Registration Archives - Oruvan.com

அடையாள அட்டை பெற்றுக்கொள்வோருக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவை, அத்தியாவசியத் தேவையுள்ளவர்களுக்காக மட்டும் இன்று (08) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தச் சேவை திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களில் முன்னெடுக்கப்படும் என அதன் பதில் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.பி. சூரியப்பெரும விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், திணைக்களத்தின் கணினி கட்டமைப்பைச் சீர்செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பிரதான அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களின் சாதாரண சேவைகள் மற்றும் முன்வரிசைச் சேவைகள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கணினி கட்டமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்பட்ட பின்னர், அனைத்துச் சேவைகளும் வழமை போன்று தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

The post அடையாள அட்டை பெற்றுக்கொள்வோருக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு appeared first on Oruvan.com.

நல்லூரில் விடுதிகளைப் பதிவு செய்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் அனைத்து விடுதிகள், தனியார் மாணவர் விடுதிகள், வீடுகளில் அறை கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளும் வீட்டின் உரிமையார்கள் மற்றும் வீடுகளை நாளாந்தம், வாரந்தம் மற்றும் மாதாந்த அடிப்படையில் வாடகைக்கு வழங்குபவர்கள் அனைவரும் எதிர்வரும் 30ஆம் திகதி மாலை 4 மணிக்கு முன்னர் நல்லூர் பிரதேச சபையில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.

இதற்கான விண்ணப்பப்படிவங்களை நல்லூர் பிரதேச சபையின் தலைமைக் காரியாலயம், கொக்குவில் உப அலுவலகம், நல்லூர் உப அலுவலகம் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ள முடியும்.

பெற்றுக்கொண்ட விண்ணப்பப்படிவங்களினை பூரணப்படுத்தி எதிர்வரும் 30 ஆம் திகதி மாலை 04 மணிக்கு முன்னர் மேற்குறிப்பிட்ட அலுவலங்களில் ஒப்படைக்க வேண்டும்.

நல்லூர் பிரதேச சபையின் பகீரங்க அறிவித்தலினை உதாசீனம் செய்து தங்களுடைய விடுதிகளை நல்லூர் பிரதேச சபையில் குறித்த காலப்பகுதிக்குள் பதிவு செய்யாமல் இருப்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை நல்லூர் பிரதேச சபை மேற்கொள்ளும்.

The post நல்லூரில் விடுதிகளைப் பதிவு செய்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு appeared first on Oruvan.com.

வாகனங்கள் தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் TIN கட்டாயம்
மோட்டார் வாகனங்கள் தொடர்பான அனைத்து சேவைகளுக்காகவும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் மோட்டார் வாகனம் தொடர்பிலான அனைத்து சேவைகளுக்காகவும் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் கட்டாயமாக வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

புதிய வாகனங்களைப் பதிவு செய்வதற்கு வரி செலுத்துவோர் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள், உழவு வண்டி போன்றவற்றிற்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாகனங்களைப் பதிவு செய்வதற்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் கட்டாயமாக்கப்படும் என அரசாங்கம் கடந்த மாதம் அறிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

The post வாகனங்கள் தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் TIN கட்டாயம் appeared first on Oruvan.com.

நெல் கொள்வனவு செய்யும் ஆலை உரிமையாளர்கள் பதிவு செய்வது கட்டாயம்
பெரும்போக காலத்தில் நெல் வாங்கும் அனைத்து ஆலை உரிமையாளர்கள் மற்றும் களஞ்சியசாலை உரிமையாளர்களும் அரசாங்க நெல் சந்தைப்படுத்தல் சபையில் பதிவு செய்வது கட்டாயம் என்று வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்தார்.

பெற்றுக்கொள்ளும் நெல் தொடர்பாக ஒரு தரவுத்தள அமைப்பை உருவாக்குவதும், நெல் இருப்புகளை மறைக்க முடியாத ஒரு திட்டத்தை உருவாக்குவதும் இதன் நோக்கம் என்று பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

தட்டுப்பாடு இல்லாமல் அரிசி வழங்கும் நோக்கில் அரசு நெல் கொள்முதல் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

நெல் மற்றும் அரிசிக்கான உத்தரவாத விலையை ஒரே நேரத்தில் தீர்மானித்து வர்த்தமானியில் வெளியிட அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

The post நெல் கொள்வனவு செய்யும் ஆலை உரிமையாளர்கள் பதிவு செய்வது கட்டாயம் appeared first on Oruvan.com.