Ramalingam Chandrasekar Archives - Oruvan.com

வட மாகாணத்தில் GovPay வழியாக போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை ஆரம்பம்
அரசாங்க டிஜிட்டல் கட்டணத் தளமான (GovPay) மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை இன்று 28.10.2025 கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் (DIG) திலக் சி ஏ தனபால, வன்னிப்பிரிவுக்கான பிரதி பொலிஸ்மா அதிபர் எச்.ஏ.கே.ஏ இந்திக்க ஹப்புகொட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிக்கான பிரதி பொலிஸ்மா அதிபர் ஜே.ஏ சந்திரசேன, யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைக்கான பிரதி பொலிஸ்மா அதிபர் ஜி.எச் மாரப்பன, வவுனியா பிரிவு சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் [SSP) டபிள்யூ.ஏ சோமரத்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஊடகங்களிடம் கூறியவை வருமாறு,

‘ டிஜிட்டல் மயமாக்கலை நாடு முழுவதும் அமுல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

கட்டணங்கள் மட்டுமின்றி அபராதத்தையும் (GovPay) மூலம் செலுத்துவதன் மூலம் கால வீணடிப்பு குறைக்கப்படுகின்றது. பொலிஸாரின் சேவையையும் இது இலகுப்படுத்தும். மக்களுக்கும் நேர வீணடிப்பு ஏற்படாது.

(GovPay) மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் நடைமுறை மேல் மற்றும் தென்மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்டது. மூன்றாவதாக தற்போது வடக்கு மாகாணத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்குரிய உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில பொலிஸாரின் தவறான நடவடிக்கையால் ஒட்டுமொத்த பொலிஸ் துறைக்கும் களங்கம் ஏற்படும் நிலை காணப்பட்டது.

நவீன முறைமை என்பது வெளிப்படை தன்மையானது. எனவே, பொலிஸார் மீதான விமர்சனங்களுக்கும் இதன்மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இன்றைய நவீன உலகில், நவீன தொழில்நுட்பத்தை நோக்கி நாமும் நகரவேண்டும். அப்போதுதான் உலகை வென்று முன்நோக்கி செல்ல முடியும்.

இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டத்தை மக்கள் மத்திக்கு கொண்டு செல்லும் பொறுப்பை எமது ஊடக தோழர்கள் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்.” – என்றார்.

The post வட மாகாணத்தில் GovPay வழியாக போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை ஆரம்பம் appeared first on Oruvan.com.

இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன.

இந்த பிசாசுகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் மீள் ஆரம்பிப்பு நிகழ்வு மட்டுவிலில் இன்று காலை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராசா, ஜெ.றஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய அமைச்சர்,

பொருளாதார ரீதியில் இலங்கை வேகமாக முன்னேறி வருகின்றது என தரவுகள் கூறுகின்றன. அதேபோல இலஞ்ச, ஊழல் ஒழிக்கப்பட்டு வருகின்றது. இனவாதம் மற்றும் மதவாதம் என்பவற்றுக்கும் முடிவு கட்டப்பட்டு வருகின்றது.

இலங்கையில் வாழும் மூவின மக்களும் ஓரணியில் திரள வேண்டும். அவ்வாறு நடந்தால் இலகுவில் முன்னோக்கி சென்று விடலாம். இதனையே எமது ஜனாதிபதி தோழர் எல்லா இடங்களிலும் வலியுறுத்தி வருகின்றார்.

எனவே, இந்த இனவாதம் என்ற பிசாசுக்கு எமது நாட்டில் நிரந்தமாக முடிவு கட்ட வேண்டும். அதற்குரிய நடவடிக்கையை நாம் முன்னெடுக்கும் போது பழைய பிசாசுகள் மீண்டெழுவதை காண முடிகின்றது.

பழைய திருடர்கள் ஓரணியில் திரண்டுள்ளனர். அதிகாரத்துக்கா சதி மற்றும் சூழ்ச்சிகளை செய்ய முடியுமா என்பது பற்றி ஆராய்கின்றனர்.

இனவாதத்தை தூண்டியேனும் தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்பது பற்றியும் கதைக்கின்றனர். இது பற்றியே ரணிலும், மகிந்தவும் அவரது வீட்டில் மந்திராலோசனை செய்கின்றனர்.

