Protest Archives - Oruvan.com

அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் நாளை போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் நாளை (06) முற்பகல் 9.30 முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகத்தின் போது பின்பற்றப்படும் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளே இந்தப் போராட்டத்திற்கான பிரதான காரணம் என சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இந்த முறைமையினால் ஊழியர்கள் கடுமையாக அசெளகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் கூறினார்.

எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் 6% இலாபத்தைப் பெற்றுக்கொள்வதாகவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 3% இலாபப் பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற போதிலும், கூட்டுத்தாபனத்தின் புதிய நிர்வாகத்தினால் அது வெட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், முன்பதிவு செய்யப்பட்ட டீசல் மற்றும் பெற்றோல் முறையாக வழங்கப்படாததால், எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடத்திச் செல்வதில் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் டி.வி. சாந்த சில்வா சுட்டிக்காட்டினார்.

The post அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் நாளை போராட்டம் appeared first on Oruvan.com.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் நாளைய தினமும் தொடர்கிறது
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் தொடருவதாகவும்,  நாளை (05)  அதன் மத்திய செயற்குழு கூடவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்போது போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

கோரிக்கைகளுக்கு முறையான தீர்வு கிடைக்காத பட்சத்தில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் நாட்டின் பல பகுதிகளில் வைத்தியசாலைகளின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

The post அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் நாளைய தினமும் தொடர்கிறது appeared first on Oruvan.com.

நான்காவது நாளாக நீடிக்கும் தொழிற்சங்க நடவடிக்கை – நோயாளர்கள் அவதி
வைத்தியர்களுக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் இடையே தொடர்ந்து பதட்டங்கள் நிலவி வரும் நிலையில், நான்காவது நாளாக அரசு வைத்தியசாலைகளில் சேவைகளில் ஏற்பட்ட இடையூறுகளால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை (26) காலை 8.00 மணி முதல், அரசு வைத்தியர் அதிகாரிகள் சங்கம் (GMOA) பல வழக்கமான சேவைகளில் இருந்து விலகியது, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

அவசர சேவைகள் பராமரிக்கப்பட்டாலும், தினசரி பொது சுகாதார சேவையை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் தாமதங்கள், சிரமங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டுள்ளனர்.

ஒப்புக் கொள்ளப்பட்ட தீர்வுகளை சுகாதார அமைச்சகம் செயல்படுத்தத் தவறியதால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசு வைத்தியர் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 23ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்திற்கு பின்னர் தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொழிற்சங்க நடவடிக்கை குறித்து பேசிய, பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹன்சகா விஜேமுனி, வைத்தியர்கள் தங்கள் குறைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கலந்துரையாடல்களுக்கு அமைச்சகம் திறந்தே இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

The post நான்காவது நாளாக நீடிக்கும் தொழிற்சங்க நடவடிக்கை – நோயாளர்கள் அவதி appeared first on Oruvan.com.

மட்டக்களப்பில் கறுப்பு ஜனவரி
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பில் நேற்று (27) மாலை உணர்ச்சிப்பூர்வமான தீப்பந்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளை நினைவுகூரும் ‘கறுப்பு ஜனவரி’ மாதத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு காந்தி பூங்காவிலுள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கிலங்கைச் செய்தியாளர் சங்கம் ஆகியன இணைந்து இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

மட்டக்களப்பு ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உயிரிழந்த ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து சுடர் ஏற்றப்பட்டு, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கலந்துகொண்டவர்கள் தீப்பந்தங்களை ஏந்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை வழங்கு”, “காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே?”, “ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்து” போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டின் உள்ளகப் பொறிமுறையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்த போராட்டக்காரர்கள், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிப் பொறிமுறையின் கீழ் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்

இந்தப் போராட்டத்தின் போது, அப்பகுதியில் பொலிஸாரும் புலனாய்வுத் துறையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என ஊடக அமைப்புகள் இதன்போது உறுதிபடத் தெரிவித்தன.

The post மட்டக்களப்பில் கறுப்பு ஜனவரி appeared first on Oruvan.com.

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றம்
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று நிரந்தர வேலைவாய்ப்பு கோரி போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று (27) காலை அவர்கள் “நீதியின் மரணம்” எனக் குறிப்பிட்டு சவப்பெட்டியொன்றை எரித்ததுடன், அதனை உடனடியாக அகற்றுமாறு பொலிஸார் அறிவித்தனர்.

