Ranil Archives - Oruvan.com

ரணில் மற்றும் சஜித் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரு தரப்பு இணைவுக்காக இரு கட்சிகளில் இருந்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குழுவில் உள்ளவர்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, பொது வேலைத்திட்டத்தின் கீழ் இணைந்து பயணிப்பதற்குரிய இணக்கப்பாட்டை இரு தரப்புகளும் எட்டிய பின்னர், இரு கட்சிகளின்  தலைவர்களையும் சந்திக்க வைப்பதற்குரிய முயற்சியே இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இருவரும் இணைந்து கூட்டு செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

எவ்வாறாயினும் இரு கட்சிகளும் ஒரு கட்சியாக இணைவதற்கு இரு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

எனவே, பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைந்து, பொதுச் சின்னத்தில் – பொதுப் பட்டியலின் கீழ் தேர்தல்களைச் சந்திப்பது பற்றி தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post ரணில் மற்றும் சஜித் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Oruvan.com.

தான் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த ரணில்
தான் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) விசேட உரையொன்றை வெளியிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

குறித்த முறைப்பாட்டை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தற்போதைய செயலாளரினால் தாக்கல் செய்யப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தாம் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து இங்கிலாந்து திரும்பியதாகவும், கொழும்பு திரும்புவதற்கு

முன்பு ஒரு இரவை அங்கேயே கழித்ததாகவும் குறிப்பிட்டதுடன் இந்த செயன்முறை முற்றிலும் உத்தியோகபூர்வ விஜயம் என்றும் அவர் கூறினார்.

தாம் அங்கு இருந்ததால் தமக்கு கிடைத்த உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்றுக்கொண்டதாகவும், அவ்வாறான உத்தியோகப்பூர்வ

அழைப்பு விடுக்கப்படாது இருந்திருப்பினும் தாம் இங்கிலாந்திலேயே அன்றைய தினம் இருந்திருப்பேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

The post தான் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த ரணில் appeared first on Oruvan.com.

நேபாளத்தில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் குறித்து ரணில் விக்ரமசிங்க கண்டனம்
நேபாளத்தில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட அனைத்து வன்முறை சம்பவங்களையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வன்மையாகக் கண்டித்துள்ளார்.

நேபாளத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, முன்னாள் பிரதமரின் இல்லத்திற்குத் தீவைக்கப்பட்டமை, மற்றும் முன்னாள் பிரதமரின் மனைவி உயிரிழந்த சம்பவமும் மிகுந்த வருத்தத்திற்குரியது என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வெளிவிவகார அமைச்சர் மீதான தாக்குதலும் துயரத்திற்குரிய சம்பவமாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை எரிக்கப்பட்டது நேபாளத்தின் ஜனநாயகத்திற்கு பெரும் அவமரியாதை என்றும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் புத்தர் பிறந்த நேபாளம் இலங்கைக்கு ஒரு தனித்துவமான நாடு என்றும், அத்தகைய நாட்டில் இதுபோன்ற செயல்கள் இடம்பெறுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நேபாளத்தில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் குறித்து ரணில் விக்ரமசிங்க கண்டனம் appeared first on Oruvan.com.

ரணில் விக்ரமசிங்கவின் விசேட உரை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 06 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் மாநாடு எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி இந்த விசேட உரையினை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 26 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளை பரிசீலித்த பின்னர், கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதியை தலா 05 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அதே நாளில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது.

அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மறுநாள், மருத்துவ பரிந்துரைகளின் பேரில் முன்னாள் ஜனாதிபதியை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (29) வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்.

The post ரணில் விக்ரமசிங்கவின் விசேட உரை appeared first on Oruvan.com.

வைத்தியசாலையிலிருந்து வௌியேறிய ரணில் விக்ரமசிங்க
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளார்.

அவர் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார்.

ரணில் விக்ரமசிங்க கடந்த 23 ஆம் திகதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

The post வைத்தியசாலையிலிருந்து வௌியேறிய ரணில் விக்ரமசிங்க appeared first on Oruvan.com.

ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணையை ஒக்டோபர் மாதம் எடுத்துக்கொள்ள தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான சட்ட நடவடிக்கைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி மீள எடுத்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பொது நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, கடந்த 22 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அதனுடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகள் இன்று செவ்வாய்க்கிழமை (26) நீதிமன்றில் ஆராயப்பட்டது.

இதன்போது முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பினர் நீதிமன்றில் முன்வைத்த சாட்சியங்கள் மற்றும் சமர்ப்பணங்களை ஆராய்ந்ததன் பின்னர் முன்னாள் ஜனாதிபதியை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

The post ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணையை ஒக்டோபர் மாதம் எடுத்துக்கொள்ள தீர்மானம் appeared first on Oruvan.com.

ரணிலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை விமர்சிப்பது குறித்து எச்சரிக்கை
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை விமர்சிப்பது தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (24) விசேட ஊடக சந்திப்பை நடத்தி இதனை அறிவித்தது.

நாடாளுமன்றத்துக்கு வெளியே இந்த உத்தரவை விமர்சிக்கும் வகையில் அறிக்கைகள் வெளியிடப்பட்டால், அது நீதிமன்ற அவமதிப்புக்கு சமமாகிவிடும் என்று சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

மேலும் இவ்வாறான அறிக்கைகள் பொதுமக்களிடையே அமையின்மையை ஏற்படுத்தினால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கப்படாமல் இருப்பதற்கு அது ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post ரணிலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை விமர்சிப்பது குறித்து எச்சரிக்கை appeared first on Oruvan.com.

ரணில் விக்ரமசிங்க அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் மிகுந்த சோர்வு காரணமாக ரணில் விக்ரமசிங்க அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்த  ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசியவைத்தியசாலையில்  இன்று பிற்பகல் அனுமதிக்கப்பட்டார்.

அவரது நோய் நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள் கொழும்பு  தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்துரைத்தனர்.

The post ரணில் விக்ரமசிங்க அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம் appeared first on Oruvan.com.

ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்
சிறைச்சாலை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசியவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நோய் நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள் கொழும்பு  தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்துரைத்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை (22) இரவு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக முன்னாள் ஜனாதிபதியை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்தனர்.

மேலும் முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் சிறைச்சாலை வைத்தியர்களும் அவருக்கு வீட்டு உணவை வழங்குமாறு பரிந்துரைத்திருந்தனர். இதற்மைய, சிறைச்சாலை தலைமையகத்தின் அனுமதியும் கிடைத்தது.

The post ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம் appeared first on Oruvan.com.

கைது செய்யப்படுவதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்து
தான் நாட்டிற்காக மட்டுமே செயற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் இவ்வாறு கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை (23) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர்

அகில விராஜ் காரியவசம், ரணில் விக்ரமசிங்கமவின் இந்த குரல் பதிவை ஊடகங்களுக்கு வௌியிட்டார்.

அந்த குரல் பதிவில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருப்பதாவது,

“தான் தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல, நாட்டிற்காக மட்டுமே செயற்பட்டேன்

நான் எப்போதும் நாட்டிற்காகவே உழைத்திருக்கிறேன். நான் தனிப்பட்ட காரணங்களுக்காக உழைத்ததில்லை. இந்த ஆட்சியின் உண்மை முகம் இப்போது வெளிவருகிறது.

எல்லா இடங்களிலும் நடைபெறும் இதுபோன்ற அரசியல் நடவடிக்கைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை.” என ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

The post கைது செய்யப்படுவதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்து appeared first on Oruvan.com.