paper Archives - Oruvan.com

நெஞ்சை தொட்டு சொல்ல வேண்டும்….!
(ஒருவன் நாளிதழின் இன்றைய ஆசிரியர் தலையங்கம்)

ஐக்கிய தமிழர் ஒன்றியம் – யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய கூட்டணி இது. பொதுத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட 17 குழுக்கள் ஒன்றிணைந்து இந்தக் கூட்டணி உருவாகி இருக்கின்றது.

தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார இலக்குகளை மையப் பொருளாக வைத்து முன்னோக்கிப் பயணிக்கப் போவதாக இந்தக் கூட்டணி அறிவித்திருக்கிறது.

“தமிழ் மக்கள் எதிர்பார்த்த இலக்குகளை தமிழ் தேசிய அரசியல்வாதிகள் செய்யவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு. இதன் காரணமாக சுயேச்சை குழுக்களாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தரப்புகளை ஒன்றிணைத்து தமிழ் மக்களின் வாக்குகளை எதிர்காலத்தில் சிதறடிக்காமல் மக்கள் பலத்தினை காட்டுவதற்காக ஒன்றிணைந்துள்ளோம்.” என்ன இவர்கள் யாழ்ப்பாணத்தில் அறிவித்திருக்கிறார்கள்.

நடந்து முடிந்த பொதுத் தேர்தல், தமிழ் தேசிய அரசியலுக்கு நல்ல பாடம் புகட்டி இருக்கிறது என்பது யதார்த்தமான உண்மை. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதித்துவம் வெகுவாக குறைந்துவிட்டது.

தமிழ் தேசியத்தை எண்ணக் கருவாகக் கொண்ட, பிரதிநிதிகளின் எண்ணிக்கை பத்துக்குள் மட்டுப்படுத்தப்பட்டு விட்டது. 20க்கும் மேற்பட்ட எம்பிக்களை கொண்டிருந்த தமிழ் தேசியம், இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

தமிழ்த் தேசியம் தான் இந்தக் கட்சிகளின் கொள்கை. தமிழர் நலனுக்காகவே தங்களை அர்ப்பணித்து அடையாளப்படுத்தியிருக்கும் பேராளுமைகள் நடந்து முடிந்த பொதுத் தேர்தலிலும் போட்டியிட்டார்கள். ஒன்றுபட்ட செயல்பாடு என்பது பூஜ்ஜியமாகவே இருந்தது. தமிழ் தேசியத்தை அடி நாதமாக கொண்டு காலம் காலமாக செயல்பட்ட இந்த கட்சிகள், அதிகார மமதையை இறுக்கிப்பிடித்ததனால் எதிர்பாராத பெறுபேறுகளை தமிழ் இனம் சந்தித்திருக்கிறது.

மூச்சுக்கு மூச்சு தமிழ் தேசியம் என்று பேசுகின்ற இந்த தமிழ்த் தேசியக் கட்சிகள், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காத நிலையும், தன்மானச் சிங்கங்களாக தங்களை காட்டிக் கொண்டதும் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு போனதற்கான ஒரு சில காரணங்களில் சிலவாக இருக்கின்றன.

பாரம்பரிய கட்சி என்று கூறி, தோழமைக் கட்சிகளையும் ஓரங்கட்டி, ஆளப்பிறந்தவர்களாக போலித்தனம் காட்டியதும் தமிழ்த் தேசிய கட்சிகளின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்திருக்கின்றன.

தமிழ்த்தேசியம் என்பது தமிழர்களுக்கான இறையாண்மைமிக்க தேசத்தைப் படைப்பது. அதாவது, தமிழர் பிரதேசத்தை தமிழர்களே ஆள்வது தமிழர்களின் அடிப்படை அரசியல் உரிமை! (Fundamental Political Rights) கோட்பாடாக இதனை பார்க்க முடியும்.

தமிழர்களின் அரசியல், மொழி , கலை, இலக்கியம், பண்பாடு, கல்வி, மருத்துவம், அறிவியல், வாழ்வாதாரம், சமுதாயம், சமூக அமைப்பு, சமூகநீதி, மெய்யியல், தொன்மை….ஆகியவற்றை பாதுகாக்க ஓர் அரசியல் உண்டென்றால் அது தமிழ்த்தேசிய அரசியல். ஆனால், நடந்திருப்பது என்ன..?

இன விடுதலைக்காக ஒரே கொள்கையின் கீழ் செயல்படுகின்ற இந்தத் தமிழ் தேசிய கட்சிகள், பிளவுபட்டு நின்றதனால், மக்களால் தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள். தேர்தல் களம் அதனை நிரூபித்து காட்டி இருக்கிறது.

