Permission Archives - Oruvan.com

மற்றுமொரு ஈரானியக் கப்பலுக்கு இந்தியா அனுமதி வழங்கியமை குறித்து ஜெய்சங்கர் விளக்கம்
இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரானியப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட நிலையில், மற்றுமொரு ஈரானியக் கப்பலுக்கு இந்தியா அனுமதி வழங்கியமை குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற ‘Raisina Dialogue 2026’ மாநாட்டில் பேசிய அவர், மனிதாபிமான அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ‘MILAN 2026’ பயிற்சியில் பங்கேற்க வந்த இளம் ஈரானியக் கடற்படை வீரர்கள், திடீரென வெடித்த போர்ச் சூழலால் இக்கட்டான நிலையில் சிக்கிக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

உதவி கோரி கொச்சி துறைமுகத்திற்கு வந்த அவர்களுக்கு அடைக்கலம் வழங்கியதை நியாயப்படுத்திய அவர், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலவும் வெளிநாட்டு இராணுவப் படைகளின் ஆதிக்கம் ஒரு யதார்த்தமான உண்மை என்றும் சுட்டிக்காட்டினார்.

சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்டு, ஒரு பொறுப்புள்ள நாடு என்ற ரீதியில் மனிதநேயத்திற்கு முன்னுரிமை அளித்தே இந்தியா இந்த முடிவை எடுத்ததாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மேலும் தெரிவித்தார்.

The post மற்றுமொரு ஈரானியக் கப்பலுக்கு இந்தியா அனுமதி வழங்கியமை குறித்து ஜெய்சங்கர் விளக்கம் appeared first on Oruvan.com.

த.வெ.க. தலைவர் விஜயின் திருச்சி பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு
தமிழகத்தின் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ளிட்ட 04 இடங்களில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் நடத்த திட்டமிட்டிருந்தார்.

ஆனால், தற்போது விஜயின் பிரச்சார கூட்டத்திற்கு பொலிஸார் அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் தொண்டர்களிடையே உரையாற்ற உள்ள நிகழ்வை சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பதில் திருச்சி மரக்கடை, உழவர் சந்தை பகுதியில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக

இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

திருச்சியை தொடர்ந்து அரியலூர், குன்னம், பெரம்பலூர் பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post த.வெ.க. தலைவர் விஜயின் திருச்சி பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு appeared first on Oruvan.com.

துஷார உபுல்தெனியவுக்கு, அவரது சம்பளத்தில் பாதி தொகையை வழங்க அனுமதி
சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த காலப்பகுதியில் அவரது சம்பளத்தில் பாதி தொகையை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று புதன்கிழமை (11) இதனை உறுதிப்படுத்தினார்.

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி சிறைக் கைதி ஒருவரை விடுதலை செய்தமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்டு வரும் விசாரணைகளின் பின்னணியில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டார்.

அவரை நேற்று செவ்வாய்க்கிழமை, புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

The post துஷார உபுல்தெனியவுக்கு, அவரது சம்பளத்தில் பாதி தொகையை வழங்க அனுமதி appeared first on Oruvan.com.