PMD Archives - Oruvan.com

வடக்கு கிழக்கில் இராணுவ வசமுள்ள காணிகளை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கும், மூடப்பட்டுள்ள வீதிகளைத் திறப்பதற்கும் அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி, 2025 -ஆம் ஆண்டில் மாத்திரம் வடக்கில் சுமார் ஆயிரம் ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக் கூறினார்.

மீதமுள்ள காணிகளையும் முறைப்படியாக விடுவிக்கத் திட்டமிட்டுள்ள அவர், நீண்டகாலமாக மூடப்பட்டுள்ள வீதிகளைத் திறப்பதில் உள்ள சிக்கல்களுக்குச் சாதகமான தீர்வுகளை வழங்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், மத வழிபாட்டுத் தலங்களுக்குரிய காணிகள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

மக்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்தும் அதேவேளை, கைத்தொழில் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்காக காணிகளை முறையாக முகாமைத்துவம் செய்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் சுட்டிக்காட்டினார்.

The post வடக்கு கிழக்கில் இராணுவ வசமுள்ள காணிகளை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு appeared first on Oruvan.com.

2026 ஆம் ஆண்டுக்கான பூர்வாங்க வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல் ஆரம்பம்
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது தொடர்பான பூர்வாங்கத் வரவு செலவுத் திட்ட திட்டமிடல் மற்றும் அபிவிருத்திப் போக்குகள் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (16) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்படி, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி நிதியமைச்சின் அதிகாரிகளிடம் கேட்டறிந்ததுடன், வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளைக் கோருவதற்கான சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகவும், அந்தந்த நிறுவனங்கள் தொடர்பான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை உரிய செலவின வரம்பிற்குள் சமர்ப்பிப்பதற்கு இம்மாதம் 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சின் அதிகாரிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தைத் திட்டமிடும்போது, நாட்டை தற்போதைய நிலையிலிருந்து மீட்டெடுக்க அவசியமான முக்கிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

இதன்படி, டிஜிட்டல் மயமாக்கல், பொதுப் போக்குவரத்தை வலுவூட்டல், பொருளாதாரத்திற்கு கிராமிய சமூகத்தின் பங்களிப்பு போன்றவற்றின் அடிப்படையிலான செயற்திட்டங்களில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை வழங்கினால் மாத்திரம் போதாது என்றும், குறித்த வேலைத் திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு கிடைக்கிறதா என்பதை ஆராய்ந்து அதற்குத் தேவையான பொறிமுறைகளை பலப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

The post 2026 ஆம் ஆண்டுக்கான பூர்வாங்க வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல் ஆரம்பம் appeared first on Oruvan.com.

ஜனாதிபதி நிதியத்திற்கு லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபா நன்கொடை
லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின், இலங்கை முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இன்று வெள்ளிக்கிழமை (04) ஜனாதிபதி செயலகத்தில்  கையளித்தார்.

இந்த நன்கொடை, லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் இலங்கையின் கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசார துறைகளுக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

The post ஜனாதிபதி நிதியத்திற்கு லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபா நன்கொடை appeared first on Oruvan.com.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார வசதிகளை வழங்கும் தேசிய மட்ட வேலைத்திட்டம்
பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முதன்மை சுகாதார பாதுகாப்பு வசதிகளை வழங்கும் தேசிய மட்ட வேலைத்திட்டம் இன்று புதன்கிழமை (14) ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்படி “க்ளீன் ஸ்ரீலங்கா” ஜனாதிபதி செயலணி, வலுசக்தி அமைச்சு மற்றும் நாட்டின் நான்கு பிரதான எரிபொருள் விநியோகத்தர்களான, இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் , லங்கா IOC, சினொபெக் மற்றும் RM பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதன்போது கைச்சாத்திடப்பட்டன.

அதன்படி மூன்று வருட காலத்திற்குள் பொதுமக்களுக்காக நவீன சுகாதார பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய 540 இடங்களை அமைக்க எதிர்பார்க்கப்படுகிறது.

அவற்றில் 100 இடங்களை 2025 ஆம் ஆண்டுக்குள் முழுமைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம், நிலையான பொதுச் சேவையை வழங்குவதற்கான இயலுமை கிட்டும் எனவும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்தார்.

அரச மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் இந்நாட்டுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்க முடியும் என்பதற்கு இத்திட்டம் சிறந்த உதாரணம் எனவும், எதிர்காலத்தில் முன்னணி வர்த்தக நிலையங்கள் ஊடாக இந்த வேலைத்திட்டத்தினை ​மேலும் பலப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.

இது வெறுமனே ஒப்பந்தமாக மாத்திரமின்றி பெருமிதமான மற்றும் சுகாதார பாதுகாப்பு மிகுந்த இலங்கைக்கான உறுதிப்பாடாக அமையும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சுட்டிக்காட்டினார்.

வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரசல் அபோன்சு உட்பட எரிபொருள் விநியோக நிறுவனங்களின் பிரதானிகளும் கிளீன் ஸ்ரீலங்கா ஜனாதிபதி செயலணியின் பிரதானிகளும் இதன்போது கலந்துகொண்டனர்..

The post எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார வசதிகளை வழங்கும் தேசிய மட்ட வேலைத்திட்டம் appeared first on Oruvan.com.

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்து பல மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் மாயம்
கடந்த காலங்களில் ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து 162 மில்லியன் ரூபா மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனது தொடர்பான விரிவான விசாரணையை நடத்தி நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைக்குமாறு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு விளக்க நடவடிக்கை எடுப்பதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததை அடுத்து நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இது தொடர்பாக கொள்முதல் அதிகாரியிடமிருந்து ஏற்கனவே ஒரு அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்த குற்றப் புலனாய்வு திணைக்களம், பொருட்களைப் பெற்றவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியது.

காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட பொருட்களைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

The post ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்து பல மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் மாயம் appeared first on Oruvan.com.