தமிழ்த் தேசியக் கட்சிகளையும் தமிழர் அரசியலையும் பலவீனப்படுத்த வேண்டும் என்பதில் தென்பகுதி அரசியல் கட்சிகள் காலங்காலமாக முனைப்போடு செயல்பட்டு வந்தன. முடியாமல் போன நிலையிலிருந்து விடுபட்டு இப்போது வெற்றிகண்டு இருக்கிறார்கள் என்பது நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது.

தமிழ் தேசியத்துக்குள் இறுக்கமாக இருந்த தமிழ் மக்கள், குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்கள் – தமிழ் தேசியத்துக்கு எதிரான கட்சிக்கு வாக்குகளை வாரி வழங்கியிருக்கிறார்கள். நடந்து முடிந்த தேர்தலில், இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து மூன்று பிரதிநிதிகளை கொடுத்திருக்கிறார்கள்.

தமிழ்த் தேசிய கட்சிகளுக்குள் நடந்த வெட்டுக் குத்துகளும், ஒற்றுமைப்படாத செயல்பாடுகளும் தமிழ் மக்களை, தமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக திசை திருப்பின. தமிழ்த் தேசிய கட்சிகள் இதனை பொறுப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பொறுப்புக் கூறல் பற்றி சர்வதேச ரீதியில் அரசுக்கு பாடம் புகட்டும் தமிழ்த் தேசியக் கட்சிகள், பொறுப்புடன் நடந்து கொண்டதா..? என்பதை நெஞ்சைத் தொட்டுச் சொல்ல வேண்டும்.

சுயநலத்தோடு செயல்பட்ட இந்த கட்சிகள் எல்லாம், தமிழ்த் தேசியம் பற்றி பேசுவதற்கு அருகதை அற்றவர்கள் என்பதை மக்கள் ஓரளவு தீர்மானித்திருக்கிறார்கள். பிழைப்பு வாதம் பேசுவதை தவிர்த்து, தேசியம் என்ற இலக்கோடு பயணிப்பதற்கு இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறது.

இந்த நிலையில் தான், சுயேச்சைகளின் புதிய ஒன்றியம் தலையெடுத்திருக்கிறது. சுயேச்சையாக போட்டியிட்டவர்கள் எல்லாம், தமிழ்த் தேசிய கட்சிகளை உடைத்து பலவீனப்படுத்துவதற்காக பினாமிகளாக களம் இறக்கப்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் இருக்கின்றன.

யாரோ ஒருவரின் தேவைக்காக, பணம் பெற்று போட்டியில் இறங்கியவர்கள் இவர்கள். தென்பகுதி அரசியல் பிரமுகர்களும் குரோத சிந்தனையோடு இருப்பவர்களும் இதன் பின்னால் இருந்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையானது.

நடந்து முடிந்த தேர்தலிலே ஆயிரக்கணக்கான சுயேச்சைகள் நிறுத்தப்பட்டார்கள். வேட்பாளர்களை பலவீனப்படுத்தும் துரும்புச் சீட்டுகளே இவர்கள் என்றும் சொல்லலாம். வடக்கில் தமிழ் தேசிய கட்சிகளின் வாக்குகள் சிதைவடைந்ததற்கு சுயேச்சைகளும் காரணம்.

இந்த நிலையில், தமிழ் மக்களுக்காக புதிய கூட்டணி உருவாக்குவதாக சுயேச்சைக் குழுக்கள் ஒன்றியம் அறிவித்திருப்பது வேடிக்கையானது.  பிரிந்து பிரிந்து செயல்படுவதில் அர்த்தம் இல்லை. முடிந்தால் எல்லோரும் ஒன்றுபடுங்கள். இல்லையேல் தமிழ் மக்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்.

The post நெஞ்சை தொட்டு சொல்ல வேண்டும்….! appeared first on Oruvan.com.

வடமத்திய மாகாணத்தில் வினாத்தாள் கசிந்த சம்பவம் – ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம்
வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தவணைப் பரீட்சையின் வினாத்தாள் கசிந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

இதன்படி, 06 மற்றும் 07ஆம் தரங்களுக்கான பரீட்சை வினாத்தாள் கசிந்த சம்பவம் தொடர்பிலேயே குறித்த ஆசிரியர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்தார்.

The post வடமத்திய மாகாணத்தில் வினாத்தாள் கசிந்த சம்பவம் –  ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம் appeared first on Oruvan.com.