rejected Archives - Oruvan.com

மஹிந்தானந்த மற்றும் நளின் ஆகியோரின் பிணை மனுக்கள் நிராகரிப்பு
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர், அந்தத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதால், பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்திருந்த பிணை மனுக்களைக் கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நிராகரித்துள்ளது.

பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் பி.எம்.டி. பண்டார ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒரு பிரதிவாதி, மேன்முறையீட்டின் கீழ் பிணை கோரும்போது, விசேடமான காரணங்களை முன்வைப்பது அத்தியாவசியமானது என்றும் நீதிபதிகள் குழாம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த இரண்டு பிரதிவாதிகளும் முன்வைத்த காரணங்கள் பிணை வழங்குவதற்குப் போதுமான விசேடமான காரணங்கள் அல்ல என்பதால், அவர்களது பிணை மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன என்று நீதிபதிகள் குழாம் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் அலுவலகங்களுக்கு விநியோகிப்பதற்காக சதொச நிறுவனம் ஊடாக 14,000 கேரம் பலகைகளையும், 11,000 தாம் பலகைகளையும் இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்துக்கு

53 மில்லியன் ரூபா வரையான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால் கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

நீண்ட விசாரணையின் பின்னர், அந்தக் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மஹிந்தானந்த அளுத்கமகேக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும், நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

விதிக்கப்பட்ட தண்டனைகளுக்கு எதிராகப் பிரதிவாதிகள் தமது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடுகளைச் சமர்ப்பித்துள்ளனர்.

அந்த மேன்முறையீடுகள் விசாரிக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை தம்மைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகிய இரு பிரதிவாதிகளும் தமது சட்டத்தரணிகள் ஊடாகவே இந்தக் பிணை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

The post மஹிந்தானந்த மற்றும் நளின் ஆகியோரின் பிணை மனுக்கள் நிராகரிப்பு appeared first on Oruvan.com.

தேசப்பந்துவின் முன்பிணை மனு நிராகரிப்பு
தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்குமாறும், முன் பிணைக் கோரியும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த முன்பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த மனு இன்று புதன்கிழமை (20) கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

The post தேசப்பந்துவின் முன்பிணை மனு நிராகரிப்பு appeared first on Oruvan.com.

ராஜிதவின் முன்பிணை மனு நிராகரிப்பு
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தம்மை கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணையில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தாக்கல் செய்த முன்பிணை மனுவை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் சமர்ப்பித்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர்,

கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

The post ராஜிதவின் முன்பிணை மனு நிராகரிப்பு appeared first on Oruvan.com.

கெஹலியவின் கோரிக்கை மேல் நீதிமன்றத்தால் நிராகரிப்பு
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்ககமைய முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகள் மற்றும் காப்பீட்டு ஒப்பந்தங்களை முடக்கி வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் சமீபத்தில் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் நாடாளுமன்றக் கிளையில் உள்ள வங்கிக் கணக்கை முடக்கிய உத்தரவை நீக்குமாறு அவரது சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும் குறித்த கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் ஆதித்ய பட்டபெந்திக நிராகரித்துள்ளார்.

The post கெஹலியவின் கோரிக்கை மேல் நீதிமன்றத்தால் நிராகரிப்பு appeared first on Oruvan.com.

நுகர்வோரால் நிராகரிக்கப்படும் வெள்ளை பச்சையரிசி
தம்புள்ளை சந்தைக்கு வழங்கப்பட்டுள்ள இறக்குமதி செய்யப்பட்டுள்ள வெள்ளை பச்சையரிசி, நுகர்வோர் மூலம் நிராகரிக்கப்படுவதால் அவற்றை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை பச்சையரிசியை வாங்கி வீட்டிற்கு கொண்டு செல்லும் நுகர்வோர் அவற்றை மீண்டும் கடைகளுக்கு வழங்குவதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, வெள்ளை பச்சையரிசிக்கு அதிக கேள்வி இல்லாததால் விற்பனையாளர்களால் அதனை விற்பனை செய்ய முடியாத சூழல் எழுந்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை பச்சையரிசி கிலோ ஒன்று தம்புள்ளை சந்தைக்கு விநியோகிக்கப்படும் போது 212 ரூபாய் 50 சதம் செலவளிக்கப்படுவதாக கடை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும், அரசாங்கத்தின் அதி விசேட வர்த்தமானியின் அடிப்படையில், இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை பச்சையரிசி கிலோ ஒன்று 210 ரூபாய் என்ற சில்லறை விலைக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளது.

எவ்வாறாயினும், கட்டுப்பாட்டு விலையை மீறி 215 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

The post நுகர்வோரால் நிராகரிக்கப்படும் வெள்ளை பச்சையரிசி appeared first on Oruvan.com.