ரணிலும், மகிந்தவும் நம்பர் வன் திருடர்கள். கடந்த காலங்களில் மத்திய வங்கியில் கொள்ளையடித்தவர்தான் ரணில். இந்நாட்டில் போதைப்பொருள் வியாபாரிகளை பாதுகாத்தவர்தான் ராஜபக்ச.

எனவே, இவர்களிடமிருந்து நாட்டை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எமது பிள்ளைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்.” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் appeared first on Oruvan.com.

மன்னாரை மீட்டெடுப்பதற்கு எங்களைத் தவிர வேறு யாரும் கிடையாது – அமைச்சர் சந்திரசேகரன்
“போராட்ட காரர்கள் மன்னாரை மீட்டெடுப்போம் என போராட்டத்தை கட்டவிழ்த்து விட்டு இருக்கிறார்கள், மன்னாரை மீட்டெடுப்பதற்கு எங்களைத் தவிர வேறு யாரும் கிடையாது, இந்த போராட்டத்தின் பின் ஓர் அரசியல் காய் நகர்த்தல் இருக்கின்றது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அசராங்கம் முன்னெடுத்துள்ள திட்டத்தினால் மக்களுக்கு பாதிப்பு என நிரூபிக்கப்படுமானால் நாங்களும் கூட உங்களோடு சேர்ந்து போராடுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்” எனவும் அவர் கூறியுள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

மன்னார் காற்றாலை மின் நிலையம் அமைப்பது தொடர்பாக இன்று பாரிய ஒரு பிரச்சனையை ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் அதிகாலை இக்கற்றாலை மின்னிலையம் அமைப்பதற்கான உபகரணங்களை வாகனங்களில் கொண்டு வரும்போது பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதற்கு பொலிஸார் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதாகவும் செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது

இவ் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியுடன் உரிய தரப்புகளுடன் பேசப்பட்டது. தற்போது மின்சார கம்பங்களை நிறுவுவதற்குரிய குழிகள் தோண்டப்பட்டுள்ளது. அவற்றை அமைப்பதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன

எனவே அதனை அமைப்பதற்கு விடுங்கள் என மக்களை நாம் கேட்டுக் கொள்கின்றோம். போராட்டத்தை கட்டவிழ்த்து விட்டவர்களை பார்க்கின்ற போது கடந்த காலத்திலே காற்றாலை மின் நிலையத்தை அமைக்கும் போது அதனை திறந்து வைக்கும் போது நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.

அந்த நிறுவனங்களோடு ஏதோ ஒரு வகையில் கொடுக்கல் வாங்கல்களை செய்தவர்கள் இன்றைக்கு இந்த போராட்டத்தின் பின்னால் இருக்கிறார்கள்

போராட்ட காரர்கள் மன்னாரை மீட்டெடுப்போம் என போராட்டத்தை கட்டவிழ்த்து விட்டு இருக்கிறார்கள். மன்னாரை மீட்டெடுப்பதற்கு எங்களைத் தவிர வேறு யாரும் கிடையாது

மன்னாருக்கு இதன் மூலம் எந்த பாதிப்பும் இல்லை, மன்னாருக்கு அதிகளவான பாதிப்பை ஏற்படுத்துவது கனிய மணல் அகழ்வு அதனை நாம் இப்போது நிறுத்தி இருக்கிறோம்.

மக்களிடம் நாம் கேட்கின்றோம் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் செயற்பாடு தொடர்பாக உலகம் முழுக்க தேடிப் பார்க்கின்ற போது இலங்கையில் இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட காற்றாலை மின் நிலையங்களை பாருங்கள்.

அந்தப் பிரதேசங்களை பாருங்கள், அந்தக் கடற் பகுதிகளை பாருங்கள், அங்கே மீன் இனங்கள் வரவில்லையா, பறவை இனங்கள் வரவில்லையா, உயிரினங்கள் வரவில்லையா? இயற்கைக்கு எந்தவிதமான மாசு ஏற்பட்டு இருக்கின்றதா? என்பதை தேடி பாருங்கள்.

அவ்வாறு மாசு ஏற்பட்டிருந்தால் அவ்வாறான தாக்கங்கள் ஏற்பட்டிருந்தால் அவை நிரூபிக்கப்படுமானால் நாங்களும் கூட உங்களோடு சேர்ந்து போராடுவதற்கு தயாராக இருக்கிறோம்.

