Parliament Archives - Oruvan.com

சட்டத்தரணி சுடப்பட்ட இடம் உயர் பாதுகாப்பு வலயம் இல்லை – பொது பாதுகாப்பு அமைச்சர்
அண்மையில் சட்டத்தரணி மற்றும் அவரின் மனைவி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பகுதி உயர் பாதுகாப்பு வலயம் அல்லவென அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார்.

“சபாநாயகரே இந்தப் பகுதி பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக அந்த நேரத்தில் சில உயர் பாதுகாப்பு வலயங்கள் இருந்திருக்கலாம்.

எனினும், இந்த சம்பவம் இடம்பெற்ற பகுதி தற்போது உயர் பாதுகாப்பு வலயம் அல்ல. பாதுகாப்பு படையினரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூடு நடத்த இடத்தில் இருந்து முப்படைகளின் தலைமையகமும், பாதுகாப்பு அமைச்சகமும் 600 முதல் 700 மீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அது உயர் பாதுகாப்பு வலயம் என்பது பொது மக்களுக்கு கூட தெரியும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை, தலங்கம பொலிஸ் பிரிவின் அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி வாகன நிறுத்தும் இடத்தில் கடந்த 13ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

இதில் சட்டத்தரணி ஒருவரும், அவரின் மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post சட்டத்தரணி சுடப்பட்ட இடம் உயர் பாதுகாப்பு வலயம் இல்லை – பொது பாதுகாப்பு அமைச்சர் appeared first on Oruvan.com.

நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் முக்கிய சட்டச் சீர்திருத்தங்களை கையளித்தார் பைஸர் முஸ்தபா
நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா இலங்கையின் தனிநபர் சட்டங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் இரண்டு முக்கிய தனிநபர் உறுப்பினர் மசோதாக்களை இன்று நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீரவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

இந்த சீர்திருத்தங்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என குறித்த மசோதாவில் தெறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய முன்மொழிவுகள்:

1. திருமண முறிவு: ஒரு திருமண உறவை மீட்டெடுக்க முடியாத நிலையை (Irretrievable breakdown) விவாகரத்துக்கான சட்டபூர்வ காரணமாக அறிமுகப்படுத்துதல் மற்றும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெறுவதற்கான நடைமுறையை உருவாக்குதல்.

2. முஸ்லிம் திருமணச் சட்டச் சீர்திருத்தம்: திருமண வயதை 18 ஆக நிர்ணயித்தல், திருமணப் பதிவேட்டில் மணமகளின் கையொப்பத்தை கட்டாயமாக்கல், தகுதியுள்ள பெண்கள் காதிகளாகப் பணியாற்றுவதற்கான தடையை நீக்கல் மற்றும் காதிகள் அனைவரும் சட்டத்தரணிகளாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்தச் சீர்திருத்தங்கள் சட்டத்தின் முன் சமத்துவத்தை நிலைநாட்டும் ஒரு காலோசிதமான தலையீடு என பைஸர் முஸ்தபா சுட்டிக்காட்டியுள்ளார்.

The post நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் முக்கிய சட்டச் சீர்திருத்தங்களை கையளித்தார் பைஸர் முஸ்தபா appeared first on Oruvan.com.

சிறைச்சாலைகள் 300 வீதம் நிரம்பி வழிகின்றன – நீதி அமைச்சர் தகவல்
நாட்டின் முழு சிறைச்சாலை அமைப்பிலும் 300 வீதம் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நேற்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிறையில் 37,761 கைதிகள் இருந்தாலும், அவர்களில் 27,000 பேர் சந்தேக நபர்கள் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போதைப்பொருள் குற்றங்களுக்கான தடுப்புக்காவல்கள் அதிகரிப்பதே சிறைச்சாலை நெரிசலுக்கு முக்கிய காரணம் என்றும், அபராதம் செலுத்துவதால் சிறைச்சாலை நெரிசல் குறையாது என்றும் அமைச்சர் கூறினார்.

