Power Archives - Oruvan.com

மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தட்டுப்பாடு
இலங்கைக்கு எதிர்வரும் மார்ச் 24, 25 திகதிகளில் வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பல் வராததால், இம்மாதம் 25ஆம் திகதி வரை மாத்திரமே சுத்திகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார் .

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் மற்றும் நெப்தா எரிபொருள் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். இது ஒரு பாரிய பிரச்சினையாகும். எதிர்வரும் ஏப்ரல் 12, 13 திகதிகளில் எரிபொருள் கப்பல் ஒன்று வரவுள்ளது, ஆனால் நெப்தா எரிபொருள் வராது.

அதற்குப் பதிலாக டீசலைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். இந்த நெருக்கடியால் இனிவரும் காலங்களில் இரவு நேரங்களில் டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

எனவே, ஒரு விளக்கையாவது அணைத்து, வீதி விளக்குகளையும் அணைத்து இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு செய்தால் மாத்திரமே எம்மால் நிலைமையைச் சமாளிக்க முடியும். பொதுமக்கள் இதில் தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது” என்றார்.

The post மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தட்டுப்பாடு appeared first on Oruvan.com.

ரணிலின் வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட நீதிமன்ற வளாகத்தில் மின்சாரம் துண்டிப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட நீதிமன்ற அறை வளாகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது வரை மின்சாரம் வழமைக்குத் திரும்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் இன்று வெள்ளிக்கிழமை  (22) கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, ​​வழக்கின் தீர்ப்பை அரை மணி நேரம் ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டார்.

இந்த அறிவிப்பு மாலை 5.30 அளவில் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

The post ரணிலின் வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட நீதிமன்ற வளாகத்தில் மின்சாரம் துண்டிப்பு appeared first on Oruvan.com.

வலப்பனை பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசமானது
வலப்பனை பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.

தலைவரைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட திறந்த தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற பின்னர் தேசிய மக்கள் சக்தியின் நளின் தேசப்பிரிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத வலப்பனை பிரதேச சபையின் ஆரம்பக் கூட்டம், மத்திய உள்ளூராட்சி ஆணையாளர் சமில அத்தபத்து தலைமையில் வலப்பனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச சபையின் புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்காக திறந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, தேசிய மக்கள் சக்தி கட்சியின் நளின் தேசப்பிரிய 34 வாக்குகளைப் பெற்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் லக்ஷான் ரந்திக 29 வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சுனில் குமாரசிங்க திறந்த வாக்கெடுப்பு மூலம் துணைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

The post வலப்பனை பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசமானது appeared first on Oruvan.com.

61,000 இற்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவு
இன்று பிற்பகல் 03 மணியுடன் நிறைவடைந்த 43 மணி நேரத்திற்குள் இலங்கையில் 61,000 இற்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளை பாதித்த பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக இந்த இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட 23,227 இடங்களில் ஏற்கனவே மின் விநியோகம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.

பாதகமான வானிலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அதிக எண்ணிக்கையிலான மின் தடைகள் பதிவாகியுள்ளன.

மீதமுள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரத்தை மீட்டெடுக்க தொடர்ச்சியான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விமலரத்ன தெரிவித்தார்.

மறுசீரமைப்பு முயற்சிகளின் போது வைத்தியசாலைகள் உட்பட அத்தியாவசிய சேவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுவதாக அவர் வலியுறுத்தினார்.

நாளொன்றுக்கு நாட்டில் 4,500 மின் தடைகளின் பதிவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 61,000 இற்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவு appeared first on Oruvan.com.

இலங்கையும் இந்தியாவும் இணைந்து சம்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி
திருகோணமலை, சம்பூரில் மொத்தம் 120 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தில் 50 மெகாவோட் சூரிய மின் உற்பத்தி நிலையம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் 70 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் என இரண்டு கட்டங்களாக இத்திட்டம் செயற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியானது இலங்கை மின்சார சபை மற்றும் இந்தியாவின்தேசிய அனல் மின் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக கட்டுமானம், உரிமை மற்றும் செயற்பாட்டு அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

இலங்கை மின்சார சபை மற்றும் இந்தியாவின்தேசிய அனல் மின் நிறுவனத்தின் கூட்டு முயற்சியாக,

சம்பூர் நிலக்கரி மின் திட்டத்திற்காக திருகோணமலை பவர் கம்பனி லிமிடட் மூலம் 50 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

The post இலங்கையும் இந்தியாவும் இணைந்து சம்பூரில்  சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி appeared first on Oruvan.com.

