Puttalam Archives - Oruvan.com

முச்சக்கர வண்டிக்கான புத்தளத்தில் அரங்கேறிய கொலை – 16 வயது சிறுவன் கைது
புத்தளம் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை கொலை செய்து, அவரது முச்சக்கர வண்டியை திருடிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம், ரத்மல்யாய பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம், அடப்பனவில்லுவ பகுதியில் உள்ள வடிகாலில் இருந்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று (22) கிடைத்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர்.

விசாரணையில் இறந்தவர் அப்துல் லத்தீப் என்ற 75 வயதுடைய நபர் என்பது தெரியவந்துள்ளது, அவர் பெப்ரவரி 21 ஆம் திகதி தனது முச்சக்கர வண்டியில் வாடகை பயணம் ஒன்றுக்காக வீட்டை விட்டு வெளியேறினார்.

பொலிஸ் விசாரணைகளின்படி, சந்தேக நபர் அன்று இரவு 9.30 மணியளவில் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு வந்துள்ளார், அதன் பிறகு பாதிக்கப்பட்டவர் அவருடன் வாடகைக்கு முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.

முச்சக்கர வண்டியைத் திருடுவதற்காக சந்தேக நபர் கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்தி சாரதியின் கழுத்தில் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் சடலத்தை கைவிட்டு, சந்தேக நபர் வாகனத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருடப்பட்ட முச்சக்கர வண்டி பின்னர் புத்தளம் முல்லை வீட்டுவசதி வளாகத்தில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அதன்படி, பொலிஸார் வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, சந்தேக நபர் நேற்று அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும், பணத்தையும் முச்சக்கர வண்டியையும் திருடும் நோக்கத்துடன் இந்தக் கொலை செய்யப்பட்டதாக அவர் ஒப்புக்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post முச்சக்கர வண்டிக்கான புத்தளத்தில் அரங்கேறிய கொலை – 16 வயது சிறுவன் கைது appeared first on Oruvan.com.

மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழப்பு
புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் நேற்று (13) இரவு நேருக்கு நேர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்னும் எந்த சூழ்நிலையும் கண்டறியப்படாத நிலையில், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர்களும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களில் ஒருவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார், மற்றொருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது உயிரிழந்தார்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இரண்டு பயணிகளும் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

The post மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

புத்தளம் மார்க்க ரயில் சேவைகள் நாத்தாண்டிய வரை நீடிப்பு
கொச்சிக்கடைக்கும் நாத்தாண்டியவிற்கும் இடையிலான ரயில் மார்க்கத்தில் சீர்த்திருத்தப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, புத்தளம் மார்க்கத்தில் ரயில் சேவைகள் தற்போது நாத்தாண்டிய வரை நீடிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, அண்மைக் காலமாக இந்தப் பிரிவில் ரயில்கள் கொழும்பு கோட்டைக்கும் கொச்சிக்கடை ரயில் நிலையத்திற்கும் இடையில் மாத்திரமே இயக்கப்பட்டன.

சீர்த்திருத்தப் பணிகள் இப்போது நிறைவடைந்துள்ளதால், கொழும்பு கோட்டையிலிருந்து நாத்தாண்டிய வரை ரயில் சேவைகள் முழுமையாகத் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post புத்தளம் மார்க்க ரயில் சேவைகள் நாத்தாண்டிய வரை நீடிப்பு appeared first on Oruvan.com.

கடலில் மிதந்து வந்த திரவத்தை குடித்த இருவர் உயிரிழப்பு – நேரில் பார்த்தவர் சொன்ன தகவல்
“நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ​​குமார சமித் கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றை கண்டெடுத்தார். போத்தலில் இருந்த திரவத்தை மதுபானம் என எண்னி அவர்கள் குடித்தனர்.

எனினும், போத்தலில் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாததால் நாங்கள் அதைக் குடிக்கவில்லை.