அத்துடன், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினால் நடைபாதை தடைப்படுவதாக பொலிஸார் தெரிவித்ததையடுத்து, போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது.

7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள தங்களை ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி, ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று நேற்று (26) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தது.

எவ்வாறாயினும், அதற்கு முறையான பதில் கிடைக்காத காரணத்தினால் போராட்டக் குழுவின் நான்கு உறுப்பினர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

The post ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றம் appeared first on Oruvan.com.

அனுராதபுரம் மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் போராட்டம்
வைத்தியசாலை வளாகத்தில் வெற்று தோட்டாக்கள் மீட்கப்பட்டதை அடுத்து, தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை தெரிவித்து, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் வைத்தியசாலையில் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், போதுமான பாதுகாப்பு வழங்கப்படும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த வேலைநிறுத்தம் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு குறிப்பிடத்தக்க சிரமத்தை ஏற்படுத்தியது, போராட்டத்தின் விளைவாக வழக்கமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

இதற்கிடையில், பதுளை போதனா மருத்துவமனையில் வைத்தியர் ஒருவர் முச்சக்கர வண்டி சாரதியால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மற்றொரு சம்பவம் பதிவாகியுள்ளது.

முச்சக்கர வண்டி சாரதி வைத்தியரின் வாகனத்தின் பின்னால் நிறுத்தியதை அடுத்து இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியர் வாகனத்தை நகர்த்துமாறு ஓட்டுநரிடம் கோரியபோது, ​​வாக்குவாதம் ஏற்பட்டு, வைத்தியர் தாக்கப்பட்டார். காயமடைந்த வைத்தியர் சிகிச்சைக்காக பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பணியிட பாதுகாப்பு குறித்த அதிகரித்து வரும் கவலைகளைக் காரணம் காட்டி, பதுளை மருத்துவமனையின் வைத்தியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post அனுராதபுரம் மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் போராட்டம் appeared first on Oruvan.com.

சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்பு – ரணில், சஜித், நாமலின் உருவ பொம்மைகள் எரிப்பு
லிந்துல -நாகசேனா தோட்ட தொழிலாளர்கள் 1750 ரூபா சம்பளத்திற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்களின் உருவ பொம்மைகளை எரித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

தலவாக்கலை -லிந்துல நாகசேன தோட்ட பகுதிகளில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் நேற்று மாலை நாகசேன நகர வளாகத்தில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட  நாளாந்த ஊதியமான 1,750 ரூபாவை எதிர்க்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உருவ பொம்மைகளை எரித்து போராட்டம் நடத்தினர்.

150 தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு எதிர்க்கட்சியின் நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்தனர்.

போராட்டத்தின் போது, ​​தொழிலாளர்கள் சில எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அவர்களின் உருவ பொம்மைகளை எரித்தனர்.

தோட்டங்களில் உள்ள அரசியல்வாதிகள் இதுவரை தங்களின் சம்பளத்தை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்க மட்டுமே தோட்டங்களுக்கு வருகிறார்கள், எங்களின் குறைகளை கவனிக்கவே இல்லை.

அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட 1,750 ரூபா திட்டத்தை அனைத்து அரசியல்வாதிகளும் உடனடியாக ஆதரிக்க வேண்டும் என்று தோட்ட தொழிலாளர்கள் கோருகின்றனர்.

அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த 1,750 சம்பளம் பெற்றுக்கொடுக்க அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களும் செயற்பட வேண்டுமென தொழிலாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

The post சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்பு – ரணில், சஜித், நாமலின் உருவ பொம்மைகள் எரிப்பு appeared first on Oruvan.com.

BYD வாகன பிரச்சினைக்கு தீர்வு கோரி கொழும்பில் போராட்டம்
BYD வாகனங்கள் சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்குத் தீர்வு கோரி கொழும்பில் இன்று (04)போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பில் அமைந்துள்ள BYD வாகன விற்பனை நிலையம் முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் முடிவால், BYD வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த வாகனங்களைச் சாதாரணமாக வாங்குவதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இலங்கைச் சுங்கத் திணைக்களம் உட்படபொறுப்புள்ள தரப்பினர் உடனடியாகத் தலையிட்டு, இந்தப் பிரச்சினைக்குத் துரிதமாகத் தீர்வு

காண வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கை.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட BYD வாகனங்களைத் தடுத்துவைத்துச்

சுங்கத் திணைக்களம் சோதனை செய்தது.

