political Archives - Oruvan.com

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கல் – மஹிந்த
அரசியல் தலைவர்களை சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைப்பது வருத்தம் அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மக்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நன்கு புரிந்து கொண்டுள்ளனர்எ, இதுபோன்ற செயல்கள் அரசியல் பழிவாங்கல்.

மக்கள் இன்னும் தன்னை நேசிக்கிறார்கள் . நாங்கள் மக்களை நேசிக்கிறோம். அதனால்தான் மக்கள் எங்களை நேசிக்கிறார்கள்” என்றார்.

The post ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கல் – மஹிந்த appeared first on Oruvan.com.

இலங்கை – தாய்லாந்து அரசியல் ஆலோசனைகளின் ஆறாவது சுற்று நாளை மறுதினம்
இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான 06 அவது சுற்று இருதரப்பு அரசியல் கலந்துரையாடல் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேங்கொக்கில் உள்ள தாய்லாந்து வெளியுறவு அமைச்சகத்தில் , இந்த கலந்துரையாடல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா மற்றும் தாய்லாந்தின் வெளியுறவுத்துறை செயலாளர் எக்சிரி பின்தருச்சி ஆகியோர் இணைந்து இந்த ஆலோசனைகளுக்கு தலைமை தாங்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் கொழும்பில் நடைபெற்ற ஐந்தாவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் மற்றும் 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி

மாதத்தில் முன்னாள் தாய்லாந்து பிரதமரின் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ வருகைக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை எதிர்வரும் ஆலோசனைக் கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யப்படும்.

இந்த ஆண்டு இலங்கையும் தாய்லாந்தும் இராஜதந்திர உறவுகளின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், அரசியல் ஈடுபாடு, வர்த்தகம் மற்றும் முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மீன்வளம் மற்றும் விவசாயத் துறை ஒத்துழைப்பு, பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த விவாதங்களில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post இலங்கை – தாய்லாந்து அரசியல் ஆலோசனைகளின் ஆறாவது சுற்று  நாளை மறுதினம் appeared first on Oruvan.com.

அரசியல் கட்சியின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு
அரசியல் கட்சியின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் சட்டத்திற்கமைய ஒவ்வொரு வேட்பாளருக்கும் செலவிடும் அதிகபட்ச தொகை தொடர்பில் இதன்போது கட்சி செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை தேர்தல் முறைப்பாடுகளை பெற்றுக்கொண்ட எழுத்துமூல முறைக்கு மேலதிகமாக இலகு முறையாக கையடக்க தொலைபேசி செயலி ஒன்றினை அறிமுக்கப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.

The post அரசியல் கட்சியின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு appeared first on Oruvan.com.

சஜித் பிரேமதாச மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் இடையே சந்திப்பு
எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களை ஒருங்கிணைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சித்

தலைவர் சஜித் பிரேமதாச இன்று புதன்கிழமை எதிர்க்கட்சித் தலைவர்களுடனான முக்கிய கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கினார்.

நாடாளுமன்றத்தை வலுப்படுத்தவும், நன்மை பயக்கும் அரசாங்க முயற்சிகளை ஆதரிக்கவும், தீங்கு விளைவிக்கும் கொள்கைகளை

எதிர்ப்பதற்கும் ஒன்றுபட்ட எதிர்க்கட்சியின் அவசியத்தை சஜித் பிரேமதாச இதன்போது வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கூட்டு நடவடிக்கை தொட்பில் ஒருமித்த கருத்தை எட்டுவதே கூட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

நாடாளுமன்றக் குழுக்களின் முக்கியத்துவத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் எடுத்துரைத்து, அதற்கேற்ப எதிர்கால நடவடிக்கைகளை

எடுப்பதற்கும் ஒப்புக்கொண்டார்.

கடந்த மாதம் 29 ஆம் திகதி சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலைத்

தொடர்ந்து இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களான கயந்த கருணாதிலக, ஜே.சி. அலவத்துவல, அஜித் பி பெரேரா, ரிஷாத் பதியுதீன்,

நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, தயாசிறி ஜயசேகர, ரவி கருணாநாயக்க, ஜீவன் தொண்டமான், சிவஞானம் ஸ்ரீதரன், ப.சத்தியலிங்கம்,

ஏ. காரியப்பர், வி. ராதாகிருஷ்ணன், அனுராதா ஜயரத்ன, டி.வி. சானகா, மற்றும் காதர் மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

The post சஜித் பிரேமதாச மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் இடையே சந்திப்பு appeared first on Oruvan.com.

புதிய அரசியல் கலாசாரத்துக்காக அர்ப்பணிப்போடு செயற்படுவோம் – சஜித்
புதிய அரசியல் கலாசாரத்துக்காக அர்ப்பணிப்போடு செயற்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புது வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் இன்று செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதில், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கேந்திர ஸ்தானமாக,  உயரிய நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு தனித்துவமானதொன்றாகும்.

வெறும் கோஷங்களுக்கு சுருங்கிப் போகாது, புதிய அரசியல் கலாசாரத்தின் ஊடாக மக்களின் எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் நிறைவேற்றப்படும், மக்கள் சார் அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க நாடாளுமன்றத்திலுள்ள அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் ” என்றார்.

