President's Archives - Oruvan.com

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (30) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

The post ஜனாதிபதி  நாட்டு மக்களுக்கு விசேட உரை appeared first on Oruvan.com.

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புனரமைப்புக்கான ஆரம்ப விழா ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையப் புனரமைப்புக்கான  ஆரம்ப விழா தற்போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

1964 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட புறக்கோட்டை பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் புனரமைக்கப்படுகின்றது.

இதற்காக சுமார் 424 மில்லியன் ரூபா செலவிடுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கி மேம்படுத்துவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அண்மையில்

அனுமதி வழங்கியது.

இதற்கமைய குறித்த புனரமைப்பு பணிகளின் கீழ், பேருந்து நிலையத்தில் புதிய கழிப்பறைகள், தகவல் தொடர்பு நிலையங்கள், பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல அம்சங்கள் நிறுவப்படவுள்ளன.

இலங்கை விமானப்படையின் நேரடி ஆளனி பங்களிப்புடன் கொழும்பு மாநகர சபை, இலங்கை மின்சார சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புடன் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

The post புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின்  புனரமைப்புக்கான ஆரம்ப விழா ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் appeared first on Oruvan.com.

ஜனாதிபதியின் பொசொன் பூரணை தின வாழ்த்துச் செய்தி
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“பொசொன் தினம் இலங்கையர்களான எமக்கு பல்வேறு சிறப்பான நிகழ்வுகள் நிகழ்ந்த நாளாகும்” என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில்

குறிப்பிட்டுள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“எமது நாடு தேரவாத பௌத்தம் மற்றும் சம்பிரதாயத்தின் மத்தியஸ்தானம் ஆனதும் மஹிந்த தேரரின் இலங்கை விஜயம் நிகழ்ந்ததும் பொசொன் தினத்திலாகும்.

சமூக முன்னேற்றத்துடன் ஆன்மீக மலர்ச்சியை ஏற்படுத்த காரணமாக அமைந்த அந்த செழுமையான நிகழ்வு நமது நாட்டில், கலாசார, சமூக மற்றும் அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் மேம்படுத்தியது. புத்த தர்மம் மற்றும் அதனுடன் இணைந்த வாழ்க்கை சூழலுக்கு வழிகாட்டி, தர்மங்களால் மேம்பட்ட சமூகத்தின் தோற்றத்திற்கும் பொசொன் காரணமாக அமைந்தது.

இதேபோல், ஆட்சியாளரும் மக்களும் வன்முறையைக் கைவிட்டு அகிம்சையைத் தழுவுவதே இதன் அடையாளமாகும். பொசொன் பௌர்ணமி தினத்தில் வலியுறுத்தப்படும் உயர்வான குணங்களில் ஒன்றாக அஹிம்சையே காணப்படுகிறது. குறிப்பாக, முழு உலகமும் ஒவ்வொரு நிலைமைகளில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய காலகட்டத்தில், அகிம்சை என்பது தன்னுடையதும் பிறருடையதும் சுதந்திரத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாப்பதாக அமையும். அது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு நடத்தையாகும். எனவே, பொசொன் பௌர்ணமி தினத்தில் பொதிந்துள்ள அகிம்சையின் பெறுமதி இன்றளவில் அதிகமாக உணரப்படுகிறது.

மஹிந்த தேரர் இந்த நாட்டிற்கு வழங்கிய உன்னதமான பௌத்த தர்மத்தில், “ஒருவர் வளமானதை வளமானதாகவும் வளமற்றதை வளமற்றதாகவும் பார்க்க வேண்டும்” என்று கூறினார். அதற்கு அந்த எண்ணமும் ஒழுக்கமும் கொண்ட பொறுப்புள்ள மக்களே தேவைப்படுகின்றனர் என்பதையும் வலியுறுத்தினார். அந்த சமூகத்தை மீண்டும் இலங்கையில் கட்டியெழுப்பி, நாட்டுக்குத் தேவையான புதிய நெறிமுறை, சமூக மற்றும் சுற்றுச்சூழல் அணுகுமுறைகளுடன் கூடிய நவீன நாகரிகம் கொண்ட நாட்டை உருவாக்கும் கைவிடமுடியாத பொறுப்பு, எம் மீது சாட்டப்பட்டுள்ளது.

ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்புவதால் மட்டுமே, நாம் எதிர்பார்க்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை நடைமுறை சாத்தியமாக்கிக்கொள்ள முடியும். அந்தக் கூட்டு முயற்சிக்காக அனைவரும் ஒன்றுபடுவோமென பொசொன் தினத்தில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

இலங்கையர்கள் அனைவரினதும் எண்ணங்கள் தர்மத்தின் புரிதலுடன் ஒளிரும் சிறப்பான பொசொன் தினமாக அமையட்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜனாதிபதியின் பொசொன் பூரணை தின வாழ்த்துச் செய்தி appeared first on Oruvan.com.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்து
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும் என அவரது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

புத்த பெருமான், தர்மங்கள் அனைத்தையும் நிறைவேற்றி, ஞானத்தை வளர்த்து, நான்கு உன்னத உண்மைகளைப் புரிந்துகொண்டு, அனைத்து பாவங்களையும் அழித்து உண்மையான ஞானம் பெற்றது, இந்த புனித வெசாக் தினத்தில் ஆகும்.

அவர் அனைத்து துன்பங்களையும் தாங்கி, ஆயுள் முழுவதும் தன்னலமற்ற பக்தி செயல்கள் மூலம் புரிந்து கொள்ளப்பட்ட தர்மம், உலகில் வசிக்கும் அனைத்து மக்களின் ஆன்மீக நல்வாழ்விற்கும் ஒரு காரணியாக அமைந்துள்ளது. மதச் சூழலுக்குள் மனிதனின் ஆன்மீக வளர்ச்சியை வளர்ப்பதே புத்த பெருமானின் முக்கிய செய்தியாகும்.மேலும், ஒரு ஆட்சியாளர் நல்ல ஆட்சியை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதையும் பௌத்த தத்துவம் குறிப்பிடுகிறது.

“சப்பங் ரத்தங் சுகங் சேதி – ராஜாசே ஹோதி தம்மிகோ” ஒரு நாட்டின் முதல் குடிமகனாகிய ஆட்சியாளர் நேர்மையானவராக இருந்தால், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்று புத்த பெருமான் உபதேசித்துள்ளார்.

புத்தரின் போதனைகளின் பாதையை முன்மாதிரியாகக் கொண்டு,பொதுநலத்தில் சமத்துவம் மற்றும் சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்கி “வளமான நாடு – அழகான வாழ்க்கை” பற்றிய இந்நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக நாம் இன்னும் உறுதியாகவும் தைரியத்துடனும் ஒன்றிணைந்து செயற்படுமாறு இந்த புனிதமான வெசாக் தினத்தில் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.

புத்தரின் போதனைகள் உலக அமைதிக்கான ஆழமான செய்தியை தெரிவிப்பதோடு, அந்தப் போதனைகளை நடைமுறையில் புரிந்துகொண்டு, மெத்தா, கருணா, முதிதா, உபேக்ஷா ஆகிய நான்கு பிரஹ்ம விஹாரணங்களைப் பயன்படுத்தி செயல்படுவதன் மூலம், போரின் தீப்பிழம்புகளிலிருந்து விடுபட்ட அமைதியான உலகத்தை உருவாக்குவதற்கான தேவை முன்னெப்போதையும் விட அதிகமாகிவிட்டது என்பதையும் நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

தர்மத்தின் ஞானத்தால் அனைத்து இதயங்களையும் ஒளிரச் செய்யும் புனித வெசாக் தினமாக அமையட்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்து appeared first on Oruvan.com.

