recorded Archives - Oruvan.com

இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்த தங்கத்தின் விலை
தங்கத்தின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக இலங்கை தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 09 ஆம் திகதி 07 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்த தங்கத்தின் விலை நேற்றுவரை மாற்றமின்றி இருந்தது.

இதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 300,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டதுடன், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 277,500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில், இன்றைய (12) நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 299,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 276,600 ரூபாவாக, விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்த தங்கத்தின் விலை appeared first on Oruvan.com.

30 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பகிடிவதை சம்பவங்கள் பதிவு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 30 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பகிடிவதை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குற்ற புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு ,சப்ரகமுவ மற்றும் ஒலுவில் பல்கலைக்கழகங்களில் அதிகளவான பகிடிவதைகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றவாளிகள் கண்டறியப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடளிக்க, 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ள முடியும்.

இவ்வாறு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் இரகசியமாக பரிசீலிக்கப்படும் என்பதுடன், உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 30 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பகிடிவதை சம்பவங்கள் பதிவு appeared first on Oruvan.com.

19 நாட்களில் 8 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு
இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்று (20) காலை வரையிலான 19 நாட்களில் 8 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களுள் நால்வர் திட்டமிட்ட குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 5 பேர் காயமடைந்தனர்.

நேற்று பிற்பகல் கலஹா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 24 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

The post 19 நாட்களில் 8 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு appeared first on Oruvan.com.

வெல்லவ பிரதேசத்தில் மூன்று வாரங்களில் 15 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு
குருநாகல் வெல்லவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் (24) மாலை இளம் வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, இந்த சம்பவம் தொடர்பிலான முதற்கட்ட விசாரணைகளில் சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெல்லவ பிரதேசத்தில் கடந்த மூன்று வாரங்களில் இடம்பெற்ற 15ஆவது துப்பாக்கிச் சூட்டு சம்பவமாக இது பதிவாகியுள்ளது.

இவ்வாண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெல்லவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் (24) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த இளம் வர்த்தகர் 32 வயதுடையவர் ஆவார்.

அவருடைய மனைவிக்கு 30 வயது நிரம்பியுள்ள நிலையில் உயிரிழந்த நபர் இரு பிள்ளைகளின் தந்தையுமாவார்.

அவர்கள் வெல்லவ வீட்டுத் தொகுதியின் வீடு ஒன்றில் வாடகைக்கு வசித்த வந்துள்ளனர்.

வீடு நான்கு புறமும் சுவர்களால் சூழப்பட்டுள்ளதுடன், இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ள வாடகைக் கொலையாளி, பக்கத்து வீட்டு நிலத்தில் உள்ள மாமரத்தில் ஏறி கொலை இலக்கை மேற்கொண்டிருப்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு T56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மிகவும் அனுபவம் வாய்ந்த துப்பாக்கி கையாளுபவர் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர் சுட்ட ஐந்து தோட்டாக்களில் நான்கு கொலை செய்யப்பட்ட இளம் தொழிலதிபரை தாக்கியுள்ளதுடன் மீதமுள்ள ஒன்று அவரது மனைவியைத் தாக்கியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளம் வர்த்தகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பிலான தீவிர விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post வெல்லவ பிரதேசத்தில் மூன்று வாரங்களில் 15 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு appeared first on Oruvan.com.

கடந்த 24 மணித்தியாலங்களில் 13 உயிரிழப்புகள் பதிவு
நாட்டின் பல பகுதிகளில் நேற்றைய தினம் கோர விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 24 மணித்தியாலங்களில் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இரு இளைஞர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹட்டன், மாரவில, அம்பலாந்தோட்டை, கம்பளை, ஹெட்டிபொல, மட்டக்களப்பு, மிரிஹான, கெபித்திகொல்லாவ மற்றும் சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று (21.12.2024) இந்த விபத்துக்கள் சம்பவித்துள்ளன.

The post கடந்த 24 மணித்தியாலங்களில் 13 உயிரிழப்புகள் பதிவு appeared first on Oruvan.com.

அரச வங்கி ஒன்றில் 107 மோசடி சம்பவங்கள் பதிவு!
அரசாங்கத்திற்கு சொந்தமான வங்கி ஒன்றில் இடம்பெற்றுள்ள 107 மோசடி சம்பவங்கள் காரணமாக அந்த வங்கியில் 81,715,811 ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த வங்கியின் அட்டை மையத்தில் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள பல வங்கிக் கிகைகளில் ஏற்பட்டுள்ள மோசடி சம்பவங்கள் காரணமாக ஏற்பட்ட நட்டங்களால் இவ்வாண்டு மே மாதம் 31ஆம் திகதியாகும் போது இந்த நட்ட மிகுதி காணப்படுவதாக கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தன்னியக்க வங்கி இயந்திரங்களில் (ஏடிஎம்) மோசடியான முறையில் பணத்தை பெற்றுக்கொள்ளுதல், அடகு நகைகளை மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளுதல், தன்னியக்க வங்கி இயந்திரங்களில் (ஏடிஎம்) பணத்தை ஏற்றும் போது மோசடி செய்தல், வங்கி ஊழியர்கள் மற்றும் பிற வெளி தரப்பினரால் சேமிப்ப கணக்குகளில் இருந்து பணம் பெற்று, க்ளைம் வவுச்சர்கள் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பணத்தை மோசடி செய்தல், நிலையான வைப்புத்தொகையில் பணம் எடுத்தல், ஈ வணிக பரிவர்த்தனைகள் மூலம் பணத்தை ஏமாற்றுதல் போன்றவற்றின் மூலம் இந்த பண மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி 8,096,767 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளன. மொத்த மோசடிகளில் 30 வங்கியின் ஊழியர்களால் செய்யப்பட்டவை மற்றும் மோசடி செய்யப்பட்ட மொத்தத் தொகை 89.88 மில்லியன் ரூபாய் எனவும் 60 வீதம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

The post அரச வங்கி ஒன்றில் 107 மோசடி சம்பவங்கள் பதிவு! appeared first on Oruvan.com.