Reduction Archives - Oruvan.com

உப்பு விலை குறைப்பு
அயடின் கலந்த லக் உப்பின் விலையைக் லங்கா உப்பு நிறுவனம் குறைத்துள்ளது.

நிறுவனத்தின் தலைவர் இன்று புதன்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனை தெரிவித்தார்.

இதன்படி, 400 கிராம் அயடின் கலந்த உப்பு தூள் பொதியொன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

1 கிலோகிராம் அயடின் கலந்த உப்பு தூள் பொதியொன்றின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த வாரம் முதல் 400 கிராம் உப்பு தூள் பொதியொன்று 100 ரூபாவுக்கும், 1 கிலோகிராம் உப்பு தூள் பொதியொன்று 200 ரூபாவுக்கும், 1 கிலோகிராம் கல் உப்பு தூள் பொதியொன்று 150 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும்

The post உப்பு விலை குறைப்பு appeared first on Oruvan.com.

நாடாளுமன்ற பணிக்குழாமினரின் உணவுக் கட்டணம் குறைப்பு
ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்ற பணிக்குழாமினரின் கோரிக்கைகளுக்கமைய, ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது.

அந்த குழுவின் தலைவர் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நேற்று (20) நாடாளுமன்றத்தில் குழு கூடியபோது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, நாடாளுமன்ற பணிக்குழாமினருக்கான உணவு கட்டணங்களை நிர்வாக தர அதிகாரிக்கு மாதம் 4,000 ரூபாவாகவும், நிர்வாக தரமற்ற ஊழியருக்கு மாதம் 2,500 ரூபாவாகவும் வசூலிக்க நாடாளுமன்றகுழு தீர்மானித்துள்ளது.

மேலும், மே 23 ஆம் திகதி குழுவால் தீர்மானிக்கப்பட்டபடி, நாடாளுமன்ற பொது உணவகத்தில் உணவுகளை கொள்வனவு செய்யும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகள், பொலிஸ் அதிகாரிகள், ஜனாதிபதி/பிரதமர் பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் ஊடகவியாளாலர்களுக்கும் தற்போது வசூலிக்கப்படும் உணவுக் கட்டணங்களை மாற்றமின்றி பேணுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் நுவரெலியாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடுமுறை இல்லத்தின் ஒரு பகுதியை நாடாளுமன்ற ஊழியர்களுக்காக ஒதுக்குவது தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

The post நாடாளுமன்ற பணிக்குழாமினரின் உணவுக் கட்டணம் குறைப்பு appeared first on Oruvan.com.

நாடாளுமன்ற நிர்வாக அதிகாரிகளுக்கான எரிபொருள் குறைப்பு – சுற்றறிக்கை வெளியீடு
நாடாளுமன்றச் செயலாளர் நாயகம்  உள்ளிட்ட நாடாளுமன்ற நிர்வாக அதிகாரிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டைக் குறைத்து விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரை செயலாளர் நாயகத்திற்கு வரம்பற்ற எரிபொருள் வழங்கப்பட்ட நிலையில் இனிவரும் காலங்களில் மாதத்திற்கு 220 லிற்றர் எரிபொருள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதிச் செயலாளர் பெறும் எரிபொருளின் அளவும் மாதத்திற்கு 165 லீற்றராகக் குறைக்கப்பட்டுள்ளது.

உதவிச் செயலாளர் நாயகம் மற்றும் துறைத் தலைவர்கள் பெறும் எரிபொருளின் அளவை மாதத்திற்கு 135 லிற்றராகவும், செயலாளர் நாயகத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் பெறும் எரிபொருளின் அளவை மாதத்திற்கு 115 லிற்றராகவும் குறைக்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கையின்படி, எரிபொருள் கட்டுப்பாடுகள் 02 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன்.

நாடாளுமன்றத் தலைவர்கள் கடந்த காலங்களில் அதிகமாக எரிபொருளைப் பயன்படுத்துவதாக வெளியான தகவல்களையடுத்து, அவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர எரிபொருள் கொடுப்பனவைக் குறைக்க நாடாளுமன்ற பணியாளர் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் அண்மையில் தீர்மானிக்கப்பட்டு

The post நாடாளுமன்ற நிர்வாக அதிகாரிகளுக்கான எரிபொருள் குறைப்பு – சுற்றறிக்கை வெளியீடு appeared first on Oruvan.com.

