PM Archives - Oruvan.com

போர் தொடர்பில் ட்ரம்ப் தெளிவுபடுத்த வேண்டும் என அவுஸ்திரேலியா வலியுறுத்தல்
ஈரானில் இடம்பெறும் போர் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெளிவுபடுத்த வேண்டும் என அவுஸ்திரேலியப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை தற்போது நிலவும் பதற்றம் தணிக்கப்படுவதை காண விரும்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

கோரிக்கையொன்றைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பிற்கு ஆதரவளிக்க அவுஸ்திரேலியா விமானங்களை அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க உதவும் வகையில் கடற்படைகளை அனுப்புவதற்கு அவுஸ்திரேலியா மறுத்துள்ளதாக அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

The post போர் தொடர்பில் ட்ரம்ப் தெளிவுபடுத்த வேண்டும் என அவுஸ்திரேலியா வலியுறுத்தல் appeared first on Oruvan.com.

ஹரிணி அமரசூரிய – சீன மக்கள் குடியரசின் பிரதமர் இடையே சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சீன மக்கள் குடியரசின் அரச பேரவையின் பிரதமர் லி கியாங் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், இலங்கையின்

கடன் மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்தித் துறைகளுக்கு உதவுதல் போன்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கல்வித் துறையில் ஸ்மார்ட் வகுப்பறைகள், புலமைப்பரிசில்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கான விசேட பட்டப் படிப்பு

கற்கைகள் மற்றும் பாடசாலை சீருடை துணிகளை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் விவசாயம், சுற்றுலா, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பு குறித்தும் இதன் போது கலந்துரையாடல்

இடம்பெற்றுள்ளது.

The post ஹரிணி அமரசூரிய – சீன மக்கள் குடியரசின் பிரதமர் இடையே சந்திப்பு appeared first on Oruvan.com.

பிரதமர் இன்று சீனாவுக்கு விஜயம்
சீன அரசாங்கத்தின் அழைப்பைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் தொடர்பான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று சீனாவுக்கு சென்றார்.

“ஒரு பகிரப்பட்ட எதிர்காலம்: பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயன்முறை” என்ற கருப்பொருளின் கீழ் பெய்ஜிங்கில் நடைபெறும் இந்த உயர்மட்ட உச்சிமாநாட்டை சீன அரசும் ஐ.நா. பெண்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

பிரதமரின் இந்த விஜயத்தின் போது, ​​பாலின சமத்துவம், பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் உள்ளடக்கிய கொள்கை சீர்திருத்தங்களில் இலங்கையின் முன்னேற்றத்தை எடுத்துரைக்கும் முக்கிய உரையை ஹரிணி அமரசூரிய ஆற்றவுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான சமூக மேம்பாடு, கல்வி மற்றும் பெண்கள் தலைமையிலான தொழில்முனைவோர் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில், சீன ஜனாதிபதி சி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கியாங் ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் அவர் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் பிரதிநிதிகள் பிரதமருடன் சென்றுள்ளனர்.

The post பிரதமர் இன்று சீனாவுக்கு விஜயம் appeared first on Oruvan.com.

போர் நிறுத்தம் தொடர்பான ட்ரம்ப்பின் முயற்சியை வரேவேற்ற பிரதமர் மோடி
அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் முன்வந்துள்ள நிலையில், ட்ரம்ப்பின் முயற்சியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.

மத்திய கிழக்கில் நீடித்த மற்றும் நியாயமான அமைதிக்கு வித்திடக்கூடிய இந்த முயற்சிக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 ஆம் அண்டு ஒக்டோபரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்தது.

இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை காரணமாக காசாவில் 65,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், “மத்திய கிழக்கு பகுதியில் ஏதேனும் ஒரு வழியில் அமைதி ஏற்பட வேண்டும். ரத்தம் தெறிக்கும் வன்முறை முற்று பெற வேண்டும். ஹமாஸ் வசம் உள்ள அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்.

அதில் உயிரிழந்தவர்களின் உடலையும் ஒப்படைக்க வேண்டும். முக்கியமாக வொஷிங்டன் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 06 மணிக்குள் அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் உடன்பட வேண்டும். அந்த ஒப்பந்தம் உலகத்தின் பார்வைக்கு பகிரப்படும்.

இதுவே ஹமாஸுக்கு இறுதி வாய்ப்பு. இதற்கு உடன்படவில்லை என்றால் அவர்களுக்கு எதிராக மிகவும் தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும். அது இதுவரை யாரும் காணாத நரகமாக அமையும்.” என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பு அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்கத் தயார் என்றும், உடனடியாக அமைதிப் பேச்சுவார்த்தையை மத்தியஸ்தர்கள் மூலம் முன்னெடுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

The post போர் நிறுத்தம் தொடர்பான ட்ரம்ப்பின் முயற்சியை வரேவேற்ற பிரதமர் மோடி appeared first on Oruvan.com.

“ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர்” – இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இந்திய அணியின் வெற்றிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2025 ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 05 விக்கெட்டுகளால் வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது.

இந்நிலையில் “ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர், அதன் விளைவு ஒன்றுதான், இந்தியா வெற்றி பெற்றது. நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்” என பிரதமர் மோடி தனது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post “ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர்” – இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து appeared first on Oruvan.com.

இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி இன்று விஜயம்
இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்லவுள்ளார்.

அத்துடன் அங்கு 7,300 கோடி ரூபா மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் குகி – மைத்தேயி மக்கள் இடையே கடந்த 2023 மே மாதத்தில் மோதல் ஏற்பட்டது.

இம்பால் போன்ற சமதளப் பகுதிகளில் வசிக்கும் மைத்தேயி மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று நீண்டநாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையாக மாறியது.

இந்த மோதலில் 260 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் அண்டை மாநிலங்களில் தஞ்சம் அடைந்தனர். பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இரு பிரிவுகளையும் சேர்ந்த மூத்த தலைவர்களுடன் மத்திய, மாநில அரசுகள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தின.

தற்போது இயல்புநிலை திரும்பி வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இனக் கலவரத்துக்கு பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி இன்று மணிப்பூர் செல்கிறார்.

இதுகுறித்து தலைநகர் இம்பாலில் மாநில தலைமைச் செயலர் புனித்குமார் கோயல் நேற்று கூறியதாவது,

மிசோரம் மாநிலத்தில் பைரபி – சாய்ரங் ரயில் பாதை திட்டத்தை பிரதமர் மோடி 13 ஆம் திகதி தொடங்கி வைக்கிறார். பின்னர் பிற்பகல் 12.30 மணிக்கு மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொள்கிறார்.

அங்கு குகி – மைத்தேயி கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களிடம் உரையாடுவார்.

பின்னர், 7,300 கோடி ரூபா பெறுமதியான நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அமைதி மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

தொடர்ந்து தலைநகர் இம்பாலுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு பிற்பகல் 2.30 அளவில்1,200 கோடி ரூபா மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமரின் வருகை, மணிப்பூரில் முழு அமைதி ஏற்படவும், இயல்புநிலை திரும்பவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்” என்றார்.

இதேவேளை, ‘பிரதமர் மணிப்பூர் செல்வது வரவேற்கத்தக்கது’ என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மேலும் பிரதமர் வருகையை முன்னிட்டு மணிப்பூர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

The post இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி  இன்று விஜயம் appeared first on Oruvan.com.

இந்தியா மூன்றாவது சிறந்த பொருளாதார நாடாக மாறும் – மோடி
இந்தியா மூன்றாவது சிறந்த பொருளாதார நாடாக மாறுவதை நோக்கி நகர்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பெங்களூரின் ஆர்.வி.ரோடு மற்றும் பொம்மசந்திரா இடையே மஞ்சள் வழித்தடத்தில் சாரதி இல்லா மெட்ரோ புகையிரத சேவையையும், 03 வந்தே பாரத் புகையிரத சேவையையும், பிரதமர் மோடி இன்று ஆரம்பி வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் 05 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரெயில் சேவை காணப்பட்ட நிலையில் தற்போது 24 நகரங்களில் சுமார் 1,000 கிலோ மீற்றருக்கும் அதிகமான தொலைவுகளில் மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவில 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 160 ஆக உயர்வடைந்துள்ளதையும் பிரதமர்டி மோடி இதன்போது சுட்டிக்காட்டினார்.

The post இந்தியா மூன்றாவது சிறந்த பொருளாதார நாடாக மாறும் – மோடி appeared first on Oruvan.com.

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்குமாறு பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்குப் பின்னர்,பாதுகாப்பு நிலைமையை மீளாய்வு செய்வதற்கான பாதுகாப்புக் கூட்டத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார்.

எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் எதிரான விழிப்புணர்வையும் வலுவான பதிலடியையும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர்,

ஜெனரல் அனில் சவுகான் மற்றும் முப்படைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பாகிஸ்தானின் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியது.

பாகிஸ்தானின் எந்தவொரு தாக்குதலுக்கும் கடுமையான பதிலடி கொடுக்குமாறு பிரதமர் மோடி முப்படைத் தலைவர்களிடம்

கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

The post பாகிஸ்தானின் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்குமாறு பிரதமர் மோடி அறிவிப்பு appeared first on Oruvan.com.

