paddy Archives - Oruvan.com

பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
சிறுபோக கொள்முதல் திட்டத்தின் ஒரு பகுதியாக, பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நடவடிக்கைகளை நெல் சந்தைப்படுத்தல் சபை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளது.

அறுவடைப் பகுதியில் ஏற்பட்ட பின்னடைவுகள் காரணமாக கொள்முதல் செயல்முறை தாமதமானதாக சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார்.

அறுவடை தற்போது நடைபெற்று வருவதால், பொலன்னறுவை முழுவதும் சுமார் 15 களஞ்சியசாலைகளில் நெல் கொள்முதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், நெல் சந்தைப்படுத்தல் சபையின் கீழ் சுமார் 300 நெல் களஞ்சியசாலைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடப்பு பருவத்தில் நாடு முழுவதும் மொத்தம் 13 ஆயிரத்து 100 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

The post பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் appeared first on Oruvan.com.

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு இன்று ஆரம்பம்
சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு இன்று வியாழக்கிழமை (03.06.2025) ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாட்டரிசி நெல் ஒரு கிலோகிராம் 120 ரூபாவிற்கும் சம்பா நெல் ஒரு கிலோகிராம் 125 ரூபாவிற்கும் கீரிசம்பா நெல் ஒரு கிலோகிராம்

132 ரூபாவிற்கும் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார்.

இதற்காக கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 06 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நெல் அறுவடை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக

நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக இந்த மாவட்டங்களுக்கான நெற்கொள்வனவை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல்  சபை

மேலும் தெரிவித்துள்ளது.

The post சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு இன்று ஆரம்பம்  appeared first on Oruvan.com.

நெல் சந்தைப்படுத்தல் சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி
1971 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க நெல் சந்தைப்படுத்தல் சபைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

நெல் மற்றும் அரிசியின் சட்டவிரோத இருப்பு மற்றும் சேமிப்பை ஒழுங்குபடுத்துவதற்கான உரிம முறையை அறிமுகப்படுத்துவதோடு தொடர்புடையது.

இந்த முன்மொழிவை வேளாண்மை மற்றும் கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்துள்ளார்.

நெல் சந்தைப்படுத்தல் சபைச் சட்டம் இயற்றப்பட்டு 54 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அதில் திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அது காலாவதியான சட்டமாகவே செயற்படுத்தப்படுகிறது என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நெல் சந்தைப்படுத்தல் சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி appeared first on Oruvan.com.

துப்புரவு செய்யப்படும் நெல் களஞ்சியசாலைகள்
அரசாங்கத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்துடன் இணைந்து பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பல வருடங்களாக கைவிடப்பட்டிருந்த ஹிகுரக்கொட சதொச நெல் களஞ்சியசாலை வளாகத்தை புனரமைக்கும் பணியின் முதற்கட்டமாக, வளாகத்தை சுற்றி துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் நெல் கொள்வனவு திட்டத்திற்காக களஞ்சியசாலைகளை தயார்படுத்தும் நோக்கில் சதொசவின் புதிய தலைவர் கோசல வில்பாவவின் மேற்பார்வையின் கீழ், ஹிகுரக்கொட பிரதேச செயலகம், நெல் சந்தைப்படுத்தல் சபை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பிற அரசு நிறுவனங்கள், விவசாய அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் உள்ளூர்வாசிகளின் பங்கேற்புடன் இந்த துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தவிர பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மசிறி பண்டார மற்றும் சுனில் ரத்னசிறி ஆகியோரும் இதில் இணைந்து கொண்டனர்.

மேலும், இதன் அடுத்த கட்ட பணிகளை ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

The post துப்புரவு செய்யப்படும் நெல் களஞ்சியசாலைகள் appeared first on Oruvan.com.

நெல்லை கொள்வனவு செய்ய தயாராகும் அரசாங்கம்!
அரசாங்கத்திற்கு தேவையான நெல் கையிருப்பை பேணும் நோக்கில் ஜனவரி மாதம் மூன்றாம் வாரம் தொடக்கம் நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, அறுவடை செய்யவுள்ள பெரும்போகத்தில் மூன்று இலட்சம் மெட்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபை கூறியுள்ளது.

இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் நெல்லானது, அரவாங்கத்தின் கையிருப்பாக வைக்கப்படும் எனவும், சந்தையில் கடும் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் அவை விடுவிக்கப்படும் எனவும் நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

The post நெல்லை கொள்வனவு செய்ய தயாராகும் அரசாங்கம்! appeared first on Oruvan.com.