projects Archives - Oruvan.com

கைவிடப்பட்டுள்ள வீடமைப்பு திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
கட்டுமானப் பணிகள் தடைப்பட்டுள்ள 08 வீடமைப்பு திட்டங்களின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.

நாரஹேன்பிட்டி மற்றும் டொரிங்டன் பகுதிகளில் கட்டுமானப் பணிகளை ஆரம்பிப்பதுடன் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள 02 வீடமைப்பு திட்டங்களின் செயற்பாடுகளை விரைவாக ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த 02 வீடமைப்பு திட்டங்களூடாக 750 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இதனை தவிர நடுத்தர வருமானம் ஈட்டுவோரை இலக்காகக் கொண்டு பேலியகொடை பகுதியில் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவே நிறுத்தப்பட்ட 02 தொடர்மாடி குடியிருப்பு திட்டங்கள் ஒருகொடவத்தை பகுதியில் 02 வீடமைப்பு திட்டங்கள் மற்றும் ஸ்டேடியம் கம வீடமைப்பு திட்டம் ஆகியவற்றை மீள ஆரம்பிப்பதற்காக புதிய முதலீட்டாளர்களை கண்டறிந்துள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் நகரில் நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்காக நிர்மாணிக்கப்படவிருந்த தொடர்மாடிக் குடியிருப்பு திட்டமும் கைவிடப்பட்டுள்ளது.

அந்த கட்டுமானப் பணிகளையும் விரைவில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

The post கைவிடப்பட்டுள்ள வீடமைப்பு திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை appeared first on Oruvan.com.

அபிவிருத்தி திட்டங்களை விரைவில் செயற்படுத்துமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிப்பு
அபிவிருத்தி திட்டங்களை விரைவாக செயற்படுத்துமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவித்துள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 23,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார்.

மாகாண சபைகளின் அபிவிருத்தி பணிகளுக்காகவும், 53,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னர் அபிவிருத்தி திட்டங்களுக்கு குறித்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

சில உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாக, அவற்றின் அபிவிருத்தி நடவடிக்கைகளும் தாமதமாகியுள்ளதாக பிரதிஅமைச்சர் ருவன் செனரத் கூறியுள்ளார்.

அவ்வாறாயின் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்குத் திருப்பி அனுப்ப நேரிடும் என பிரதி அமைச்சர் ருவன் செனரத் மேலும் தெரிவித்தார்.

The post அபிவிருத்தி திட்டங்களை விரைவில் செயற்படுத்துமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிப்பு appeared first on Oruvan.com.

பல பகுதிகளில், வீதிகளை மேம்படுத்தும் செயற்றிட்டம் ஆரம்பம்
மறுமலர்ச்சிப் பாதையில் ஆயிரம் கிராமப்புற வீதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், மேலும் பல வீதிகளின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குண்டசாலை தேர்தல் மாவட்டத்தில் கண்டி மஹியங்கனை வீதியில் பல்லேகலையிலிருந்து தரிசனபுர வரையிலான வீதியின் 680 மீற்றர் பகுதியை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அதற்காக 1.83 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேனவின் தலைமையில் இந்த வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒரு மாதத்திற்குள் வீதிப் புதுப்பிப்பை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே, கண்டியில் உள்ள ஹரிஸ்பதுத்வ தேர்தல் தொகுதியில் யட்டியலகலவிலிருந்து மஹதென்ன வரையிலான ஒரு கிலோ மீற்றர் மற்றும் 650 மீற்றர் வீதியை புனரமைக்க 3.8 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுகிறது.

அந்த வீதியின் புனரமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரியாஸ் பாரூக்கின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

10 வருடங்களுக்கும் மேலாக மேம்பாடு தடைபட்டிருந்த ஹங்குரன்கெத்த தோட்ட வீதியின் புதுப்பித்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வீதி மிகவும் சேதமடைந்ததால், போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மறுமலர்ச்சிக்கான பாதை என்ற கருத்தின் கீழ், முதற்கட்டத்தில் இந்த வீதியின் இரண்டு கிலோமீற்றர் தூரத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக செலவிடப்பட்ட தொகை இருநூற்று இருபத்தேழு மில்லியன் ரூபாவாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் விஜேரத்னவின் தலைமையில் இந்த வீதி புதுப்பித்தல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

The post பல பகுதிகளில், வீதிகளை மேம்படுத்தும் செயற்றிட்டம் ஆரம்பம் appeared first on Oruvan.com.

இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை
Clean Sri Lanka திட்டத்துக்கு நிகராக, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முதலாவது நடவடிக்கையாக, பல்வேறு விதமான வாகன ஒலிகள், அதிக சத்தத்தில் ஒலி எழுப்புதல், ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பொருத்துதல், விபத்துக்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வண்ணங்கள் கொண்ட விளக்குகளை பொருத்துதல், சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட வாகனங்கள் என்பன தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது.

இதன் இரண்டாவது நடவடிக்கையாக, பொதுப் போக்குவரத்து பஸ் சாரதிகள் செய்யும் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிந்து, அந்த குற்றங்களுக்கான சட்டத்தை அமுல்படுத்துவதாகும்.

சாரதிகள் மற்றும் பொதுமக்களை அறிவுறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் நேற்று வெள்ளிக்கிழமை (04) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை இரண்டு வாரங்களுக்கு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இதன்போது வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரி பாகங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் அகற்றுமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி, குற்றங்கள் தொடர்பிலான தகவல்களை பெற்று சட்டத்தை நடைமுறைப்படுத்த பொது போக்குவரத்து பஸ்களில் சிவில் உடை அணிந்த பொலிஸார் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை appeared first on Oruvan.com.

மூன்று மாதங்களுக்குள் நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்துள்ளது – அமைச்சர் நலிந்த
பதவியேற்று மூன்று மாதங்களுக்குள் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு அரசாங்கத்தால் முடிந்துள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக இன்று திங்கட்கிழமை பதவியேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இடைநிறுத்தப்பட்ட பல வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்கள் புதிய அரசாங்கத்தின் மூலம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொருளாதாரம் மீண்டும் திவாலாகி விடும் என எதிர்க்கட்சிகள் கூறினாலும், ஜனாதிபதியால், நிதியமைச்சு மற்றும் ஏனைய அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடி நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு தெளிவான தீர்மானங்களை எடுக்க முடிந்தது.

வெளிநாட்டு இராஜதந்திரிகள் இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளனர். உள்நாட்டு மற்றும் சர்வதேச தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களிடையே நாட்டின் மீதான நம்பிக்கை வலுவடைந்துள்ளது.

பங்குச் சந்தையும் அண்மைகாலமாக கடுமையான வளர்ச்சியை கண்டுள்ளது. ஸ்திரத்தன்மையை நோக்கிய பாதையில் இலங்கை நகர்கிறது என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

The post மூன்று மாதங்களுக்குள்  நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்துள்ளது – அமைச்சர் நலிந்த appeared first on Oruvan.com.

அதானி குழுமம் இலங்கையில் எவ்வாறு செயற்படுகிறது என்பதே முக்கியம் – அநுர
அதானி குழுமத்தின் ஏனைய நாடுகளுடனான செயற்பாடுகள் தொடர்பில் தமது அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை மாறாக இலங்கையில் அந்த குழுமத்தின் செயற்பாடுகளில் மாத்திரமே கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எகனொமிக் டைம்ஸுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

தமது நிலையான அரசாங்கம் மேலும் இந்திய முதலீடுகளை எதிர்பார்க்கிறது. அதானி குழுமம் ஏனைய நாடுகளுடன் எவ்வாறு செயற்படுகிறது என்பது தொடர்பில் நாங்கள் கவனத்திற்கொள்ளவில்லை. அந்த குழுமம் எங்களுடன் எவ்வாறு செயற்படுகிறது என்பதே முக்கியம்.

“நாங்கள் முதலீடுகள் மற்றும் வளர்ச்சி பற்றி அக்கறை கொண்டுள்ளோம். அவர்கள் எமது நாட்டில் எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்று பார்ப்போம். அவர்கள் எங்களுக்கு ஏற்ற வகையில்,எங்கள் முயற்சிகளுக்கு ஏற்ற வகையில் பணியாற்றினால், அதானி குழுமத்துடன் இணைந்து பணியாற்றுவதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை.

இலங்கையில் முக்கியமான முதலீடுகளை செய்துள்ள அதானி குழுமம் மீது அமெரிக்காவில் பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த குழுமம் அதனை முழுமையாக மறுக்கிறது.

“அமெரிக்க நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விளைவுகள் மற்றம் மக்களின் ஒருமித்த கருத்து தொடர்பில்

அவதானம் செலுத்துவோம்.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்துக்காக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திடம் முன்வைத்த நிதியுதவிக்கான கோரிக்கையை அதானி குழுமம் மீளப் பெற்றுள்ளது ஆனாலும்

அந்த திட்டத்துக்கான உள் நிதி திரட்டல்கள் மூலம் நிதியளிப்பதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது” என்றார்.

The post அதானி குழுமம் இலங்கையில் எவ்வாறு செயற்படுகிறது என்பதே முக்கியம் – அநுர appeared first on Oruvan.com.