ஜனாதிபதி தலைமையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி
“Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று  புதன்கிழமை (08) காலை சினமன் பெந்தொட்ட பீச் ஹோட்டலில் வெகு விமர்சையாக ஆரம்பமானது.

சீனங்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (CGJTA) ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வரும்

இந்தக் கண்காட்சி ஜனவரி 10 ஆம் திகதி வரை நடைபெறும்.

“Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி,

கண்காட்சி கூடங்களை பார்வையிட்டதுடன் இரத்தினக்கல் தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

குறித்தும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

இவ்வருட “Gem Sri Lanka – 2025” கண்காட்சியானது 103 கண்காட்சிக் கூடங்களை உள்ளடக்கியதுடன்,

அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்வனவாளர்கள் இதில் இணைந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண

அதிகார சபையின் தலைவர் நவீன் சூரியராச்சி, சீனங்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தின் (CGJTA) தலைவர் மர்ஜான்

பலீல் மற்றும் தூதுவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

The post ஜனாதிபதி தலைமையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி appeared first on Oruvan.com.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பாரியளவான தொகை பெறப்பட்டதன் நோக்கம் என்ன – தயாசிறி கேள்வி
2005 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பயனடைந்த அரசியல்வாதிகளில் பெயர் அண்மையில் நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கருத்து வெளியிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட எவரும் ஜனாதிபதி நிதியத்திற்கு விண்ணப்பித்து நிதியை பெற்றுக்கொள்ள முடியும்.

2019 ஆம் ஆண்டு இருதய சத்திரசிகிச்சைக்காக சுமார் 4 லட்சம் ரூபாவைப் பெற்றுக் கொண்டேன். அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நிதியுதவிக்கு அனுமதியளித்திருந்தார்.

ஜனாதிபதி நிதியத்தினூடாக முழுத் தொகையையும் பெற்றுக்கொள்ளவில்லை. ஏனைய செலவிற்கு தனிப்பட்ட நிதியையே பயன்படுத்தினேன்.

ஜனாதிபதி நிதியைப் பயன்படுத்தி பல்வேறு அரசியல்வாதிகளுக்கு எதிரான தவறான பிரசாரங்கள் தடுக்கப்பட வேண்டும். தவறான கூற்றுக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

அரசியல்வாதிகள் ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெறுவது தவறு என்றால், நிதி தொடர்பான விதிமுறைகளில் தேவையான திருத்தங்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

மேலும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து மருத்துவ காரணங்களுக்காக பணம் கோரப்பட்டுள்ளதாக கூறிய அவர் பாரியளவான தொகைகள் எந்த நோக்கத்திற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட என்றும் கேள்வி எழுப்பினார்.

The post ஜனாதிபதி நிதியத்திலிருந்து பாரியளவான தொகை பெறப்பட்டதன் நோக்கம் என்ன – தயாசிறி கேள்வி appeared first on Oruvan.com.

ஜனாதிபதி இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் – பிரதமர் மோடியுடனான சந்திப்பு நாளை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று பிற்பகல் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும்.

இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். இந்த சந்திப்பு புதுடில்லியில் நாளை நடைபெறவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் டில்லியில் நடைபெறும் வர்த்தக கூட்டத்திலும் ஜனாதிபதி கலந்துக் கொள்கிறார்.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த உள்ளிட்டோர் இந்த விஜயத்தில் கலந்துக்கொள்கின்றனர்.

The post ஜனாதிபதி இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் – பிரதமர் மோடியுடனான சந்திப்பு நாளை appeared first on Oruvan.com.

தென்கொரிய ஜனாதிபதியின் இராணுவச் சட்டமும் ரணிலும்
ரசிய – உக்ரெயன் போர், இஸ்ரேல் – காசா போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் உலக அரசியல் ஒழுங்குகளும் குழப்பியுள்ளன. தெற்காசிய நாடுகள் உள்ளிட்ட வளர்முக மற்றும் வளர்ச்சியடையாத நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் தென்கொரிய ஜனாதிபதி இராணுவச் சட்டத்தை உள்ளுரில் பிறப்பித்திருந்தார்.

