Private Archives - Oruvan.com

தனியார் பல்கலைக்கழக பட்டங்கள் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு
தனியார் பல்கலைக்கழகங்களின் கல்வியியல் பட்டங்களின் தரம் தொடர்பில் முறையான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இலங்கையில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைந்த உயர்கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் கல்வியியல் பட்டங்களின் தரம் தொடர்பில் கல்வி அமைச்சு முறையான ஆய்வை முன்னெடுத்துள்ளது.

இந்த நிறுவனங்களில் கல்வியியல் பட்டம் பெற்ற பட்டதாரிகளின் தகுதிகள், குறிப்பாக இலங்கை ஆசிரியர் சேவையில் நியமனம் பெறுவதற்கான தகுதி மற்றும் பொருத்தப்பாடு தொடர்பாக சிக்கல்கள் எழுந்துள்ளன.

அண்மைய ஆசிரியர் நியமனங்கள் முந்தைய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் சேவை விதிமுறைகளுக்கு இணங்கவே மேற்கொள்ளப்பட்டன.

எனினும், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் கல்வியியல் பட்டங்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மை தற்போது கல்வி அமைச்சின் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் ஆசிரியர் சேவைக்கான நியமனங்கள் இந்த தர ஆய்வின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும்” என்றார்.

இந்த சந்திப்பில் பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, கல்வி அமைச்சின் பதில் செயலாளர் அமல் எதிரிசூரிய உள்ளிட்ட மூத்த அமைச்சு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

The post தனியார் பல்கலைக்கழக பட்டங்கள் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு appeared first on Oruvan.com.

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 27,000 ரூபாவாக உயர்வு
தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்த சம்பளத்தை 27,000 ரூபாவாக உயர்த்துவதற்கு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

தற்போது குறைந்தபட்ச மாதாந்த சம்பளம் 21,000 ரூபாவாக காணப்படுகிறது.

இந்நிலையில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்படும் என்று அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ தெரிவித்தார்.

இந்த சம்பள உயர்வு இந்த வருட வரவு செலவுத்திட்டத்திற்கானது மாத்திரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த வருடம் குறைந்தபட்ச மாதாந்த சம்பளத்தை 35,000 வரை உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 27,000 ரூபாவாக உயர்வு appeared first on Oruvan.com.

அமைச்சு பங்களாக்களை வாடகைக்கு வாங்க தனியார் நிறுவனங்கள் கோரிக்கை
அமைச்சு பங்களாக்களை வாடகைக்கு எடுப்பதற்காக சுமார் 10க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல அரச நிறுவனங்களும் , பல நீதிபதிகளும் இந்த வீடுகளுக்கான கோரிக்கைகளை இதற்கு முன்னர் சமர்ப்பித்திருந்தனர்.

​​இருப்பினும், அமைச்சர்களுக்கான பங்களாக்கள் மற்றும் ஜனாதிபதி பங்களாக்கள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தற்போது அவற்றின் மதிப்பை மதிப்பிட்டு வருவதாக பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

குறித்த மதிப்பீட்டின் பின்னர் அந்த பங்களாக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் தெரிவிக்கப்படும் எனவும் அமைச்சு பங்களாக்களை வாடகைக்கு பெற்றுக் கொள்ள வெவ்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அந்த கோரிக்கைகள் தொடர்பில் இது வரையில் பரிசீலிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் கூறினார்.

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதிக்காக 9 பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு, கண்டி, நுவரெலியா, அநுராதபுரம், கதிர்காமம், யாழ்ப்பாணம், எம்பிலிபிட்டிய, பெந்தொட்டை மற்றும் மஹியங்களை ஆகிய பிரதேசங்களில் குறித்த ஜனாதிபதி பங்களாக்கள் காணப்படுகின்றன.

சில அமைச்சு பங்களாக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்து காணப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அவற்றை புனரணமைப்பதில் நிதித் தட்டுப்பாடு காணப்படுவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

The post அமைச்சு பங்களாக்களை வாடகைக்கு வாங்க தனியார் நிறுவனங்கள் கோரிக்கை appeared first on Oruvan.com.

தனியார் பஸ் சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தினூடாக பொலிஸாரின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு எதிராக தனியார் பஸ் சங்கங்களினால் முன்னெடுக்கப்படவிருந்த நாடளாவிய ரீதியிலான பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுடன் இன்று புதன்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து,

தனியார் பஸ் சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ‘கிளீன் ஸ்ரீலங்கா’ பொலிஸ் போக்குவரத்து நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதற்கு தனியார் பஸ் சங்கங்களுக்கு 03 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

‘கிளீன் ஸ்ரீலங்கா’ பொலிஸ் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு எதிராக தனியார் பஸ் சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தன, அதன் கீழ் அபராதம் விதிக்கப்பட்டதுடன், முறையற்ற வகையிலான அலங்காரங்களை நீக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் அரசாங்கத்தின் இந்த வேலைத திட்டத்தின் கீழ் இலங்கை பொலிஸார் போக்குவரத்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post தனியார் பஸ் சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது appeared first on Oruvan.com.

தனியார் பஸ் உரிமையாளர்களின் இறுதித் தீர்மானம் இன்று
பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பஸ் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று (08) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சினைகள் தொடர்பில் இன்று காலை பதில் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இன்று நண்பகல் 12 மணிக்குள் தங்களது முடிவை அறிவிப்பதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

The post தனியார் பஸ் உரிமையாளர்களின் இறுதித் தீர்மானம் இன்று appeared first on Oruvan.com.

தனியாரால் 72,000 மெட்றிக் டொன் அரிசி இறக்குமதி
இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து இன்று  (27) வரையில் இறக்குமதி செய்யப்பட்ட 72,000 மெட்றிக் டொன் அரிசி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட 72,000 மெட்றிக் டொன் அரிசியில் 32,000 மெட்றிக் டொன் பச்சை அரிசியும், 40,000 மெட்றிக் டொன் நாட்டு அரிசியும் உள்ளடங்குவதாகவும், மேலும், சுங்கத்திற்கு அனுப்பப்படும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி விரைவில் விடுவிக்கப்படும் என்றும் அருக்கொட குறிப்பிட்டார்.

நாடு எதிர்நோக்கும் அரிசி நெருக்கடிக்கு தீர்வாக, இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பத்தை தனியார் துறையினருக்கு தற்போதைய அரசாங்கம் கடந்த 4ஆம் திகதி வழங்கியது.

The post தனியாரால் 72,000 மெட்றிக் டொன் அரிசி இறக்குமதி appeared first on Oruvan.com.