Power Minister expresses regret over power outage Archives - Oruvan.com

மின்வெட்டு குறித்து வருத்தம் தெரிவித்த மின்சக்தி அமைச்சர்
நாடளாவிய ரீதியில் இதுவரை ஏற்பட்டுள்ள மின்வெட்டு காரணமாக மின்சார நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு மின்சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி வருத்தம் தெரிவித்தார்.

நாட்டில் மீண்டும் இதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுக்க தேவையான குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து மின்சார விநியோகத்தை நிர்வகிக்க மேற்கொள்ளப்பட்ட நாளாந்த மின்வெட்டை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் நிலையத்தின் மின்பிறப்பாக்கிகள் மூன்று செயலிழந்தன. இதன் விளைவாக, தேசிய மின் கட்டமைப்பு 900 மெகாவாட் மின்சார திறனை இழந்தது. நிலைமையை நிர்வகிக்க மின்வெட்டை அமுல்படுத்த எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன் காரணமாக, இலங்கை மின்சார சபை பெப்ரவரி 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் சுமார் ஒன்றரை மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்ததுடன் நேற்று ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இலங்கை மின்சார சபை தற்போது நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில், மின்பிறப்பாக்கி ஒன்று தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால், இதுவரை நீடித்து வந்த நாளாந்த மின்வெட்டு முடிவுக்கு வந்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் நுரைச்சோலையில் உள்ள ஏனைய இரண்டு மின்பிறப்பாக்கிகளை படிப்படியாக தேசிய மின்சார கட்டமைப்புடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

The post மின்வெட்டு குறித்து வருத்தம் தெரிவித்த மின்சக்தி அமைச்சர் appeared first on Oruvan.com.