problem Archives - Oruvan.com

போதைப்பொருள் பிரச்சினைக்கான தீர்வு தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டும் – பிரதமர்
நாட்டின் போதைப்பொருள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டிய அதேவேளை, அந்தச் செயற்பாட்டுத் திட்டத்தின் மூலம் அடிமட்ட அளவில் பெறுபேறுகள் எட்டப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டு வரையான தேசிய மூலோபாயத் திட்டம் (SUD) குறித்த தெளிவுபடுத்தல் நிகழ்வுகள் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போதைப்பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்டுள்ளோர் எதிர்நோக்கும் சுகாதார, சமூக மற்றும் பொருளாதார சவால்களுக்குத் தீர்வுகளை வழங்குவதற்காக முன்மொழியப்பட்டுள்ள தேசிய மூலோபாயம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை முகாமைத்துவம் செய்தல், சிகிச்சை அளித்தல் மற்றும் புனர்வாழ்வளித்தல் ஆகியவற்றுக்காக இந்த தேசிய மூலோபாயத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

சான்றுகள் அடிப்படையிலான தேசிய அணுகுமுறையின் ஊடாகத் தடுப்பு, சிகிச்சை, புனர்வாழ்வு மற்றும் சமூகத்துடன் மீண்டும் இணைத்தல் ஆகிய சேவைகளைப் பலப்படுத்துவதே இந்த மூலோபாயத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஏனைய முக்கிய பங்குதாரர்களின் பங்கேற்புடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

The post போதைப்பொருள் பிரச்சினைக்கான தீர்வு  தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டும் – பிரதமர் appeared first on Oruvan.com.

H-1B விசா விவகாரம் – அமெரிக்காவில் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு சிக்கல்
அமெரிக்க ஜனாாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் எதிர்வரும் காலங்களி H-1B விசா பெற $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த புதிய உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அடுத்த 12 மாதங்களுக்கு இந்த அறிவிப்பு நடைமுறையில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்காவில் தற்போதைய விசாவில் கற்கும் மாணவர்கள் தங்களது கற்கைநெறிகளை எந்தவித இடையூறும் இல்லாமல் முடித்து கொள்ளலாம். ஆனால் கற்கையை முடித்த பிறகு அவர்கள் சிக்கல்களை எதிர்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கற்கையை நிறைவு செய்யும் வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்க நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பதை குறைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

The post H-1B விசா விவகாரம் – அமெரிக்காவில் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு சிக்கல் appeared first on Oruvan.com.