கடந்த காலங்களில் மன்னாரில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கின்ற போது எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் தற்போது எதிர்ப்பை தெரிவிப்பது இவர்களுக்கு பின்னால் ஓர் அரசியல் காய் நகர்த்தல் இருக்கின்றது என்பது நமக்கு புலப்படுகின்றது

மன்னாரில் வாழ்கின்ற மக்களிடம் நாங்கள் அன்பாக கேட்டுக் கொள்கின்றோம் இன்று விரிக்கப்பட்டுள்ள பொறியியல் நீங்கள் சிக்க வேண்டாம், இந்த பொறியானது உங்களுக்கு மட்டுமல்ல எதிர்கால சந்ததிக்கும் வைக்கப்பட்டுள்ள பொறி.

உங்கள் பிரதேசத்துக்கான பொறி உங்கள் பிரதேசத்துக்கு எந்த அபிவிருத்திகளையும் வராமல் தடுக்கின்ற பொறி எனவே மன்னார் மக்கள் இவ்விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விஞ்ஞான ரீதியாகவும் தர்கரீதியாகவும் மக்களை பாதிக்கின்ற எந்த செயல் திட்டத்தையும் நாம் ஒருபோதும் செய்ய மாட்டோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

The post மன்னாரை மீட்டெடுப்பதற்கு எங்களைத் தவிர வேறு யாரும் கிடையாது – அமைச்சர் சந்திரசேகரன் appeared first on Oruvan.com.

சிறிய குற்றம், இது பெரிய குற்றம் என பிரித்து பார்ப்பதுகூட குற்றம்தான் – அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு
” சட்டம் தனது கடமையை சரிவர செய்யும்போது, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே கூட்டணி அமைத்து, அரசியல் பழிவாங்கல் புராணத்தை எதிரணிகள் ஓதி வருவதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மைத்திரி, மகிந்த மற்றும் சஜித் தரப்புகள் ஜனநாயகம் பற்றி பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பானதாகும்.” எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வியாபார இணைப்பு அலகும், முயற்சியாண்மைக் கற்கைநெறி மாணவர்களும் இணைந்து நடத்திய உலக முயற்சியாளர் தின விழாவும், மாபெரும் வர்த்தக சந்தையும் பல்கலைக்கழகத்தில் நேற்று (26.08.2025) சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர் பங்கேற்றிருந்தார். இந்நிகழ்வின் பின்னர் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

” உலக முயற்சியாளர்களை நாம் பாதுகாக்க வேண்டும், அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். ஆனால் ஊழல்வாதிகளை பாதுகாக்க கூடாது.

அவர்கள் சுதந்திரமாக சுற்றிதிரிவதற்கு இடமளிக்கவும் கூடாது. எனவே, முயற்சியாளர்களை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதுபோல்தான் ஊழல்வாதிகளுக்கு எதிராக கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தேங்காய் திருடினாலும் குற்றம்தான், மாங்காய் திருடினாலும் குற்றம்தான். டயமன்ட் திருடினாலும் குற்றம்தான். எனவே, அது சிறிய குற்றம், இது பெரிய குற்றம் என குற்றத்தை பிரித்து பார்ப்பதுகூட குற்றம்தான்.

கடந்தகாலங்களில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டம் தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளது. எனவேதான் தம்மை தற்காத்துக்கொள்வதற்காக கள்வர்கள் கூட்டு சேர்ந்துள்ளனர்.

இது ஜனநாயகத்துக்கான கூட்டணி அல்ல. மாறாக கள்வர்களை காப்பதற்கான கூட்டணியாகும்.

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தவர்கள், ஜனநாயகம் பற்றி கதைப்பது சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பான செயலாகும். நாட்டில் இன்று நீதி கட்டமைப்பு சுயாதீனமாக செயற்படுகின்றது. எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லை.

சட்டம் தனது கடமையை செய்வதற்குரிய வளங்களை நாம் வழங்கி வருகின்றோம். ஜனநாயகம் பற்றி எதிரணிகள் எமக்கு பாடம் எடுக்க வேண்டியதில்லை.

