Pak Afghan war Archives - Oruvan.com

ஆப்கான் – பாகிஸ்தான் போர் வெடித்தது!! காபுல் மீது குண்டு மழை பொழிவு
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வெளிப்படையாகப் போரை அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் கந்தஹார் மீது பாகிஸ்தான் விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நேற்றைய தினம் பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதலை நடத்தியது. பல்வேறு இடங்களைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், பாகிஸ்தான் இராணுவத்திற்குச் சொந்தமான பல்வேறு இராணுவ ஸ்டேஷன்கள் ஆப்கன் வசமாகியுள்ளன. அத்துடன், பல வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே ஆப்கான் மீது பாகிஸ்தான் வெளிப்படையாகப் போரை அறிவித்துள்ளது. காபூல் மற்றும் கந்தஹார் மீது அதிகாலை நேரத்தில் தாக்குதல் நடத்தியது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான போர்ப் பதற்றம் உச்சமடைந்துள்ளது.

காபூலில் குறைந்தது மூன்று இடங்களில் தாக்குதல் நடந்ததை ஆப்கானிஸ்தான் உறுதி செய்துள்ளது. இருப்பினும், ஆப்கன் தலைநகரில் இந்தத் தாக்குதல்கள் எங்கு நடந்தன அல்லது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த உடனடித் தகவல்கள் வெளியாகவில்லை.

பாகிஸ்தான், கந்தஹார் மற்றும் தென்கிழக்கு மாகாணமான பக்தியாவிலும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகத் தாலிபான் அரசு செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்திருந்தார்.

தங்கள் நாட்டின் மீது நடந்த தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தாலிபானுக்கு எதிராக ‘ஆப்ரேஷன் கசாப் லில்-ஹக்’ என்ற நடவடிக்கையைத் தொடங்குவதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லை பகுதிகளில் அண்மையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியிருந்தது. இதில் பலர் கொல்லப்பட்டிருந்தனர். இதுவே இருநாடுகளுக்கும் இடையில் போர் வெடிக்க காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post ஆப்கான் – பாகிஸ்தான் போர் வெடித்தது!! காபுல் மீது குண்டு மழை பொழிவு appeared first on Oruvan.com.