அந்த போத்தலில் இருந்த திரவத்தை குடித்த நால்வரும் நோய்வாய்ப்பட்டனர்,” என்று நுரைச்சோலை கடல் பகுதியில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை குடித்து இரண்டு மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து அங்கிருந்த மற்றொரு மீனவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலையைச் சேர்ந்த 26 வயதுடைய துஷார சம்பத் மற்றும் முத்துசாமி விஷ்வா ஆகிய இருவர், போத்தலில் இருந்த திரவத்தை குடித்தமையால் உயிரிழந்தனர்.

ஆபத்தான நிலையில் உள்ள நிலந்த சாமர மற்றும் மாரிமுத்து கோபால் ஆகியோர் புத்தளம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நுரைச்சோலை கடற்கரையில் உள்ள ஒரு மீன்பிடி முகாமில் எட்டு மீனவர்கள் மீன்களை உலர்த்திக் கொண்டிருந்தபோது, ​​நேற்று முன்தினம் (28) மதியம் கடலில் மிதந்து வந்த போத்தலை கண்டெடுத்துள்ளனர்.

அதை எடுத்த இளைஞன், மற்ற மூவருடன் சேர்ந்து போத்தலில் இருப்பது மதுபானம் என தவறாக நினைத்து குடித்துள்ளனர்.

இந்தப் பொருளை உட்கொண்ட ஒரு இளைஞன் நேற்று முன்தினம் மாலை கடுமையாக நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

நேற்று காலை மீன்பிடி முகாமின் உரிமையாளர் அங்கு வந்தபோது, ​​மற்றொரு மீனவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதற்கிடையில், இந்த திரவத்தை பருகிய மற்ற இருவரும் பின்னர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து நுரைச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தங்காலையில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் குழு ஒன்று, கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை மதுபானம் என எண்ணி குடித்ததில், ஐந்து மீனவர்கள் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

The post கடலில் மிதந்து வந்த திரவத்தை குடித்த இருவர் உயிரிழப்பு – நேரில் பார்த்தவர் சொன்ன தகவல் appeared first on Oruvan.com.

மாரவில பகுதியில் துப்பாக்கிச் சூடு – பெண் ஒருவர் உயிரிழப்பு
புத்தளம் மாவட்டம் மாரவில பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

மரந்த பகுதியில் நேற்றரிவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் 10 சிறுவனும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் 30 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளது.

The post மாரவில பகுதியில் துப்பாக்கிச் சூடு – பெண் ஒருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதம்
புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தண்டவாளத்தில் மரம் முறிந்து வீழ்ந்தமையால் புத்தளம் மார்க்கத்தில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மரத்தை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

The post புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதம் appeared first on Oruvan.com.

புத்தளத்தில் உப்பு உற்பத்தியில் பாதிப்பு
நாடளாவிய ரீதியில் நிலவி வரும் பலத்த மழை காரணமாக புத்தளத்தில் உப்பு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புத்தளத்தில் காணப்படும் உப்பளமானது அண்மைக்காலம் வரையில் நாட்டின் மொத்த உற்பத்தி பங்களிப்பில் 45 வீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி வருகிறது.

புத்தளம் மாவட்டத்தின் புத்தளம், கல்பிட்டி, வனாத்தவில்லு, முந்தலம் ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளில் சுமார் 4000 ஹெக்டேயர் பரப்பளவில் 2,000க்கும் மேற்பட்டோர் உப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, இத்தொழில் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 20,000ஐத் தாண்டியுள்ளது.

இலங்கையின் உப்பு நுகர்வு ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் மெட்றிக் டொன் ஆகும்.

அதில் புத்தளம் மாவட்டத்தில் இருந்து கடந்த வருடங்களில் 46,000 மெட்றிக் டொன் உற்பத்தி கிடைத்துள்ளன.

எனினும், இந்த நிலை 2023ஆம் ஆண்டுக்கு பின்னர் 40 வீதத்துக்கும் குறைவாகவே காணப்படுகிறது.

The post புத்தளத்தில் உப்பு உற்பத்தியில் பாதிப்பு appeared first on Oruvan.com.