மின் கட்டண குறைப்பு நிலுவையில்!
நிதி அமைச்சின் பரிந்துரையின்படியே மின் கட்டண நிவாரணத்தை மக்களுக்கு வழங்குவது தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

பிரதான சிங்கள பத்திரிகையொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மேற்பார்வை அதிகாரம் நிதி அமைச்சரிடமே உள்ளதாகவும் மின் கட்டணத்தை 20 வீதத்தால் குறைப்பது நிதி அமைச்சரின் பரிந்துரையின் கீழ் இடம்பெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மலிவு விலையில் மின்சாரக் கட்டணம் நிறுவப்பட வேண்டும் என மின்சார சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகிய இரு நிறுவனங்களும் நிதி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் உள்ளதாக அவர் வெளிப்படுத்தினார்.

அனைத்து மின் நுகர்வோருக்கும் சலுகையாக மின் கட்டணமானது 20 வீதத்தால் குறைக்கப்பட்டது.

கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த மின் கட்டண குறைப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post மின் கட்டண குறைப்பு நிலுவையில்! appeared first on Oruvan.com.

அரசாங்க உத்தியோகத்தர்களை குறைப்பது தொடர்பிலான எதிர்பார்ப்பு இல்லை – நலிந்த
அரசாங்க உத்தியோகத்தர்களை குறைப்பது தொடர்பிலான எதிர்பார்ப்பு இல்லையென சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

அரச சேவையில் மக்களை விளைத்திறனுடனும் வினைத்திறனுடனும் ஈடுபடுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.

அரசாங்க உத்தியோகத்தர்களை குறைப்பது தொடர்பிலான எந்தெவொரு எதிர்பார்ப்பும் இல்லை.

சுகாதார அமைச்சின் கீழ்நிலையில் உள்ள பெரும்பாலான ஆட்சேர்ப்புகள் சேவை தேவைகளை விட அரசியல் தேவைகளுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன

எவ்வாறு ஆட்சேர்ப்பு நடந்தாலும், அரசுப் பணியில் இணைந்து அதன் மூலம் வாழ்க்கையைத் திட்டமிட்டு,

சிலர் வங்கிக் கடன் பெற்றிருக்கிறார்கள்.

ஆனால் அவர்களுக்காக அரசாங்கம் அதிக பணம் செலவிடுகிறது. பொது சேவையானது பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்க நிர்வகிக்கப்படுகிறது. அரசு சேவை மிகவும் சுமையாக உள்ளது, அதற்காக அரச ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பது அர்த்தமல்ல” என அமைச்சர் மேலும் கூறினார்.

The post அரசாங்க உத்தியோகத்தர்களை குறைப்பது தொடர்பிலான எதிர்பார்ப்பு இல்லை – நலிந்த appeared first on Oruvan.com.

2025 ஆம் ஆண்டு பாடசாலைகள் நடைபெறும் நாட்கள் குறைப்பு
வருடத்தில் 210 நாட்கள் பாடசாலை நாட்களாக காணப்பட்ட நிலையில் 2025 ஆம் ஆண்டு பாடசாலை நாட்களை

181 நாட்களாக குறைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதிகளவிலான பொது விடுமுறைகள் மற்றும் பாடசாலைகளின் முதலாம் தவணை தாமதமாகத் தொடங்குவதால்,

அரசப் பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நடைபெறும் நாட்களை 181 ஆக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையை நிறைவு செய்யும் வகையில் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை முதல் மூன்று வாரங்களுக்கு பாடசாலைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை ஆண்டு தொழில்நுட்ப ரீதியாக ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

2025 ஆம் ஆண்டிற்கான 26 பொது விடுமுறை நாட்களில், நான்கு மட்டுமே வார இறுதி நாட்களில் உள்ளது.

ஏனைய அனைத்து விடுமுறை நாட்களும் வார நாட்களில் அமைந்துள்ளது.

இதனால் 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

The post 2025 ஆம் ஆண்டு பாடசாலைகள் நடைபெறும் நாட்கள் குறைப்பு appeared first on Oruvan.com.