துக்குள்ளானதாக அறிவித்ததால், இலங்கை கடற்படை மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியது.

குறித்த ஈரானிய கடற்படைக் கப்பல் சிரமங்களை எதிர்கொண்டபோது அதில் சுமார் 180 பேர் இருந்ததாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எங்களுக்கு முதலில் காலை 05.08 மணியளவில் ஒரு பேரிடர் அழைப்பு வந்தது. ஈரானிய கடற்படைக் கப்பலுக்கு உதவ உடனடியாக இரண்டு கடற்படைக் கப்பல்களை அனுப்பினோம்.

அதன்பிறகு, உதவி தேவைப்படுபவர்களை மீட்க கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து நடவடிக்கை எடுத்தன. அவசர உதவி தேவைப்படும் 30 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர். அவர்கள் காலியில் உள்ள கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானிய கடற்படைக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை, ஆனால் காலி கடற்கரைக்கு அருகில் இருந்தது.

“கடல்சார் தேடல் மற்றும் மீட்புக்கான சர்வதேச மாநாடு, 1979 இன் படி, எந்தவொரு கப்பலும் எந்த நாட்டைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதற்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,” என்றார்.

The post விபத்துக்குள்ளான ஈரானிய போர் கப்பல்-   காலி வைத்தியசாலையில் 32 ஈரானியர்கள் அனுமதி appeared first on Oruvan.com.

கடலில் சிக்கிய மீனவர்களை பாதுகாப்பாக மீட்ட கடற்படை
சீரற்ற வானிலை காரணமாக மீன்பிடி படகொன்று காணாமற் போனதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடலில் சிக்கிய இந்திய மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படை வெற்றிகரமாக ஒருங்கிணைந்த கடல் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு மீட்டது.

இந்தியாவின் மீன்பிடி படகொன்று எந்தவொரு தொடர்பும் இன்றி காணாமற் போயுள்ளதாக மும்பையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் இலங்கையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் வழங்கியுள்ளது.

இதற்கமைய, கடற்படையின் அதிவேக தாக்குதல் படகின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சிலாபத்திற்கு அப்பால் மேற்கு கடலில் இந்திய மீனவர்களின் மீன்பிடி படகு செயலிழந்த நிலையில் ஆபத்தான நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் 04 இந்திய மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்தோடு, இவர்கள் இந்தியாவின் மினிகோய் தீவைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய மீனவர்கள் நால்வரும் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, வைத்திய பரிசோதனைகளுக்குப் பின்னர், மேலதிக நடவடிக்கைகளுக்காக வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

The post கடலில் சிக்கிய மீனவர்களை பாதுகாப்பாக மீட்ட கடற்படை appeared first on Oruvan.com.