Ratnapura Archives - Oruvan.com

ஹொரனை – இரத்தினபுரி வீதியில் வாகன விபத்து – 15 பேர் காயம்
ஹொரனை – இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று, லொறி ஒன்றுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் இடங்கொட மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கிரியெல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

The post ஹொரனை – இரத்தினபுரி வீதியில் வாகன விபத்து – 15 பேர் காயம் appeared first on Oruvan.com.

பிரதமரின் பாதுகாப்பு வாகன தொடரணி மீது விபத்தை ஏற்படுத்திய மாணவர் கைது
பிரதமரின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் 17 வயது மாணவர் ஒருவர் எஹெலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய கடந்த 15ஆம்த திகதி இரத்தினபுரிக்கு நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார்.

இதன்போது எஹெலியகொட மொரகல பகுதியில் எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் பிரதமரின் வாகனத் தொடரணி மோதியுள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில், விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளை ஓட்டுநர் எஹெலியகொட பகுதியைச் சேர்ந்த மாணவர் ஆவார்.

விசாரணையில் அவருக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும், விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் வாங்கப்பட்டு இரண்டு நாட்களே ஆகிறது என்றும், பதிவு நடவடிக்கைகள் இன்னும் முடிக்கப்படவில்லை என்றும் எஹெலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பாதுகாப்பு அதிகாரிகளாக செயற்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகளும், மோட்டார் சைக்கிளின் சாரதியும் காயமடைந்து இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் மீது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியமை, விபத்தைத் தவிர்க்கத் தவறியமை மற்றும் பதிவு இல்லாமல் வாகனம் ஓட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரதமரின் பாதுகாப்பு வாகன தொடரணி மீது விபத்தை ஏற்படுத்திய மாணவர் கைது appeared first on Oruvan.com.

கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று கூறி, சந்தேக நபர் சிறையிலிருந்து தப்பியோட்டம் – இரு அதிகாரிகள் பணிநீக்கம்
பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தின் இரண்டு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சார்ஜென்ட் ஒருவரும் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவரும் இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ“ ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

பொலிஸ் நிலையத்தில் இருந்த சந்தேக நபர், நேற்று (30) கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியதாகவும், அறையின் கதவு திறக்கப்பட்டபோது பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேக நபர் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், சமீபத்தில் பாணந்துறை பகுதியில் நடந்த பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும் அவர் தொடர்புடையவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரியும், அப்போது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தலைமறைவான சந்தேக நபரைக் கைது செய்ய சிறப்பு பொலிஸ் குழு ஒன்று களமிறக்கப்பட்டுள்ளதாகவும பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி காவல் துறை கண்காணிப்பாளர் எஃப்.யு. வுட்லர் மேலும் தெரிவித்தார்.

The post கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று கூறி, சந்தேக நபர் சிறையிலிருந்து தப்பியோட்டம் – இரு அதிகாரிகள் பணிநீக்கம் appeared first on Oruvan.com.

இரத்தினபுரியில் நூறிற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு டெங்கு காய்ச்சல்
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் மூன்று மருத்துவர்கள் உட்பட 147 பணியாளர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அதிக ஆபத்துள்ள டெங்கு வலயமாக இரத்தினபுரி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரப் பணியாளர்கள் டெங்குவால் பாதிக்கப்படுகையில் ​​ம ருத்துவ சேவைகளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ள

வேண்டியுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லையென அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், இரத்தினபுரி மாவட்டத்தில் 1,311 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இப்பகுதியில் நோயைப் பரப்பும் முதன்மை நோய்க்கிருமியாக ஏடிஸ் அல்போபிக்டஸ் நுளம்பை சுகாதார அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

The post இரத்தினபுரியில் நூறிற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு டெங்கு காய்ச்சல் appeared first on Oruvan.com.