இப் பின்னணியில் இராணுவச் சட்டங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டங்கள் என்ற போர்வையில் உள்ளுரில் வாழும் ஏனைய தேசிய இனங்களை அடக்கி வரும் இலங்கை போன்ற நாடுகள் தென்கொரிய இராணுவச் சட்டத்திற்கு எதிராகக் கருத்திட்டிருக்கின்றன.

குறிப்பாக இலங்கைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமங்க இராணுவச் சட்டம் மீளப் பெறப்பட்டதை வரவேற்றிருக்கிறார். 2009 போர் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரான கடந்த 15 வருடங்களிலும் வடக்குக் கிழக்கில் இராணுவச் செயற்பாட்டுக்கு முக்கியமளித்து வரும் இலங்கை அரச கட்டமைப்பின் முன்னாள் ஆட்சியாளரான ரணில் பாரட்டியுள்ளதன் பின்னணியிலும் உலக அரசியல் பொதிந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

கொரியா இரண்டு நாடாக பிரிந்ததிலிருந்து தென்கொரியா அமெரிக்கா, பிரித்தானிய உள்ளிட்ட நாடுகளின் கட்டுப்பாட்டிலும், வடகொரியா, சீனா மற்றும் ரசியா ஆகிய நாடுகளின் நட்புறவுடனும் இருந்து வருகின்றன.

வடகொரியா சொந்த மக்களுக்கு எதிராக தொடர்ச்சியான அடக்குமுறைகளை கையாள்வதாக தென்கொரிய ஊடகங்களினூடாக அறிந்துள்ளோம்.

ஆனால் அவை எந்தளவிற்கு உண்மை என்பதற்கான சான்றுகள் போதுமானவையாகத் தெரியவில்லை.

இவ்வாறிருக்க தற்போது தென்கொரியாவில் அமுல்படுத்தப்பட்ட இராணுவ சட்டத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

உலகளவில் தென்கொரியா பேசு பொருளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் கடந்த செவ்வாய்க்கிழமை (03.12.2024) அந்நாட்டில் அவசரகால இராணுவ ஆட்சியை அமுல்படுத்தியதால் பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

வடகொரியாவின் கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல்களிலிருந்து தென்கொரியாவை பாதுகாக்கும் நோக்கிலும் உள்நாட்டில் தேச விரோத சக்திகளை ஒழிக்கும் நோக்கிலும் இராணுவ ஆட்சியை அமுல்படுத்தியாக அவர் விளக்கமளித்திருந்தார்.

இதன்பின்னர் இந்நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என தென் கொரிய அரசியல்வாதிகள் இராணுவச் சட்டப் பிரகடனத்தை விமர்சித்தனர்.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலருமே இதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். ” இராணுவ ஆட்சி வேண்டாம் , சர்வாதிகாரத்தை முறியடிக்கவும் போன்ற வாசங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறிய போதிலும் அவருக்கு எதிராக கண்டனம் வெளியிடப்பட்டது.

அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளன. அதுமட்டுமின்றி மக்கள் தொடர்ந்து ஜனாதிபதி யூன் சுக் யோல் பதவி விலக வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மக்கள் பிரதிநிதிகளும் இந்த உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி வாக்களித்தனர். சட்டத்தைத் திரும்பப் பெற தேசிய சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மொத்தமுள்ள 300 பேரில் 190 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனை தொடர்ந்து தென்கொரிய ஜனாதிபதி அந்த அவசரநிலை இராணுவ சட்டத்தை மீளப்பெறுவதாக அறிவித்தார்.

ஆனாலும் தென்கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தன.