பஹல்காம் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி, இந்திய பிரதமருடன் தொலைபேசி உரையாடல்
இந்தியாவின் காஷ்மீர் – பஹல்காமில் இடம்பெற்றுள்ள தாக்குதலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வன்மையாக கண்டித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சுமார் 15 நிமிடங்கள் தொலைபேசி உரையாடலில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார்.

இந்த பயங்கரவாதத் தாக்குதலை அறிந்ததும் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகக் கூறிய ஜனாதிபதி, இலங்கை எப்போதும் இந்திய மக்களுடன் சகோதரத்துவத்தால் பிணைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

உலகில் எங்கு பயங்கரவாதம் இடம்பெற்றாலும் அதனை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பில் ஜனாதிபதி இரங்கல் தெரிவித்தார்.

தற்போதைய  பதற்றமான சூழ்நிலை விரைவாகத் தீர்க்கப்பட்டு பிராந்திய அமைதி நிலைநாட்டப்படுவதை இலங்கை நம்புவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

The post பஹல்காம் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி, இந்திய பிரதமருடன் தொலைபேசி உரையாடல் appeared first on Oruvan.com.

கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சிறிய அளவு மட்டுமே கிராமத்தை வந்தடைந்தது – பிரதமர்
முன்னைய அரசாங்கங்களில் கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சிறிய அளவு மட்டுமே கிராமத்தை வந்தடைந்தது. அவை இடையில் உள்ள தனிப்பட்ட நபர்களின் சட்டைப் பைகளுக்குள் சென்றன. அதனால்தான் கிராமங்கள் முறையாக அபிவிருத்தியடையவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட நட்டாங்கண்டல் பொதுச் சந்தை வளாகத்திற்கு அருகிலும், மல்லாவி பகுதியில் உள்ள துணுக்காய் பிரதேச சபைக்கு சொந்தமான பொது நூலக வளாகத்திலும் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“நீங்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையின் காரணமாகவே எமது நாட்டில் 76 ஆண்டுகளாக இருந்த பாரம்பரிய அரசியல் முறைமையை மாற்றியமைத்து 2024 ஆம் ஆண்டில் எங்களுக்கு ஒரு வரலாற்று வெற்றியை அளித்தீர்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். அந்த நம்பிக்கையை பாதுகாப்போம் .

நான் இங்கு வந்தபோது, உங்களுக்கு அருகிலுள்ள வைத்தியசாலையில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதையும், சத்திர சிகிச்சை கூடம் இல்லை என்பதையும், சத்திர சிகிச்சை கூடம் உள்ள வைத்தியசாலைக்கு சுமார் 50 கிலோ மீற்றர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பதையும் அறிந்தேன்.

அவ்வாறே, பிரதேச பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவில் உயர்தரத்தில் கற்பிக்க ஆசிரியர்கள் இன்மையால், பிள்ளைகள் 50 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஒரு பாடசாலையில் விஞ்ஞான துறையை கற்பதற்கு 50 கிலோ மீற்றர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்றும் கேள்விப்பட்டேன்.

பொதுப் போக்குவரத்து, பிள்ளைகளுக்கான கல்வி வசதிகள், மின்சாரம் போன்ற சரியான வசதிகள் இன்மையால் பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம்.

இந்த சூழ்நிலைகளை மாற்ற விரும்புவதால் தான் நீங்கள் எங்களைத் தேர்ந்தெடுத்தீர்கள்.

முன்னைய அரசியல் முறைமையின் கீழ், கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி கிராமத்தை வந்தடையும்போது, 75% தனிநபர்களின் சட்டைப் பைகளுக்குச் சென்றது, மீதமுள்ளவையே கிராமத்திற்கு வந்துசேர்ந்தன. அந்த முறைமையின் காரணமாக தான்,  இந்தப் பகுதிகள் இதுவரை அபிவிருத்தியடையவில்லை.

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அதிக அளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால், மோசடி அல்லது ஊழல் இல்லாமல் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அந்தப் பணத்தை முறையாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு குழுவை பிரதேச தலைமைத்துவத்திற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், தேசிய மக்கள் சக்தியில் உள்ள தனது குழு அந்த நோக்கத்திற்கு மிகவும் பொருத்தமான குழுவென நம்பிக்கையுடன் கூற முடியும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

The post கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சிறிய அளவு மட்டுமே கிராமத்தை வந்தடைந்தது – பிரதமர் appeared first on Oruvan.com.