போதைப்பொருள் தொடர்பான கைதிகள் சுமார் 27,000 பேர் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இதற்கான தீர்வுகள் தனது அமைச்சகத்திடம் இருப்பதாகவும், போதைப்பொருள் தொடர்பான தடயவியல் அறிக்கைகளை வழங்குவது துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

தடயவியல் துறைக்கு 50 பேரை நியமிக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அந்த 50 பேரைத் தவிர, மேலும் 32 பேரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தடயவியல் அறிக்கைகளை வழங்குவதை விரைவுபடுத்தாமல் பிணை வழங்குவதை விரைவுபடுத்துவது சாத்தியமற்றது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அவற்றை விரைவாக வழங்குவதன் மூலம் சிறைசாலைகளில் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்புச் சிறைகளில் உள்ள சுமார் 27 ஆயிரம் பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியாது என்றும், நீதி அமைச்சின் கீழ் இருந்த மறுவாழ்வு பணியகம், பொதுப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இரு அமைச்சகங்களும் தற்போது இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

சில நாட்களில், அரசாங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு திட்டத்தின் கீழ் சுமார் 700 பேர் கைது செய்யப்படுவதாகவும், அவர்களில் பெரும்பாலோர் தன்னார்வ மறுவாழ்வு மையங்களுக்கு பரிந்துரைக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்த்ராணி கிரியெல்ல நேற்று (20) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

The post சிறைச்சாலைகள் 300 வீதம் நிரம்பி வழிகின்றன – நீதி அமைச்சர் தகவல் appeared first on Oruvan.com.

நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் – பிரதமர் உறுதி
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முந்தைய குழு அறிக்கைகள் மற்றும் பிற திட்டங்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு வரைவு குறித்த கருத்துரு ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு குறித்து ஆய்வு தொடங்கப்பட்டுள்ளதாகவும், புதிய அரசியலமைப்பை கொண்டு வராமல் அதைச் செய்ய முடியாது என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் – பிரதமர் உறுதி appeared first on Oruvan.com.

நிவாரணம் வழங்குவதில் தீவிர கவனம் செலுத்துங்கள் – நாமல் எம்.பி அரசாங்கத்திடம் கோரிக்கை
அரசாங்கம் இன்னும் தீவிரமாக செயல்பட்டு, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது, ​​பேரிடர் பாதிக்கப்பட்ட பாடசாலை குழந்தைகளுக்கு சீருடைகள் வாங்குவதற்கு நிதி வழங்குவதில் ராஜபக்ச கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“பாடசாலைக் குழந்தைகளுக்கு 25,000 ரூபா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது 15,000 ரூபா மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகள் பாடசாலைக்கு திரும்ப வேண்டியிருப்பதால், இந்த விஷயங்களை ஒருவர் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்,” என்று நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

The post நிவாரணம் வழங்குவதில் தீவிர கவனம் செலுத்துங்கள் – நாமல் எம்.பி அரசாங்கத்திடம் கோரிக்கை appeared first on Oruvan.com.

என்.மொஹமட் தாஹிர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக என்.  மொஹமட் தாஹிர் பதவியேற்றுள்ளார்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இன்று காலை அவர் பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இஸ்மாயில் முத்து மொஹமட் பதவி விலகியதை எடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post என்.மொஹமட் தாஹிர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு appeared first on Oruvan.com.

பேரிடர் நிலை – வரவு செலவுத் திட்ட விவாதம் ஒத்திவைப்பு
பேரிடர் நிலைமை காரணமாக, வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தை நாளை மற்றும் சனிக்கிழமைகளில் நிறுத்தி வைக்க கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக எதிர்க்கட்சியின் தலைமை கொறடா கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

சில அரசாங்க அலுவல்களைக் கவனிப்பதற்காக, சபை நாளை சிறிது நேரத்திற்கு கூட்டப்படும்.

இருப்பினும்,  இந்த இரண்டு நாட்களை ஈடுசெய்யும் வகையில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் டிசம்பர் முதலாம் திகதி மற்றும் டிசம்பர் இரண்டாம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post பேரிடர் நிலை – வரவு செலவுத் திட்ட விவாதம் ஒத்திவைப்பு appeared first on Oruvan.com.

