Qatar Archives - Oruvan.com

மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்!
மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான கத்தாரில் உள்ள அல் உதைத் விமானத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியுள்ளது.

ஈரானில் இருந்து இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது, அவற்றில் ஒன்று வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டது.

எனினும், இரண்டாவது ஏவுகணை விமானம் தளத்தில் விழுந்தது. இருப்பினும், தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல் தளத்தின் ஏவுகணை கண்டறிதல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை சேதப்படுத்தியதை இணையப் புகைப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இந்தத் தாக்குதல் தளத்தின் உபகரணங்களுக்கு ஒரு பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான சேதத்தை ஏற்படுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அல் உதைத், இப்பகுதி முழுவதும் அமெரிக்க நடவடிக்கைகளுக்கான முக்கிய கட்டளை மையமாகக் கருதப்படுகிறது.

The post மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்! appeared first on Oruvan.com.

கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் – அரபு நாடுகள் அவசர ஆலோசனை
காசாவில் இடம்பெற்றுவரும் மனிதாபிமான நெருக்கடியை தடுக்க இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுப்பதற்கு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் தீர்மானித்துள்ளன.

கடந்த வாரம் கட்டார் நாட்டில் உள்ள ஹமாஸ் அமைப்பின் தலைமையகத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது

இந்நிலையில் கட்டாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விவாதிக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுடனான அவசர ஆலோசனை கூட்டத்துக்கு கட்டார் அழைப்பு விடுத்தது.

இதன்படி அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவசர உச்சி மாநாடு கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று நடைபெற்றது.

இதன்போது கட்டார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி, துருக்கி அதிபர் எர்டோகன், பலஸ்தீன ஜனாதிபதி மக்மூத் அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் பல்வேறு இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதலை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

The post கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் – அரபு நாடுகள் அவசர ஆலோசனை appeared first on Oruvan.com.

கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு
கட்டாரிலுள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பிடங்களிலேயே இருக்குமாறு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

அரசு மற்றும் தூதரக அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அவசர நிலைமைகளின் போது 109471182587 என்ற இலக்கத்தை தொடர்புகொள்ள முடியுமென கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

The post கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு appeared first on Oruvan.com.

கட்டார் மீது தாக்குதல் – ஈரானுக்கு நன்றி தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப்
கட்டார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை முன்கூட்டியே அறிவித்தமைக்கு ஈரானுக்கு நன்றி தெரிவிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது சமூக ஊடக பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரானின் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாக கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது ஈரான் நேற்று இரவு ஏவுகணை தாக்கதலை நடத்தியிருந்தது.

இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள டிரம்ப்பு, ஈரானிய பதிலடியை ‘மிகவும் பலவீனமானது’ என்றும், எனினும், ‘முன்கூட்டிய அறிவிப்புக்கு’ நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் பதில் தாக்குதல் “மிகவும் பலவீனமானது” என்று டிரம்ப் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். “எங்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு வழங்கியதற்கு” அவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“ஈரானின் அணுசக்தி நிலையங்களை நாங்கள் அழித்ததற்கு ஈரான் அதிகாரப்பூர்வமாக மிகவும் பலவீனமான பதிலைக் கொடுத்துள்ளது, அதை நாங்கள் எதிர்பார்த்தோம், மேலும் மிகவும் திறம்பட எதிர்கொண்டோம்,” என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரூத் சோஷியலில் தெரிவித்துள்ளார்.

ஈரான் 14 ஏவுகணைகளை ஏவியதாகவும், அவற்றில் 13 ஏவுகணைகள் “சுட்டு வீழ்த்தப்பட்டன” என்றும், மற்றொன்று “அச்சுறுத்தப்படாத திசையில்” சென்றதாகவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் எந்த அமெரிக்கர்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை, “எந்த சேதமும் ஏற்படவில்லை” என்றும், கத்தார் நாட்டினர் யாரும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை என்று டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து முன்கூட்டிய அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

“ஒருவேளை ஈரான் இப்போது பிராந்தியத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி முன்னேறக்கூடும், இஸ்ரேலும் அவ்வாறே செய்ய உற்சாகமாக ஊக்குவிப்பேன்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post கட்டார் மீது தாக்குதல் – ஈரானுக்கு நன்றி தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப் appeared first on Oruvan.com.