தென் கொரிய ஜனாதிபதி பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் 3 இல் இரண்டு பெரும்பான்மை ஆதரவும், குறைந்தபட்சம் 6 அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதிகளின் ஆதரவும் தேவைப்படும். யூன் தானாக பதவி விலகாவிட்டால் அவரை பதவி நீக்கம் செய்யப்போவதாக எதிர்க்கட்சி அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

அவ்வாறு தென்கொரிய ஜனாதிபதி பதவி விலகும் பட்சத்தில் அந்நாட்டு பிரதமர் ஜனாதிபதி கடமைகளை செய்ய வேண்டும் என்பது அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய சபையின் நடவடிக்கையை பாராட்டும் ரணில்

இதேவேளை, இராணுவச் சட்ட ஆட்சியை எதிர்ப்பதற்காக, கொரிய குடியரசின் தேசிய சபை எடுத்த துரிதமான மற்றும் ஒன்றிணைந்த நடவடிக்கையை பாராட்ட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலின் இராணுவச் சட்டப் பிரகடனம் கொரியக் குடியரசின் ஜனநாயக அமைப்பை அச்சுறுத்தியுள்ளதாக கூறிய அவர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் நிர்வாகத்தை ஆதரிப்பவர்களின் ஒற்றுமை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இராணுவச் சட்டங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டங்கள் என்ற போர்வையில் உள்ளுரில் வாழும் ஏனைய தேசிய இனங்களை அடக்கி வரும் சில தெற்காசிய நாடுகள் தென்கொரிய இராணுவச் சட்டங்கள் தளர்தப்பட்டதை வரவேற்றிருக்கின்றமை வேடிக்கை.

இராணுவச் சட்டம்

அவசர காலத்தின் போது இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்படும். இது தற்காலிகமானதாக காணப்படும்.

அதாவது, மக்களால் தேர்தேடுக்கப்பட்ட ஆட்சியாளர்களால் நிர்வாகத்தை கொண்டு செல்ல முடியாத போது இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்படும்.

தென் கொரியாவில், அப்போதைய சர்வாதிகாரி பார்க் சுங்-ஹீ ஆட்சிக் கவிழ்ப்பின்போது படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இறுதியாக 1979 ஆம் ஆண்டில் இராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.

அதற்குப் பின்னர் தென் கொரியாவில் இராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டது இதுவே முதன்முறை.

இராணுவ சட்டத்தை அமுல்படுத்துவதாக வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து தென்கொரியாவின் நாணய மதிப்பு பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது.

மேலும் இந்த சர்ச்சை ஜனநாயக நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த சர்ச்சை தென் கொரிய ஜனநாயகத்திற்கு மாத்திரமல்லாது பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய சவாலாகும்.

இந்த சட்டத்தின் கீழ், இராணுவத்திற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இதன் மூலம் சிவில் உரிமைகள் இடைநிறுத்தப்படலாம்.

அதாவது குடிமக்கள் அவர்களது சட்டப் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை இழக்க நேரிடும்.

இக் காரண – காரிய அடிப்படையில் இலங்கையிலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு பலரும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

அதாவது இந்த சட்டம் நாட்டில் இராணுவ மயமாக்கலுக்கான அங்கீகாரத்தை வழங்க கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்திற்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. அதாவது கைது செய்தல், தேடுதல்களை முன்னெடுத்தல் போன்ற அதிகாரங்கள் இராணுவத்திற்கு கொடுக்கப்படுகின்றது. அந்த சட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்பதை உணர வேண்டும்.

1979 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு பதிலாக, பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இலங்கையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டியதொரு சட்டம் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றை அமைத்துக்கொள்வதே தமது திட்டம் என்று கூறியுள்ளது. இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கான நடவடிக்கைகளை கடந்த அரசாங்கம் முன்னெடுத்த போதே அதற்கு எதிராக வடக்கு கிழக்கு மக்கள் குரல்கொடுத்தனர்.

பாலகணேஷ் டிலுக்ஷா

The post தென்கொரிய ஜனாதிபதியின் இராணுவச் சட்டமும் ரணிலும் appeared first on Oruvan.com.