ஜனநாயகம் என்றால் என்னவென்பதை செயலில் காட்டியவர்கள் தான் நாம். கடந்த இரு தேர்தல்களின்போது ஜனநாயகம் எப்படி பாதுகாக்கப்பட்டது என்பது முழு உலகமும் அறியும்.” – என்றார்.

The post சிறிய குற்றம், இது பெரிய குற்றம் என பிரித்து பார்ப்பதுகூட குற்றம்தான் – அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு appeared first on Oruvan.com.

விரைவில் ராஜபக்சர்களும் கைது!! – அரசாங்க அமைச்சர் தகவல்
ராஜபக்சர்களும் விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் மோசடி செய்த யாரும் தப்ப முடியாது எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“ரணில் விக்கிரமசிங்க மீது சட்டம் பாய்வதற்கு முன்னர் அவருடன் இருந்தவர்கள், ரணிலை நெருங்க முடியாது, அவர் மிகப் பெரிய சர்வதேச இராஜதந்திரி, மிகவும் நரித்தந்திரமானர் அவருடன் விளையாட முடியாது என்றெல்லாம் கூறினார்கள்.

இவ்வாறு கூறியவர்கள் எல்லோருக்கு இப்போது தெரியவந்திருக்கும். ரணிலே கைது செயப்பட்டுள்ள நிலையில், ராஜபக்சர்கள் ஆட்டம் கண்டுள்ளனர்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தொடர்கதை. எனவே எதிர்வரும் நாட்களிலும் கைதுகள் இடம்பெறும்.

ஆகையினால் இந்த நாட்டில் மோசடி செய்த எவராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள். அது ரணிலாக இருந்தாலும், ராஜபக்சர்களாக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள்.

மக்களின் பணத்தை சூரையாடியவர்கள் படிப்படியாக சிறைக்கு செல்வதை தவிர்க்க முடியாது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இன்னும் ஒரு சில வாரங்களில் வடக்கிலுள்ள அரசியல் வாதிகளும் கைது செய்யப்படுவார்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.  விரைவில் அவர்கள் வாழ்வில் வசந்தம் தேடி வரும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post விரைவில் ராஜபக்சர்களும் கைது!!  – அரசாங்க அமைச்சர் தகவல் appeared first on Oruvan.com.

தையிட்டிக்கு விகாரைக்கு அமைச்சர் சந்திரசேகரர் இரகசியமாக சென்றாரா?
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு கடற்தொழில் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலர் ஆகியோர் நேற்றைய தினம் இரகசிய விஜயம் மேற்கொண்ட நிலையில், அங்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையிலான குழு சென்ற நிலையில் அது பரகசியம் ஆகியுள்ளது.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரை தொடர்பிலான பிரச்சனை தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் யாழ் . மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஆகியோர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை எவருக்கும் அறிவிக்காது இரகசியமான முறையில் சென்றுள்ளனர்.

இந்நிலையில், வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் , தவிசாளர் தலைமையில் உறுப்பினர்கள் சிலரும் விகாரைக்கு சென்று இருந்தனர்.

இதன்போது அங்கு கடற்தொழில் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலர் ஆகியோர் அங்கு நின்றிருந்தனர். அமைச்சர் குழாம் அங்கு வருகை தருவது தொடர்பில் தமக்கு எதுவும் அறிவிக்காது இரகசியமாக வந்தமை தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்கள் விசனம் தெரிவித்தனர்.

இரகசியமான முறையில் விகாரைக்கு சென்று பேச வேண்டிய தேவை ஏன் அமைச்சருக்கு ஏற்பட்டது என சபை உறுப்பினர்கள் தமக்குள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதேவேளை அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தையிட்டி விகாரை பிரச்னைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சந்திரசேகரர் தெரிவித்தார்.

யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற போது அமைச்சரும், மாவட்ட செயலரும் தையிட்டி விகாரைக்கு செல்வது தொடர்பில் எதனையும் குறிப்பிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post தையிட்டிக்கு விகாரைக்கு அமைச்சர் சந்திரசேகரர் இரகசியமாக சென்றாரா? appeared first on Oruvan.com.

