Philippines Archives - Oruvan.com

பிலிப்பைன்ஸை சென்றடைந்த பிரதமர்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) அழைப்புக்கமைய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அவர் சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்த நிகழ்வுகளில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிலாவில் உள்ள நினோய் அகினோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமரை, பிலிப்பைன்ஸுக்கான இலங்கை தூதுவர் டாக்டர் சானக தல்பஹேவா (Chanaka Talpahewa), பிலிப்பைன்ஸ் அரச அதிகாரிகள் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் பிரதிநிதிகள் வரவேற்றனர்.

இந்த விஜயத்தின் போது, ​​மணிலாவில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில் பிரதமர் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.

மகளிர் தின கொண்டாட்டத்துடன் இணைந்து, பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக, பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் பல அமைச்சர்களுடன் பிரதமர் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

The post பிலிப்பைன்ஸை சென்றடைந்த பிரதமர் appeared first on Oruvan.com.

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு
பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவின் அண்டை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை மின்டானாவோ பகுதியில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதன்படி, தெற்கு பிலிப்பைன்ஸில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிமீ (186 மைல்) தொலைவில் அமைந்துள்ள கடற்கரைகளுக்கு ஆபத்தான சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு மற்றும் பிலிப்பைன்ஸ் நில அதிர்வு நிறுவனம் இரண்டும் சுனாமி எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.

சேதம் மற்றும் பின்அதிர்வுகள் எதிர்பார்க்கப்படுவதாக பிலிப்பைன்ஸ் நில அதிர்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கதை அடுத்து மக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்குமிங்கும் ஓடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது மக்கள் கடும் பீதியடைந்ததாக தெற்கு பிலிப்பைன்ஸ் மாகாணமான டாவோ ஓரியண்டலின் ஆளுநர் தெரிவித்தார்.

இந்நிலையில், அதிகாரிகள் களத்தில் நிலைமையை மதிப்பிட்டு வருவதாகவும், தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் தயாராகி வருவதாகவும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் தெரிவித்துள்ளார்.

“உதவி தேவைப்படும் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக நாங்கள் 24 மணி நேரமும் உழைத்து வருகிறோம்,” என்று மார்கோஸ் கூறினார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவோ பகுதியில் உள்ள மனாய் நகருக்கு அருகில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் பிவோல்க்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்டை நாடான இந்தோனேசியாவும் அதன் வடக்கு சுலவேசி மற்றும் பப்புவா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்ததாக அதன் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

செபு மாகாணத்தில் உள்ள போகோ நகரில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு 71 பேர் உயிரிழந்த நிலையில், பத்து நாட்களுக்குப் பின்னர் இந்த வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் இன்னும் நிலநடுக்கங்கள் உணரப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

The post பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு appeared first on Oruvan.com.

பிலிப்பைன்ஸின் மின்டானோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸின் மின்டானோவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவானதாக சரை்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூர் நேரப்படி இன்று (28) காலை 7.07 மணிக்கு டாவோ ஆக்ஸிடென்டல்(Tao Occidental) மாகாணத்திலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் 101 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் எரிமலையியல் மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் நிலநடுக்கம் குறித்து அறிவித்துள்ளதுடன்,  சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

The post பிலிப்பைன்ஸின் மின்டானோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் appeared first on Oruvan.com.

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே கைது
பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே மணிலா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டேவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக கைது உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து, பிலிப்பைன்ஸ் பொலிஸார் அவரை கைது செய்துள்ளது.

ஹொங்காங்கிலிருந்து வந்த சிறிது நேரத்திலேயே மணிலா விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2016 முதல் 2022 வரை தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியான இருந்தபோது டுடெர்ட்டே மேற்கொண்ட கொடூரமான போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

79 வயதான அவர் கைது செய்யப்படலாம் என்ற செய்திகள் முன்னதாக வெளியாகியிருந்த போது அது குறித்து பதலளிக்கையில், ​​சிறைக்குச் செல்லத் தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், பிலிப்பைன்ஸில் உள்ள மனித உரிமைகளுக்கான சர்வதேச கூட்டணி இந்த கைது நடவடிக்கையை “வரலாற்று தருணம்” என்று அழைத்தது.