இதற்கு, இதுவரை பின்பற்றப்பட்ட உத்தியோகபூர்வ நடைமுறைக்கமைய, வாகன உற்பத்தியாளரின் சான்றிதழை

ஏற்றுக்கொள்ள முடியாது என சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

BYD வாகனங்களைத் தடுத்து வைத்திருப்பது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், JKCG Auto நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், தற்போதுள்ள நிலைக்கு நியாயமான தீர்வு சுங்கத் திணைக்களத்தால் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post BYD வாகன பிரச்சினைக்கு தீர்வு கோரி கொழும்பில் போராட்டம் appeared first on Oruvan.com.

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
ஆளணி வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி யாழ். பல்கலைக்கழக ஊழியர்சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் மாணவர் நலன்சார்ந்த பிரச்சினைகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் தீர்வு காணவேண்டும் என கோரியே இப்போராட்டம் இடம்பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்விசாரா பணியாளர் வெற்றிடங்கள் 355 காணப்படுகின்றபொழுதிலும் 117 வெற்றிடங்களே நிர்வாகத்தினால் கோரப்பட்டுள்ளது.

அத்துடன் பல்கலைக்கழக சுற்றுநிருபத்திற்கு முரணாக தனியார் நிறுவனங்களூடாகவும் ஊழியர்கள உள்வாங்கப்பட்டு சேவை ஒப்பந்த்த்தினூடாக நியமனம் செய்யப்படுவது தவறு எனவும் சுட்டிக்காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே இந்த முறைகேடு தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் பல்கலைக்கழக பேரவைக்கும் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டும் அவை புறக்கணிக்கப்பட்டதால் இன்று போராட்டத்தில் இறங்கியுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

எனவே, உடனடியாக வெற்றிடங்கள் அனைத்தும் நிவர்த்திசெய்யப்படவேண்டும் எனவும் இதற்கு காரணமாக இருந்த அதிகாரிகளும்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டதின் ஆரம்பத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் ஊழியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார் .

அத்துடன் தமிழ்த்தசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செ.கஜேந்திரன் ஆகியோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

The post யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் போராட்டம் appeared first on Oruvan.com.

அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரியாலை கிழக்கு பகுதியில் இன்று (08) புதன்கிழமை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் போராட்ட இடத்திற்கு வரவேண்டும் எனக் கோரி போராட்டக்காரர்கள் வீதியை மறித்தனர்.

இதனால் போக்குவரத்து தடைப்பட்டது. பின்னர், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் போராட்ட இடத்திற்கு வந்தார். இதன்போது மக்கள் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

குறித்த பகுதியில் குப்பை கொட்டுவதற்கு வாகனங்கள் வந்தால், அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு தாங்கள் பொறுப்பல்ல எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

பின்னர், தவிசாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்று ஆளுநர் செயலகத்தில் மற்றொரு மகஜரைக் கையளித்தனர்.

உலகெங்கிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மக்கள் போராடி வரும் நிலையில் அரியாலை மக்களாகிய நாமும் எமது ஊரைப் பாதுகாப்பதற்காக, நமது அழகிய ஊரின் நிலம், கடல், நீர்வளம், தூய காற்று போன்ற இயற்கையின் கொடைகளைக் காப்பாற்றுவதற்காகப் போராட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என மக்கள் ஆதங்கள் வெளியிட்டனர்.

நல்லூர் பிரதேச சபை, மக்களுடன் எவ்வித கலந்துரையாடலும் நடத்தாமல், சுற்றுச்சூழலை மாசுபடுத்தக்கூடிய குப்பைகளை தமது ஊரில் கொட்டும் திட்டத்தை ஆரம்பித்திருப்பது, எமது மக்களால் மட்டுமல்ல, இயற்கையையும் மனிதத்தையும் நேசிக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியெனவும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இயற்கை வளங்கள் இன்றைய தலைமுறைக்கு மட்டுமானது அல்லவென சுட்டிக்காட்டிய போராட்டக்காரர்கள்

எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு தமது தலைமுறைக்கு உள்ளதெனவும் கூறுகின்றனர்.

The post அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் appeared first on Oruvan.com.