யாழில் சுற்றுலா பயணிகளுடன் மூழ்கிய படகு – அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு
யாழ். குடாநாட்டில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

அத்துடன், கடல்போக்குவரத்து சேவை வழங்கும் படகுகளின் தரம் மற்றும் முன் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியன தொடர்பில் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுமாறு பொலிஸ் மற்றும் கடற்படையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

நெடுந்தீவைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சுற்றுலாப்பயணிகளை ஏற்றும் சிறிய ரக படகில் நெடுந்தீவுக்கு சென்று திரும்பும் போது படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு மூழ்கியுள்ளதுடன் பயணிகள் 12 பேர் 02 பணியாளர்கள் என 14 பேர் உயிராபத்து இன்றி மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சுற்றுலா படகில் இருந்து வெள்ளைக்கொடி காட்டுவதனை அவதானித்த அவ்வழியே சென்ற நெடுந்தீவு தனியார் படகான சபரிஷ் படகு பணியாளர்கள் விரைந்து செயற்பட்டு சேசமடைந்த கடலில் மூழ்கியவர்களை காப்பாற்றியுள்ளனர்.

கடற்படையினரும் முழு வீச்சுடன் செயற்பட்டுள்ளனர். இவர்களுக்கு எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கடல் பயணத்தின்போது பின்பற்ற வேண்டிய முன்பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் உரிய அறிவுறுத்தல்கள் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளன. அவை முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

The post யாழில் சுற்றுலா பயணிகளுடன் மூழ்கிய படகு – அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு appeared first on Oruvan.com.

யாழில் போராட்ட களத்திலிருந்து அமைச்சர் சந்திரசேகரம் வெளியேற்றம்
செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்ர்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.

மதியம் ஒரு மணியளவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் மற்றும் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோர் செம்மணி போராட்ட திடலுக்கு சென்றனர்.

இதன் பொழுது போராட்டகாரர்களால் யாழ் மாவட்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் மக்களால் வெளியேற்றப்பட்டார். அத்துடன் அவரது வாகனத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.

இதனையடுத்து விரைவாக குறித்த இடத்தை விட்டு அமைச்சர் வெளியேறினார் .

The post யாழில் போராட்ட களத்திலிருந்து அமைச்சர் சந்திரசேகரம் வெளியேற்றம் appeared first on Oruvan.com.

மோடியை பாதுகாப்பது எனது நோக்கம் அல்ல – அமைச்சர் சந்திரசேகர் கருத்து
எமது நோக்கம் இந்தியாவைக் காப்பாற்றுவதோ, மோடியை காப்பாற்றுவதோ அல்ல என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமரின் வருகை குறித்த கேள்விக்கு மேலும் பதிலளித்த அவர்,

மீனவர் பிரச்னை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி இந்தியப் பிரதமருடன்  கலந்துரையாடவுள்ளார்.  இந்தியப் பிரதமரின் வருகை வெறுமனே மீனவப் பிரச்சனைக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல.

இந்தியாவுக்கும் எமக்கும் எந்தவித பகையும் அல்ல. இந்திய மீனவர்களுக்கும் எமக்கும் எந்தவித கோபங்களும் இல்லை.

இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட ட்ரோலர்களைப் பயன்படுத்தி உங்களின் கடற்பரப்பில் நுழைய முடியாது. வடக்கில் உள்ள கடற்பரப்பை முற்றாக அளித்து ஒழிக்கும் நடவடிக்கையையே மேற்கொள்கிறார்கள்.

இந்த நடவடிக்கைகள் தொடருமாக இருந்தால் இன்னும் பத்து பதினைந்து வருடங்களில் கடல் பாலைவனமாக மாறுவதை தவிர்க்க முடியாது. இதனை யாரும் அனுமதிக்க முடியாது.

எனது வேலை இந்திய அரசாங்கத்தை பாதுகாப்பதோ, இந்தியத் தூதுவரைப் பாதுகாப்பதோ, இந்தியப் பிரதமரைப் பாதுகாப்பதோ அல்ல. எமது மீனவர்களைப் பாதுகாப்பதே.

அந்த வேலையை சரிவர செய்கின்றேன் என்று நான் நம்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

The post மோடியை பாதுகாப்பது எனது நோக்கம் அல்ல – அமைச்சர் சந்திரசேகர் கருத்து appeared first on Oruvan.com.