மின் துண்டிப்பு தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் – சஜித்
மின் துண்டிப்பு  மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் பொறுப்பான அமைச்சர் உடனடியாக கருத்து தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான பதில்களை நாடே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது. மின் துண்டிப்பு தொடர்ந்து நடக்குமா? அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா? போன்ற பிரச்சினைகளுக்கு பதில் வழங்கப்பட வேண்டும்.

இந்த மின் துண்டிப்பு குறித்து இந்த சபையில் அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும். பிரதான செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளாகி வருகின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கூட நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்த ஞாயிற்றுக்கிழமையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி உற்பத்திக்கு ஏற்ப விநியோகம் இடம்பெறாவிட்டால் மின் தடை ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. இது தொடர்பில் அரசாங்க தரப்பில் பதில் வழங்க வேண்டும்.

புதிய உற்பத்தி ஆலைகளைத் திறந்து சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேலும் குரங்குகள் மீது பழி போட வேண்டாம்” என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

The post  மின் துண்டிப்பு  தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் – சஜித் appeared first on Oruvan.com.

காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை மீளப்பெற்றதா அதானி குழுமம்?
மன்னாரிலும், பூநகரியிலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டமொன்றையும், மின் விநியோகக் கட்டமைப்பொன்றையும் உருவாக்கும் பணியை இந்தியாவின் அதானி குழுமம் முன்னெடுத்து வந்த நிலையில் தற்போது விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்தின் அனுமதி மற்றும் தீர்மானங்களில் ஏற்படும் தாமதங்களே விலகுவதற்கான காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மற்றும் இந்திய குழுக்களுக்கு இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் இறுதி முடிவு தாமதமாவதால்,மரியாதையுடன் விலக முடிவு செய்துள்ளதாக அதானி குழுமம் இலங்கை முதலீட்டு சபைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் அவரது குழுவினரும் அதானி திட்டம் குறித்து இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.

அந்த குழுமம் மீது அமெரிக்காவில் பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில் அதானி விவகாரம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருப்பதாகவும், அதன் பிறகு மேலும் முடிவெடுப்பதாகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறியிருந்தது.எவ்வாறாயினும் இலங்கை அரசாங்கம் இதுவரை இறுதி பதிலளிக்கவில்லை.

The post காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை மீளப்பெற்றதா அதானி குழுமம்? appeared first on Oruvan.com.

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கு குரங்கே காரணம் – அமைச்சர் ஜெயக்கொடி
பாணந்துறை உப மின் நிலையத்தின் மின்கட்டமைப்பில் குரங்கொன்று மோதியதன் காரணமாக நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.

இந்த சம்பவம் மின் விநியோகத்தை பாதித்ததால் மின்சார விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் அமைச்சரின் கூற்றை வலுசக்தி அமைச்சு உறுதிப்படுத்தவில்லை.

மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மின் தடைக்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

The post நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கு குரங்கே காரணம் – அமைச்சர் ஜெயக்கொடி appeared first on Oruvan.com.

மின் தடைக்கான காரணம் வெளியானது
பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நாடளாவிய ரீதியில் மின் விநியோகத் தடை ஏற்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

The post மின் தடைக்கான காரணம் வெளியானது appeared first on Oruvan.com.

இவ்வாண்டில் அதிகரித்துள்ள மின் துண்டிப்புகள்
நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்புகள் அதிகரித்துள்ளதாக மின்சாரப் பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் ஜூன் மாதம் வரையில் மின் துண்டிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதாக மின்சாரப் பாவனைனயாளர்கள் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் தரவுகளின்படி , 2023ஆம் ஆண்டில் உரிய நேரத்தில் பணத்தை செலுத்தாமையினால் 970,933 மின் துண்டிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சஞ்சீவ தம்மிக்க சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் ஜூன் மாதம் வரையில் 628,286 மின் துண்டிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 505,949 வீடுகள், 8,579 தொழிற்சாலைகள், 2,090 வழிபாட்டுத் தலங்கள், 39 ஹோட்டல்கள், 359 பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் 111,276 கடைகள் மற்றும் ஏனையவை உள்ளடங்குவதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி,கடந்த ஆண்டில் நாள் ஒன்றுக்கு 2,660 மின் துண்டிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இவ்வாண்டில் நாளொன்றுக்கு 3,443 மின் துண்டிப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

The post இவ்வாண்டில் அதிகரித்துள்ள மின் துண்டிப்புகள் appeared first on Oruvan.com.