outages Archives - Oruvan.com

61,000 இற்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவு
இன்று பிற்பகல் 03 மணியுடன் நிறைவடைந்த 43 மணி நேரத்திற்குள் இலங்கையில் 61,000 இற்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளை பாதித்த பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக இந்த இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட 23,227 இடங்களில் ஏற்கனவே மின் விநியோகம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.

பாதகமான வானிலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அதிக எண்ணிக்கையிலான மின் தடைகள் பதிவாகியுள்ளன.

மீதமுள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரத்தை மீட்டெடுக்க தொடர்ச்சியான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விமலரத்ன தெரிவித்தார்.

மறுசீரமைப்பு முயற்சிகளின் போது வைத்தியசாலைகள் உட்பட அத்தியாவசிய சேவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுவதாக அவர் வலியுறுத்தினார்.

நாளொன்றுக்கு நாட்டில் 4,500 மின் தடைகளின் பதிவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 61,000 இற்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவு appeared first on Oruvan.com.

மின் துண்டிப்பு தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் – சஜித்
மின் துண்டிப்பு  மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் பொறுப்பான அமைச்சர் உடனடியாக கருத்து தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான பதில்களை நாடே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது. மின் துண்டிப்பு தொடர்ந்து நடக்குமா? அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா? போன்ற பிரச்சினைகளுக்கு பதில் வழங்கப்பட வேண்டும்.

இந்த மின் துண்டிப்பு குறித்து இந்த சபையில் அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும். பிரதான செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளாகி வருகின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கூட நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்த ஞாயிற்றுக்கிழமையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி உற்பத்திக்கு ஏற்ப விநியோகம் இடம்பெறாவிட்டால் மின் தடை ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. இது தொடர்பில் அரசாங்க தரப்பில் பதில் வழங்க வேண்டும்.

புதிய உற்பத்தி ஆலைகளைத் திறந்து சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேலும் குரங்குகள் மீது பழி போட வேண்டாம்” என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

The post  மின் துண்டிப்பு  தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் – சஜித் appeared first on Oruvan.com.

இவ்வாண்டில் அதிகரித்துள்ள மின் துண்டிப்புகள்
நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்புகள் அதிகரித்துள்ளதாக மின்சாரப் பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் ஜூன் மாதம் வரையில் மின் துண்டிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதாக மின்சாரப் பாவனைனயாளர்கள் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் தரவுகளின்படி , 2023ஆம் ஆண்டில் உரிய நேரத்தில் பணத்தை செலுத்தாமையினால் 970,933 மின் துண்டிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சஞ்சீவ தம்மிக்க சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் ஜூன் மாதம் வரையில் 628,286 மின் துண்டிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 505,949 வீடுகள், 8,579 தொழிற்சாலைகள், 2,090 வழிபாட்டுத் தலங்கள், 39 ஹோட்டல்கள், 359 பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் 111,276 கடைகள் மற்றும் ஏனையவை உள்ளடங்குவதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி,கடந்த ஆண்டில் நாள் ஒன்றுக்கு 2,660 மின் துண்டிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இவ்வாண்டில் நாளொன்றுக்கு 3,443 மின் துண்டிப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

The post இவ்வாண்டில் அதிகரித்துள்ள மின் துண்டிப்புகள் appeared first on Oruvan.com.