relief Archives - Oruvan.com

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு – அரசாங்கத்தின் நிவாரணம்
அஸ்வெசும பயனாளர்களுக்கான 17,500 ரூபா கொடுப்பனவு 25,000 ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத்தை திட்டத்தை நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.

இதன்படி, அஸ்வெசும கொடுப்பனவு 17,500 ரூபாவிலிருந்து 25,000 ரூபா வரையும், 10,000 ரூபா கொடுப்பனவு 15,000 ரூபா

வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 5000 ரூபாய் கொடுப்பனவு 7500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக இந்த மாதத்தில் மேலதிகமாக 8,500 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

குறித்த கொடுப்பனவு ஏப்ரல் மாதம் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

The post அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு – அரசாங்கத்தின் நிவாரணம் appeared first on Oruvan.com.

அமெரிக்க வரி வதிப்​பால் பாதிக்​கப்​படும் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு நிவாரணம்
இந்​தி​யப் பொருட்​கள் மீதான அமெரிக்​கா​வின் 50 சதவீத வரி விதிப்​பால் இந்​திய ஏற்​றுமதி வர்த்​தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆடைகள், தங்க நகைகள், இரத்​தின கற்​கள், வெள்​ளிப் பொருட்​கள், தோல் பொருட்​கள், காலணி​கள் மற்றும் இரசாயனங்​கள்

உள்​ளிட்ட பல்​வேறு பொருட்​களுக்​கான முன்பதிவுகள் நிறுத்​தப்​பட்​ட​தால் ஏற்​றும​தி​யாளர்​கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஏற்றுமதியாளர்களுக்கு மத்​திய அரசின் நிவாரணத் தொகுப்பு பல்​வேறு வகைகளில் கவனம் செலுத்​தப்படும்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறு ஏற்​றும​தி​யாளர்​கள் எதிர்​கொள்​ளும் பணப்​புழக்க பிரச்​சினை​களை நிவர்த்தி செய்​தல், செயற்பாட்டு மூலதனத்​தின் மீதான அழுத்​தத்​தைக் குறைத்​தல், ஏற்​றுமதி தொடர்​புடைய துறை​களில் வேலை பாது​காப்பை உறுதி செய்​தல், புதிய சந்தை வாய்ப்​பு​களை ஏற்​படுத்​தி, உற்​பத்தி தடைப​டா​மல் இருக்​கச் செய்தல் என பல்​வேறு விடயங்களில் மத்திய அரசு கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்​தொற்று காலத்​தில் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறு​வனங்​களுக்கு வழங்​கப்​பட்ட நிவாரண உதவி​களை போன்றவாறு

இருக்கும் என இந்த நிவாரணம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் வரி விதிப்பை தொடர்ந்து உள்​நாட்டு நுகர்வை அதி​கரிக்​கும் வகை​யில் மத்​திய அரசு ஜிஎஸ்டி வரியை எளிமைப்​படுத்​தி​யுள்ள நிலை​யில் தற்​போது ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் வழங்க தயாராகி வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

The post அமெரிக்க வரி வதிப்​பால் பாதிக்​கப்​படும் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு நிவாரணம் appeared first on Oruvan.com.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் மக்களுக்கு இந்தியா நிவாரணம்
சீரற்ற காலநிலையால், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, முகாம்களில் வசித்து வரும் மக்களுக்கு நேற்றைய தினம் யாழ், இந்திய துணைத் தூதுவரினால், நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மன்னார் மாவட்டத்தில், தெரிவு செய்யப்பட்ட 1655 பயனாளர்களில், முதற்கட்டமாக, மன்னார் நகரப் பகுதிக்கு உட்பட்ட துள்ளுக்குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 8 கிராமங்களைச்ச சேர்ந்த 461 பயனாளர்களுக்கும்,மாந்தை மேற்கு பிரதேசச் செயலகப் பிரிவிற்குட்பட்ட பாலியாறு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள மூன்றாம்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த 255 பயனாளர்களுக்கும் மொத்தமாக 716 பயனாளர்களுக்கு முதற்கட்ட மாக இந்திய மக்களின் உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அண்மையில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர், காதர் மஸ்தான்,இந்திய உயர் ஸ்தானிகரைச் சந்தித்து விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் யாழ் இந்திய துணைத் தூதுதர் ஸ்ரீ சாய் முரளி, இந்திய துணை தூதரக அதிகாரி, மற்றும் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உட்பட குறித்த பகுதியைச் சேர்ந்த கிராம சேவையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

The post வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் மக்களுக்கு இந்தியா நிவாரணம் appeared first on Oruvan.com.