Pope Archives - Oruvan.com

திருத்தந்தை பிரான்சிஸுக்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இறுதி அஞ்சலி
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை புனித திருத்தந்தை பிரான்சிஸுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்வதற்காக மல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கான் பயணமானார்.

திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை காலை 10 மணிக்கு புனித பீட்டர்ஸ் பேராலயத்திற்கு முன்னால் உள்ள சதுக்கத்தில் நடைபெறும் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.

88 வயதான திருத்தந்தை பிரான்சிஸ் கடந்த திங்கட்கிழமை (21) பக்கவாதம் மற்றும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

The post திருத்தந்தை பிரான்சிஸுக்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இறுதி அஞ்சலி appeared first on Oruvan.com.

மறைந்த பாப்பரசருக்கு யாழ்.மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் இரங்கல்
இறைவனடி சேர்ந்த பரிசுத்த பாப்பரசர் கத்தோலிக்கர்களுக்கான தலைவராக மட்டுமல்லாமல் முழு உலகத்தவர்களுக்குமான ஆன்மீகத் தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக அரும்பணியாற்றியவர் என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர், அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.

பரிசுத்த பாப்பரசரின் மறைவு குறித்த தனது இரங்கல் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“இறைவன் இவரது ஆன்மாவுக்கு நித்திய இளைப்பாற்றியை அளிக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன். போப் பிரான்சிசை அறியாதவர்கள் யாரும் கிடையாது.

ஆர்ஜென்டினா நாட்டை சேர்ந்த அவர் தென்னமெரிக்க நாட்டின் முதலாவது திருத்தந்தையாக தெரிவுசெய்யப்பட்டார். தனது பணிவாழ்வை அவர் வித்தாயாசமான விதத்தில் ஆற்றியமை நமக்குத் தெரியும்.

அவற்றுள், அநேகமாக புதிய திருத்தந்தையர்கள் தெரிவுசெய்யப்பட்டவுடன், வத்திக்கான் சதுக்கத்திற்கு வந்து அங்கு கூடியிருக்கும் லட்சக்கணக்கான மக்களை ஆசிர்வதிப்பார்கள்.

ஆனால் திருத்தந்தை பிரான்சிஸ் தான் திருத்தந்தையாக தெரிவுசெய்யப்படவுடன் குறித்த சதுக்கத்தில் வந்து மக்களை ஆசீர்வதிக்கவில்லை.

மாறாக மக்களை அவர் பார்த்து நீங்கள் என்னை ஆசீர்வதியுங்கள் பின்னர் நான் உங்களை ஆசிர்வதிக்கிறேன் என்று தலை வணங்கி மக்களின் ஆசீரைப் பெற்றுக்கொண்டார்.

இவ்வாறு மக்களிடம் இருந்து ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொண்டே அவர் தனது பணி வாழ்வை ஆரம்பித்தார்.

அதுமட்டுமல்லாமல், வத்திக்கானில் அவர் வசித்த இடத்தின் விறாந்தைகள் வழியாக தான் உறங்குவதற்கு முன்னர் நடந்துசென்று அங்கு எரியும் மின் விளக்குகளை அணைப்பதை பாப்பரசர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அது தொடர்பாக கேட்கின்றபொழுது இங்கு எரியும் முன்விளக்குகளைக் கொண்டு ஆர்ஜென்டீனாவில் நான் பணிபுரிந்த இடத்தின் ஒரு கிராமத்துக்கு ஒளி கொடுக்கலாம் என அவர் விளக்கமளித்தார் எனவும் வாசித்திருக்கிறோம்.

மிகவும் ஆடம்பரமான ஒரு கார் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட போதும் அவர் அதனைப் பெற மறுத்து வத்திக்கானில் சாமானியன் ஒருவரால் பாவிக்கப்படக்கூடிய காரையே தனது பாவனைக்காக பெற்றுக்கொண்டார்.

இவை வெறுமனே அவர் திருத்தந்தையாக இருந்தபோது செய்த செயல்கள் அல்ல. மாறாக கடந்த 12 ஆண்டுகளும் அவர் ஒரு எளிமையான வாழ்வையே வாழ்ந்தார். தனது பணிவாழ்வில் அவர் பெணகளுக்கு சமத்துவம் கொடுத்தார்.

தனது முதலாவது புனிதவார சடங்கில் பெண்கள் மற்றும் முஸ்லிம் மகளிரின் கால்களைக் கழுவி முத்தமிட்டதோடு திருச்சபையின் தலைமைப் பீடத்தில் கர்தினால்களால் வகிக்கப்பட்ட பல பதவிகளுக்கு பெண்களை நியமித்தார்.

இப்படி தனது பணிவாழ்வை வாழ்ந்த திருத்தந்தையின் முக்கிய இலக்காக திருச்சபை புதுப்பிக்கப்பட வேண்டும். திருச்சபையின் கறைகள் கழுவப்பட்வேண்டும். திருச்சபைக்குள் எல்லோரும் உள்வாங்கப்பட்டு இறைவனின் இரக்கத்தைப் பெறவேண்டும்.

திருச்சபையில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். பொதுநிலையினரும் திருச்சபையில் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பனவே இருந்தன.

சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பில் திருத்தந்தையால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பெரிதும் பாராட்டப்பட்டன. யாரும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத திருச்சபையாக இருக்க வேண்டும் என்தற்காக கூட்டொருங்கியக்கத் திருச்சபையை அவர் ஏற்படுத்தினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த உலகை விட்டுச் சென்றாலும், எதிர்காலத் திருச்சபை எப்படி அவர் வேணரடும் என தனது வாழ்வினாலும் போதனையாலும், தெளிவாக சொல்லித்தந்து சென்றிருக்கிறார்.

“சமாதானம் சாத்தியமானது” என்பதே திருத்தந்தை பிரான்சிஸ் சொன்ன கடைசி செய்தியாக இருக்கிறது.

இப்படிப்பட்ட திருத்தந்தையை தந்த இறைவனுக்கு நன்றி சொல்லி அவர் காட்டிய வழியில் நடக்க இறைவன் அருள் செய்வாராக’ எனத் தெரிவித்துள்ளார்.

The post மறைந்த பாப்பரசருக்கு யாழ்.மறை மாவட்ட குருமுதல்வர்  ஜெபரட்ணம் அடிகளாரின் இரங்கல் appeared first on Oruvan.com.

போப்பின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது
நிமோனியா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் மீண்டும் வென்டிலேட்டருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலை அவர் வென்டிலேட்டரிலிருந்து அகற்றப்பட்டார் என வத்திகான் அறிவித்திருந்தது.

எனினும், இன்று பிற்பகல் போப்பிற்கு கடுமையான சுவாசப் பிரச்சினைகள் இருப்பதாக வத்திக்கான் அறிவித்தது. இதனையடுத்து வைத்தியர்கள் அவரது நுரையீரலில் இருந்து சளியை அவசரமாக அகற்றினர்.

88 வயதான போப், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 14 ஆம் திகதி ரோமில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post போப்பின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது appeared first on Oruvan.com.

கவலைக்கிடமான நிலையில் போப் பிரான்சிஸ் – வத்திகான் தகவல்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசடமடைந்துள்ளதாக வத்திகான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்டகால ஆஸ்துமா சுவாச நெருக்கடியைத் தொடர்ந்து போப் பிரான்சிஸ் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

88 வயதான போப் பிரான்சிஸ் சிக்கலான நுரையீரல் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இரத்த சோகையுடன் தொடர்புடைய ஒரு நிலையை சோதனைகள் சுட்டிக்காட்டிய பின்னர் அவருக்கு இரத்தமாற்றமும் அளிக்கப்பட்டதாக வத்திக்கான் உறுதிப்படுத்தியது.

இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்த புதுப்பிப்பை வத்திக்கான் அறிக்கை ஒன்றின் ஊடாக தெளிவுப்படுத்தியுள்ளது.

“பரிசுத்த தந்தை தொடர்ந்து விழிப்புடன் இருக்கிறார், நேற்றையதை விட அதிக வலி இருந்தபோதிலும் ஒரு நாற்காலியில் நாள் ஒன்றை கழித்தார். தற்போது முன்கணிப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.”

மருத்துவர்கள் ஆரம்பத்தில் பிரான்சிஸுக்கு நிமோனியா மற்றும் சிக்கலான சுவாச தொற்று இருப்பதாகக் கண்டறிந்தனர், இதனால் அவர் குறைந்தது ஒரு வாரமாவது வைத்தியசாலையில் இருக்க வேண்டும் என்று கோரினார்.

அவர் இரவு முழுவதும் நன்றாகத் தூங்கியதாகக் கூறப்பட்டாலும், மருத்துவ நிபுணர்கள் செப்சிஸ் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவலை கொண்டுள்ளனர்.

“அவர் ஆபத்திலிருந்து மீளவில்லை,” என்று அவரது வைத்தியர் லூய்கி கார்போன் கூறினார்.

“எனவே அனைத்து பலவீனமான நோயாளிகளையும் போலவே அவர் தற்போது இருக்கிறார்கள் என்று நான் கூறுகிறேன்: வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சமநிலையற்றவராக மாறுவதற்கு மிகக் குறைந்த நேரம் ஆகும்.” என்று தெரிவித்துள்ளார்.

The post கவலைக்கிடமான நிலையில் போப் பிரான்சிஸ் – வத்திகான் தகவல் appeared first on Oruvan.com.

நிமோனியாவிலிருந்து மீள்வது கடினம் என்கிறார் போப் பிரான்சிஸ்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 88 வயது போப் பிரான்சிஸ் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் நிமோனியாவிலிருந்து மீள்வது கடினம் என தனது உதவியாளர்களிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு இரு நுரையீரல்களிலும் நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது.

இரட்டை நிமோனியா என்பது ஒரு கடுமையான தொற்று ஆகும், இதனால் சுவாசிப்பது மிகவும் கடினம்.

தற்போது ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் அவர், இந்த நோயிலிருந்து மீள்வது கடினம் என தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாக வத்திக்கானில் இருந்து தகவல் வெளியான போதிலும், போப் பிரான்சிஸ் இவ்வாறானதொரு அச்சத்தை வெளியிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

The post நிமோனியாவிலிருந்து மீள்வது கடினம் என்கிறார் போப் பிரான்சிஸ் appeared first on Oruvan.com.