PM Modi Archives - Oruvan.com

அமெரிக்காவுடனான நல்லுறவுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் – ஜெய்சங்கர் கருத்து
அமெரிக்காவுடனான இந்தியாவின் நல்லுறவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் எப்போதும் வலுவான உறவை கொண்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

“ ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்தல் தொடர்பாக, இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளதால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் “இருண்ட சீனாவிடம் இந்தியாவை இழந்துவிட்டோம்” என்று தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து, வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் பேசிய ட்ரம்ப், “நான் எப்போதும் மோடியுடன் நண்பராக இருப்பேன், அவர் ஒரு சிறந்த பிரதமர். ஆனால் இந்த குறிப்பிட்ட தருணத்தில் அவர் என்ன செய்கிறார் என்பது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இந்தியாவும், அமெரிக்காவும் ஒரு சிறப்பான உறவைக் கொண்டுள்ளன. எனவே கவலைப்பட ஒன்றுமில்லை.” என்று கூறினார்.

ட்ரம்ப்பின் இந்தப் பேச்சுக்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்த பிரதமர் மோடி, “அதிபர் ட்ரம்பின் உணர்வுகளையும், எங்கள் உறவுகள் குறித்த நேர்மறையான மதிப்பீட்டையும் ஆழமாகப் பாராட்டுகிறேன், முழுமையாகப் பகிர்ந்து கொள்கிறேன். இந்தியாவும் அமெரிக்காவும் மிகவும் நேர்மறையான மற்றும் தொலைநோக்கு பார்வையுடைய நல்லுறவை கொண்டுள்ளன.” என தெரிவித்திருந்தார்.

The post அமெரிக்காவுடனான நல்லுறவுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் –  ஜெய்சங்கர் கருத்து appeared first on Oruvan.com.

பயங்கரவாதத்தை சில நாடுகள் வெளிப்படையாக ஆதரிப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு
பயங்கரவாதத்தை சில நாடுகள் வெளிப்படையாக ஆதரிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று ஆரம்பமான 25 ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.

பயங்கரவாதம் என்பது எந்வொரு நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் அச்சுறுத்தல் ஆகும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பும் கலந்து கொண்ட இந்த உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

கடந்த 40 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் தாக்குதலை இந்தியா அனுபவித்து வருவதாகவும் அண்மையில் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதத்தின் மோசமான பக்கத்தைக் கண்டாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம் தொடர்பாக எந்த இரட்டை நிலைப்பாடும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்பதை நாம் தெளிவாகவும் ஒருமனதாகவும் கூற வேண்டும் என்றும்

அவர் வலியுறுத்தியுள்ளார்.

பஹல்காம் தாக்குதல் மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு நாட்டிற்கும், நபருக்கும் வெளிப்படையான சவாலாக இருந்தென்றும் பிரதமர் மோடி

சுட்டிக்காட்டினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கடந்த 2001 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post பயங்கரவாதத்தை சில நாடுகள் வெளிப்படையாக ஆதரிப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

வர்த்தகத்தை மீட்டெடுக்குமாறு வலியுறுத்தி ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்
இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியதால் தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில், பருத்தி மீதான இறக்குமதி வரிகளை நீக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு வலுயுறுத்தினார்.

இந்நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை பருத்தி மீதான வரிகளை தற்காலிகமாக இரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளதால், இந்திய புடவை கைத்தொழில் துறைக்கு உதவியாக பருத்தி மீதான 11% இறக்குமதி வரிக்கு தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post வர்த்தகத்தை மீட்டெடுக்குமாறு வலியுறுத்தி ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் appeared first on Oruvan.com.

பாகிஸ்தான் இலக்கு வைத்த ஆதம்பூர் விமானப்படை தளத்திற்குச் சென்ற பிரதமர் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செவ்வாய்க்கிழமை பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்குச் சென்று விமானப்படையினருடன் கலந்துரையாடினார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பின்னர் பிரதமர் மோடியின் விஜயம் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, மே 9 மற்றும் 10 ஆம் திகதிகளின் இடைப்பட்ட இரவில்

பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொள்ள முயன்ற விமானப்படை நிலையங்களில் ஆதம்பூரும் ஒன்றாகும்.

The post பாகிஸ்தான் இலக்கு வைத்த ஆதம்பூர் விமானப்படை தளத்திற்குச் சென்ற பிரதமர் மோடி appeared first on Oruvan.com.

பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கின்றது – தமிழக முதலமைச்சர்
பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றிய போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சதீவை மீட்க வேண்டும், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்க வேண்டும் என இலங்கை செல்லும் பிரதமர் மோடிக்கு, இது குறித்து அந்நாட்டு அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மான நிறைவேற்றி இருந்தோம்.

ஆனால் இது குறித்து அவர் பேசியதாக பெரிதளவில் செய்தி இல்லை, இது வேதனை அளிக்கிறது.இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசு சில முன்னெடுப்பகளை எடுத்துள்ளது. இலங்கை சிறையில் உள்ள 97 மீனவர்களை விடுவிக்கவும் பெரிய அளவில் நடவடிக்கை இல்லை.

பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது. தமிழர் நலனுக்கு தொடர்பில்லாத பிரதமரின் இலங்கை பயணம். மத்திய அரசு நடவடிக்கை எடுக்க விட்டாலும் தமிழக அரசு மீனவர்களுக்கு துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.

The post பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கின்றது – தமிழக முதலமைச்சர் appeared first on Oruvan.com.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அநுராதபுரத்திற்கு வருகை
மூன்று நாள் அரச பயணமாக இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சற்று நேரத்திற்கு முன்னர் அநுராதபுரத்திற்கு சென்றடைந்துள்ளார்.

பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் வருகை தந்துள்ளார். இந்நிலையில் இருவரும்  புனித ஜெய ஸ்ரீ மகா போதியில் வழிபாடுகளில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஇ

இதைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் அநுராதபுரம் ரயில் நிலையத்தில் புதிய ரயில் சமிக்ஞை அமைப்பையும், புதிதாக மேம்படுத்தப்பட்ட மஹோ-ஓமந்தை ரயில் பாதையையும் திறந்து வைக்கவுள்ளனர்.

இதற்கிடையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் வருகையை முன்னிட்டு இன்று அனுராதபுரத்தில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அநுராதபுரத்திற்கு வருகை appeared first on Oruvan.com.

உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் – புடின் அறிவிப்பு
உக்ரைன் போர்நிறுத்த திட்டம் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பான முயற்சிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

போர் நிறுத்தத்திற்கு உடன்படுங்கள்

ரஷ்யா விரோதப் போக்கை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்கிறது என்று விளாடிமிர் புடின் கூறியுள்ளார். எனினும், நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் நெருக்கடியின் மூல காரணங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

புடின் என்ன சொன்னார்?

வியாழக்கிழமை பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவுடன் கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய விளாடிமிர் புடின், விரோதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டங்களுடன் ரஷ்யா உடன்படுகிறது என்றார்.

ஆனால் இந்த போர் நிறுத்தம் நீண்டகால அமைதியைக் கொண்டுவரவும் நெருக்கடியின் மூல காரணங்களை அகற்றவும் விரும்புகிறது என்று வலியுறுத்தியுள்ளார்.

கடந்த பெப்ரவரி தொடக்கத்தில், ரஷ்யா-உக்ரைன் மோதலைத் தீர்க்க டொனால்ட் டிரம்பின் முயற்சிகளை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றிருந்தார்.

மேலும் பேச்சுவார்த்தை மேசையில் மோதலைத் தீர்க்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். இந்த மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு நடுநிலையானது அல்ல, மாறாக அது அமைதிக்கு ஆதரவானது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் தலைவர்களையும் தான் சந்தித்திருப்பதாக பிரதமர் வலியுறுத்தினார், மேலும் ரஷ்ய ஜனாதிபதி புடின் முன்னிலையில் “இது போரின் சகாப்தம் அல்ல” என்று தான் கூறியதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

The post உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் – புடின் அறிவிப்பு appeared first on Oruvan.com.

இலங்கை வருகின்றார் இந்தியப் பிரதமர் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஏப்ரல் நான்காம் திகதி இலங்கை வரும் பிரதமர் மோடி ஆறாம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் உட்பட்டோரை சந்திக்கவுள்ளார். மேலும், சம்பூருக்கு மின் திட்டமொன்றையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அதேபோல அனுராதபுரம் ஸ்ரீ மகாபோதிக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமரின் வருகையையொட்டி நாட்டில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்காக இந்தியாவில் இருந்து உயர்மட்ட பாதுகாப்பு குழுவொன்று நாட்டிற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அனுரகுமார திசாநாயக்க முதல் வெளிநாட்டுப் பயணமாக கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் இந்தியா சென்றிருந்தார்.

இதன் போது பிரதமர் மோடி உள்ளிட்ட உயர் மட்ட தலைவர்களை சந்தித்திருந்த ஜனாதிபதி அனுரகுமார, பிரதமர் மோடியை இலங்கை வருமாறு அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

The post இலங்கை வருகின்றார் இந்தியப் பிரதமர் மோடி appeared first on Oruvan.com.

பிரதமர் மோடி பயணிக்கவிருந்த விமானத்துக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி பயணிக்கவிருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர்

ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றைய தினம், பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் போது அவரது விமானத்தை பயங்கரவாதிகள் தாக்கலாம் என மிரட்டல் விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக மும்பை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு செம்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.

இதன் தீவிர தன்மையை கருத்திற் கொண்டு பொலிஸார் ஏனைய விசாரணை நிறுவனங்களுக்கு தகவல் அளித்து விசாரணையைமேற்கொண்டனர்.

விசாரணையில் கைதான இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரதமர் மோடி பயணிக்கவிருந்த விமானத்துக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது appeared first on Oruvan.com.