நாடாளுமன்றம், அக்குரேகொட பாதுகாப்பு தலைமையகம் மீது போர்க்கால பறக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை
நாடாளுமன்ற வளாகம் மற்றும் அக்குரேகொட பகுதியில் உள்ள பாதுகாப்பு தலைமையகத்தின் மீது விமானங்கள் பறப்பதற்கான போர்க்கால கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ஜனிதா ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

கொழும்பு சர்வதேச விமான நிலையம் என்றும் அழைக்கப்படும் ரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதற்கான ஒடுபாதையை திறப்பதற்காக, பறக்கத் தடைசெய்யப்பட்ட மண்டலத்தின் தற்போதைய ஒரு கடல் மைல் சுற்றளவைக் குறைப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் அளவை பாதியாகக் குறைக்க பாதுகாப்பு அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக பிரதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றால், பயண நேரத்தைக் குறைத்து தனியார் ஜெட் விமானங்களை ரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் எளிதாக தரையிறக்க அனுமதிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இது மட்டும் போதாது என்றும், இரவு நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கு கருவி தரையிறங்கும் முறையைச் சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“இவை போர்க்காலத்தில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள். இப்போது, ​​ரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் விமான நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக அவற்றைக் குறைக்க பாதுகாப்பு அதிகாரிகளுடன் நாங்கள் விவாதித்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தின் மீது பறக்கத் தடை வலயத்தின் கட்டுப்பாடுகளை நீக்கி ரத்மலானை சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் கொடிதுவக்கு இவ்வாறு கூறினார்.

பறக்கத் தடை வலயத்தின் அளவைக் குறைப்பது தனியார் ஜெட் விமானங்களை விமான நிலையத்தில் தரையிறங்க ஊக்குவிக்கும் என்று ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post நாடாளுமன்றம், அக்குரேகொட பாதுகாப்பு தலைமையகம் மீது போர்க்கால பறக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை appeared first on Oruvan.com.

தேரர்களை அடிக்க பொலிஸாருக்கு உரிமை இல்லை – சஜித் வலியுறுத்து
திருகோணமலை விஹாரை பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், புத்தசாசனத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற பொது பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்பு மீதான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் போது அவர் இவ்வாறு கூறினார்.

திருகோணமலை விஹாரை பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதற்கு தனது கட்சி ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பௌத்த தேரர்களை அடிக்க பொலிஸாருக்கு உரிமை இல்லை என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், புத்த சாசனத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

The post தேரர்களை அடிக்க பொலிஸாருக்கு உரிமை இல்லை – சஜித் வலியுறுத்து appeared first on Oruvan.com.

செவ்வந்தி மூலம் வெளிப்பட்ட அரசியல் தொடர்புகள் – நாடாளுமன்றில் அமைச்சர் தகவல்
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில் அரசியல் தொடர்புகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

பாதாள குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“பாதாள குழுவினருக்கு எதிராக பொலிஸார் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டுவருகின்றனர். இது சிலருக்கு தலைவலியை கொடுத்துள்ளது. அதனால்தான் பொலிஸாரை இலக்கு வைத்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

பாதாள குழுவினருக்கு எதிரான நடவடிக்கை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. பாதாள குழு உறுப்பினர்களுக்கு சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 80 பேருக்கு இவ்வாறு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்களை இந்நாட்டுக்கு கொண்டுவருவதற்குரிய இராஜதந்திர முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செல்வந்தியை கொண்டுவந்து என்ன செய்தீர்கள் என சிலர் கேட்கின்றனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சில அரசியல் தொடர்புகள் பற்றி தகவல்கள் கிடைத்துள்ளன. அது தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும்.” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post செவ்வந்தி மூலம் வெளிப்பட்ட அரசியல் தொடர்புகள் – நாடாளுமன்றில் அமைச்சர் தகவல் appeared first on Oruvan.com.