எவ்வாறாயினும், இந்த கைது நடவடிக்கையை டுடெர்ட்டேவின் முன்னாள் ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் சால்வடார் பனெலோ, கடுமையாக சாடியுள்ளார், ஏனெனில் பிலிப்பைன்ஸ் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இருந்து விலகியுள்ளதாகவும் இது “சட்டவிரோதமானது” என்றும் அவர் கூறியுள்ளார்.

போதைப்பொருட்களுக்கு எதிரான போர்’

நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றின் முன்னாள் மேயரான டுடெர்ட்டே, குற்றங்களுக்கு எதிராக பரவலான ஒடுக்குமுறையை உறுதிமொழியாகக் கொண்டு ஆட்சிக்கு வந்தார்.

கடுமையான வார்த்தைஜாலங்களுடன், போதைப்பொருள் சந்தேக நபர்களைச் சுட்டுக் கொல்ல பாதுகாப்புப் படைகளைத் திரட்டினார்.

பிரச்சாரத்தின் போது 6,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸாரால் அல்லது தெரியாத தாக்குதல் நடத்தியவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர், ஆனால் உரிமைக் குழுக்கள் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று கூறுகின்றன.

“ஹிட்லர் மூன்று மில்லியன் யூதர்களைக் கொன்று குவித்தார். இப்போது [பிலிப்பைன்ஸில்] மூன்று மில்லியன் போதைக்கு அடிமையானவர்கள் உள்ளனர். அவர்களைக் கொன்று குவிப்பதில் நான் மகிழ்ச்சியடைவேன்,” என்று அவர் பதவியேற்ற சில மாதங்களில் கூறினார்.

ஆனால் அவரது “போதைப்பொருட்களுக்கு எதிரான போர்” பொலிஸ் துஷ்பிரயோகத்திற்கு வழிவகுத்தது என்றும், போதைப்பொருள் சந்தேக நபர்கள் பலர் உடனடியாக தூக்கிலிடப்பட்டனர் என்றும் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

எனினும், குற்றச்சாட்டுகளை டுடெர்ட்டே மறுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே கைது appeared first on Oruvan.com.

ஐந்து கொசுகளை கொண்டுவந்தால் காசு – டெங்கை கட்டுப்படுத்த வித்தியாசமான அணுகுமுறை
பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் வசிப்பவர்கள், நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பல்வேறு வழிகளைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய மணிலாவில் உள்ள ஒரு கிராமம் வித்தியாசமான அணுகுமுறையை எடுத்துள்ளது.

உயிருடன் அல்லது இறந்த ஐந்து கொசுக்களை உள்ளே கொண்டு வருபவர்களுக்கு ஒரு பைசா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிலா குடியிருப்பாளர்களின் கொசு கட்டுப்பாட்டு முயற்சிகளில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிராமத் தலைவர் கார்லிட்டோ செர்னல் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் சுகாதார நடவடிக்கைகளுடன் சேர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரமும் நோய் பரவுவதைத் தடுப்பதில் வெற்றிகரமாக இருந்தது என்று அவர் கூறினார்.

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் நிரப்பப்பட்ட கிண்ணங்கள் மற்றும் கோப்பைகளுடன் கிராமவாசிகள் இப்போது பணத்தைப் பெற ஆர்வமாக உள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக உள்ள நாடு பிலிப்பைன்ஸ் ஆகும்.

2023 ஆம் ஆண்டில் 1,67,355 டெங்கு நோயாளிகள் மற்றும் 575 இறப்புகள் இருந்ததாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. நாட்டில் ஐந்து நகரங்களில் தற்போது டெங்கு பரவி வருகிறது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் முறையாக சுத்தம் செய்யவும், தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

The post ஐந்து கொசுகளை கொண்டுவந்தால் காசு – டெங்கை கட்டுப்படுத்த வித்தியாசமான அணுகுமுறை appeared first on Oruvan.com.