passport Archives - Oruvan.com

உலக அளவில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ள இலங்கை கடவுச்சீட்டு
ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின்படி உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளின் பட்டியில் இலங்கை பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.

இதன்படி, 96வது இடத்தில் இருந்து ஐந்து இடங்கள் முன்னேறி 91வது இடத்தில் இலங்கை கடவுச்சீட்டு தரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நான்கு இடங்கள் முன்னேறியிருந்த இலங்கை கடவுச்சீட்டு இம்முறை ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாடுகளுக்கும் விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய இடங்களைக் கருத்தில் கொண்டு “தி ஹென்லி 2025” ( “The Henley”) கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 42 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சிங்கப்பூர் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்களுக்கு 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என்பதுடன், பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளது.

ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என்பதுடன், இந்த நாடுகள் இரண்டாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளன.

ஏழு ஐரோப்பிய நாடுகள் மூன்றாவது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளன. இதன்படி, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்கள் 189 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓஸ்திரியா, பெல்ஜியம், லக்சம்பர்க், நெதர்லாந்து, நோர்வே, போர்ச்சுகல் மற்றும் ஸ்வீடன் ஆகியவை நாடுகள் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளன. நியூசிலாந்து, கிரீஸ் மற்றும் சுவிட்சர்லாந்துடன் ஐந்தாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறியனும், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இரண்டும் தலா ஒரு இடம் பின்தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் முறையே ஆறாவது மற்றும் 10வது இடங்களில் உள்ளன.

இந்தியா எட்டு இடங்கள் முன்னேறி, 85வது இடத்திலிருந்து 77வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்நாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தற்போது 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உலக அளவில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ள இலங்கை கடவுச்சீட்டு appeared first on Oruvan.com.

கடவுச்சீட்டுடன் தொடர்புடைய சேவைகளுக்கு தரகர்களுக்கு பணம் செலுத்த வேண்டாம் என எச்சரிக்கை
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின், கடவுச்சீட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அல்லது செயன்முறையை விரைவுபடுத்த தரகர்களுக்கு பணம் செலுத்த வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திணைக்களத்தின் வளாகத்திற்குள் அல்லது வெளியே செயற்படும் தரகர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம் என்றும், கடவுச்சீட்டு கட்டணங்களுக்கு பணம் செலுத்தும் இடத்தில்

மாத்திரம் அதனை செலுத்தி உத்தியோகப்பூர்வ பற்றுச்சீட்டினை பெற்றுக்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வழமையான மற்றும் ஒரு நாள் கடவுச்சீட்டு சேவைகளுக்கான டோக்கன் அட்டைகள் தற்போது தினமும் காலை 6:30 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை வழங்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post கடவுச்சீட்டுடன் தொடர்புடைய சேவைகளுக்கு தரகர்களுக்கு பணம் செலுத்த வேண்டாம் என எச்சரிக்கை appeared first on Oruvan.com.

கடவுச்சீட்டு மோசடி – சந்தேகநபர்கள் இருவர் கைது
வெளிநாட்டில் வசிக்கும் “கெலேஹெல்பத்தர பத்மே” என்றும் அழைக்கப்படும் மந்தினு பத்மசிறி பெரேரா என்ற ஒருவருக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை போலியாக தயாரித்தது தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வணிக குற்றங்கள், கடத்தல் மற்றும் கடல்சார் குற்றங்களுக்கான குற்றப் புலனாய்வுத் துறையின் பிரிவின்படி, சந்தேக நபர்கள் மூன்று மோசடி கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு தவறான தகவல்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

32 மற்றும் 51 வயதுடைய சந்தேக நபர்கள் மாளிகாவத்தை மற்றும் எஹெலியகொடவைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் கொஹுவல மற்றும் பத்தரமுல்லையில் புகைப்பட ஸ்டுடியோக்களை நடத்தி வருகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளில், அவர்கள் வாட்ஸ்அப் மூலம் பத்மசிறியின் புகைப்படங்களைப் பெற்று, அவற்றைத் திருத்தி, போலி ஆவணங்களை குடிவரவுத் துறையிடம் சமர்ப்பித்து போலி கடவுச்சீட்டுகளை தயாரித்ததாக தெரியவந்தது.

2014 இல் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி 2021 இல் நாட்டை விட்டு வெளியேறிய பத்மே, அசல் கடவுச்சீட்டு காலாவதியான பின்னர், 2024 இல் வெளிநாட்டில் இருந்தவாறே ஒரு நாள் சேவை மூலம் புதிய கடவுச்சீட்டை மோசடியாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

கூடுதலாக, போலியான புகைப்படங்கள் மற்றும் தரவுகளைப் பயன்படுத்தி 2025 ஆம் ஆண்டில் மேலும் இரண்டு கடவுச்சீட்டுகள் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர்கள் மே 23 அன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்ப்டு மே 29 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். மேலும் விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் துறையின் தொடர்புடைய பிரிவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

The post கடவுச்சீட்டு மோசடி – சந்தேகநபர்கள் இருவர் கைது appeared first on Oruvan.com.

கடவுச்சீட்டு சேவையை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை
கடவுச்சீட்டு வழங்கல் தொடர்பான சேவைகளை விரிவுபடுத்துவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு மொத்தம் 186 அதிகாரிகள் பணியமர்த்தப்படுவார்கள் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திர் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், முன்னர் தினமும் 1,200 புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட போதிலும், தற்போதைய நிர்வாகம் 4,000 கடவுச்சீட்டுகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளதெனவும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், துறைக்குள் குறிப்பிடத்தக்க பணியாளர் பற்றாக்குறை காணப்படுகிறது.

இந்நிலையில் புதிய அதிகாரிகள் விரைவில் திணைக்களத்தில் உள்வாங்கப்படுவார்கள்.

குடிவரவுத் துறையின் தலைமை அலுவலகம் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக 24 மணி நேரமும் செயற்பட்டு வருகின்றது.

கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களும் தற்போது அதிக எண்ணிக்கையிலான புதிய கடவுச்சீட்டுகளை வழங்கி வருகின்றன” என்றார்.

The post கடவுச்சீட்டு சேவையை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை appeared first on Oruvan.com.

ஒருநாள் கடவுச்சீட்டு சேவை மூன்று நாட்களுக்கு நிறுத்தம்
ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் நிறுத்தப்படும் என பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

குறித்த திகதிகளில் ஏனைய சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

The post ஒருநாள் கடவுச்சீட்டு சேவை மூன்று நாட்களுக்கு நிறுத்தம் appeared first on Oruvan.com.