removed Archives - Oruvan.com

அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் செங்கோட்டையன் நீக்கம் – எடப்பாடி பழனிசாமி உத்தரவு
தமிழ்நாட்டில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளார்.

அதிமுகவை ஒன்றிணைக்க செங்கோட்டையன் காலவகாசம் விதித்துள்ள நிலையில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடனும், மாவட்ட அளவிலான கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடனும் திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் காலவகாசம் வழங்கியிருந்தார்.

இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள செங்கோட்டையன், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற பெரும்பான்மை தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக அதிமுக ஒன்றுபட வேண்டுமென கோரிக்கையை முன் வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பரப்புரை பயணத்திற்காக திண்டுக்கல்லில் தங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, காமராஜ், விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட அளவிலான கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

The post அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் செங்கோட்டையன் நீக்கம் – எடப்பாடி பழனிசாமி உத்தரவு appeared first on Oruvan.com.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – நிலந்த ஜயவர்தன சேவையிலிருந்து நீக்கம்
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிலந்த ஜயவர்தன உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நிலந்த ஜயவர்தன அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக செயற்பட்டிருந்தார்.

இந்த தாக்குதல் தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அவருக்கு எதிரான நடவடிக்கைகளை உள்ளடக்கிய சில பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.

அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட ஒழுக்காற்று விசாரணையில் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டமையால் நிலந்த ஜயவர்தன சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

The post உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – நிலந்த ஜயவர்தன சேவையிலிருந்து நீக்கம் appeared first on Oruvan.com.

மகிந்த ராஜபக்சவின் 116 பாதுகாப்பு அதிகாரிகள் நீக்கம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த 116 பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (11) ஒரே நேரத்தில் நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் கொழும்பு மாவட்ட உபதலைவர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

தற்போது மிக குறைவான பாதுகாப்பு உத்தியோகத்தர்களே காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நீக்கப்பட்ட 116 பாதுகாப்பு அதிகாரிகளுள் பிரபுக்களின் பாதுகாப்பில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளும் உள்ளடங்குவதாகவும் இது மிகவும் பாரதூரமான விடயம் என்றும் அவர் கூறினார்.

The post மகிந்த ராஜபக்சவின் 116 பாதுகாப்பு அதிகாரிகள் நீக்கம் appeared first on Oruvan.com.