மேலும்  அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடியவருடமாக அமைய வாழ்த்துகள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் இதன்போது தெரிவித்துள்ளார்.

The post புதிய அரசியல் கலாசாரத்துக்காக அர்ப்பணிப்போடு செயற்படுவோம் – சஜித் appeared first on Oruvan.com.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் புதிய அரசியலமைப்பை ஆதரிப்போம்
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் மாத்திரமே புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான பூரண ஆதரவை வழங்க முடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளார்.

அதிகாரப் பகிர்வு மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல் என்பன புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதாக உறுதியளித்துள்ள நிலையில் அதற்கான பணிகளை விரைவில் ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய அரசியலமைப்பு தயாரிப்பதை தற்போதைய அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான கலந்துரையாடல் கூட்டங்கள் அதிகளவானவற்றில் அப்போதைய மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்ட நிலையில் பொதுத் தேர்தலின் பின்னர் மூன்று சந்தர்ப்பங்களில் தான் ஜனாதிபதியை சந்தித்ததாகவும் அதன்போது புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும்,புதிய அரசியலமைப்பு தொடர்பான தனது கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அதற்கான பணிகளை ஆரம்பித்ததன் பின்னரே அறிவிக்க முடியும் என அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் புதிய அரசியலமைப்பை ஆதரிப்போம் appeared first on Oruvan.com.

அரசியல் தேவைக்கேற்ப சுகாதாரத்துறையை பயன்படுத்த இனிஇடமில்லை – நலிந்த
வரலாற்றில் முதன்முறையாக வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மஹரகம அரச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது மற்றும் ஒரே எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்த அணு மாற்று சிகிச்சை பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று வியாழக்கிழமை (02) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர்

இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

” சுகாதார அமைச்சகம் என்பது பொதுவாக எந்த அரசாங்கமும் கேட்கும் பணத்தை கொடுக்கும் இடமாகும். வரலாற்றில் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட அதிகூடிய தொகை இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு வெளிநாட்டு சர்வதேச அமைப்புகளின் ஆதரவை உள்ளூர் தூதுவர்கள் மூலமாகவும் நமது அமைச்சகத்தின் மூலமாகவும் பெறுகிறது.

தற்போது நாம் ஏற்பாடுகள் அனைத்தையும் முறையாகவும், திட்டமிட்டதாகவும் பயன்படுத்த வேண்டும். எதிர்வரும் காலங்களில், அரசியல் தேவையின் அடிப்படையிலோ, வைத்தியசாலைக்குச் சென்றபின் மனதில் எழும் உணர்வுப்பூர்வமான எண்ணங்களின் அடிப்படையிலோ எவருக்கும் உதவ முடியாது.

அடுத்த 20 ஆண்டுகளை கருத்திற் கொண்டு தேசிய திட்டத்தின்படி இந்த வளர்ச்சிப் பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய உள்ளூர் வைத்தியசாலையை பொது வைத்தியசாலையாகவும் தேசிய வைத்தியசாலையாகவும் அபிவிருத்தி செய்யும் கனவுகளை கொண்டிருக்கலாம்.

ஆனால் அந்தக் கனவுகள் தேசியத் திட்டத்துடன் எந்தளவிற்கு நன்றாக ஒத்துப்போகின்றன என்பதைக் கருத்திற் கொண்டு, செயல்படுவோம்” என்றார்.

The post அரசியல் தேவைக்கேற்ப சுகாதாரத்துறையை பயன்படுத்த இனிஇடமில்லை – நலிந்த appeared first on Oruvan.com.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி மன்னாரில் கையெழுத்துப் போராட்டம்
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி மன்னாரில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் பஸ் தரிப்பு நிலையத்துக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும் புணர்வாழ்வளிக்கப்பட்டு, சமூக மயப்படுத்தப்பட்ட பின்னர், நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டு, மீண்டும் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும் புதிய அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி இந்த கையெழுத்து போராட்டம் இடம் பெற்றுள்ளது.

இதன்போது பொதுமக்கள் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் அருட்தந்தையர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள், எனப் பலரும் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

The post அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி மன்னாரில் கையெழுத்துப் போராட்டம் appeared first on Oruvan.com.

ரணில் மீது டலஸ் குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வித நியாயமான காரணமும் இன்றி தேர்தலை ஒத்திவைத்தார் எனவும், இதுவொரு கூட்டு ஊழலுக்குப் பிறகு செய்யப்பட்ட அரசியல் கருக்கலைப்பு மற்றும் நிதி ரீதியாக செய்யப்பட்ட பொருளாதாரக் கொலை என்று சுதந்திர மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் டலஸ் அழகப்பெருமவினால் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக செலவிடப்பட்ட 72 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் விரயமானது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார் எனவும் சுதந்திர மக்கள் பேரவையின் தலைவர் டலஸ் அழகப்பெரும தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

The post ரணில் மீது டலஸ் குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.