PSLV-C61 Archives - Oruvan.com

இந்தியாவின் PSLV-C61 ரொக்கெட் திட்டம் தோல்வி
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ விண்ணில் செலுத்திய PSLV-C61 ரொக்கெட் திட்டம் தோல்வியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ரொக்கெட் ஏவுதளத்தில் இருந்து PSLV-C61 என்ற ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

எனினும், விண்ணில் பாய்ந்த சில நிமிடங்களில் PSLV-C61 ரொக்கெட் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரொக்கெட்டில் 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிநவீன பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும்.

அனைத்து கால நிலைகளிலும் துல்லியமாக படங்களை எடுக்கும் திறன் கொண்டது. திட்டமிட்ட இலக்கில் செயற்கைக்கோளை ராக்கெட் நிலை நிறுத்த முயற்சித்தது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரொக்கெட் தோல்வியடைந்தது.

விவசாயம், கடல் வளம், வெள்ளம் கண்காணிப்பு, கடலோர பாதுகாப்பிற்கும் இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படவிருந்தது. பூமியில் எந்தவொரு இடத்தையும் துல்லியமாக படம் பிடிக்கும் கேமரா கொண்ட செயற்கைக்கோள் இதுவாகும்.

இஸ்ரோ ஏவிய 101-வது ரொக்கெட் இதுவாகும். ஆனால், சில நிமிடங்களில் ரொக்கெட் தோல்வியடைந்தது. இதனால், செயற்கைக்கோளை திட்டமிட்ட இலக்கில் நிலைநிறுத்த முடியவில்லை.

இந்நிலையில், இந்த தோல்வி குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

The post இந்தியாவின் PSLV-C61 ரொக்கெட் திட்டம் தோல்வி appeared first on Oruvan.com.