P.Sathiyalingam Archives - Oruvan.com

வவுனியாவில் நான்கு சபைகளையும் ஆட்சி அமைக்க தமிழ் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு
வவுனியாவிலுள்ள ஜந்து சபைகளில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேசபை தவிர்ந்த ஏனைய நான்கு சபைகளான வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெங்களசெட்டிக்குளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளையும் ஆட்சியமைக்கும் கட்சி தலைமைகளுக்கு இடையிலான விசேட கூட்டம் வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று (15.06.2025) காலை 11.00 மணி தொடக்கம் 12.30 மணி வரை இடம்பெற்றிருந்தது.

தமிழரசுகட்சி, ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட றிசாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சுயேட்சைக்குழு ஆகியவற்றின் பிரநிதிகளிற்கிடையில் பொது நோக்கம் ஒன்றை அடிப்படையாக கொண்டு வவுனியாவில் உள்ள நான்கு சபைகளிலும் இணைந்து ஒரு நிர்வாகத்தை உருவாக்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியா மாநகரசபையில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு மாநகர முதல்வர் பதவியும், பிரதி முதல்வர் பதவி ஜனநாயக தேசிய கூட்டணிக்கு முதல் இரண்டு வருடங்களுக்கும், அடுத்த இரு வருடங்களுக்கு இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தவிசாளர் பதவி தமிழரசு கட்சிக்கும், உபதவிசாளர் பதவி ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

உபதவிசாளர் பதவியை இரண்டு வருடங்களுக்கு பகிர்வது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசியகூட்டணிக்கும், ஜக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட றிசாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேசசபையில் தமிழரசுக்கட்சிக்கு தவிசாளர் பதவியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு உபதவிசாளர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வெங்களசெட்டிகுளம் பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட றிசாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு தவிசாளர் பதவியும், தமிழரசுக்கட்சிக்கு உப தவிசாளர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், றிசாட் பதியூதீன், முத்து முகமது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

The post வவுனியாவில் நான்கு சபைகளையும் ஆட்சி அமைக்க தமிழ் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு appeared first on Oruvan.com.